Published:Updated:

ஆந்திராவில் விவசாயிகளுக்கு இலவச ஆழ்துளைக் கிணறுகள்! தமிழ்நாட்டில் சாத்தியமா?

கிணறு

விவசாயிகளுக்கான இலவச போர்வெல் திட்டத்துக்குப் பெயர் ஒய்.எஸ்.ஆர் ஜலகலா திட்டம் (YSR Jala Kala scheme). இதன் மூலம், மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட 1.72 லட்சம் விண்ணப்பங்களில் இருந்து முதற்கட்டமாக 11,000 ஆழ்துளைக் கிணறுகள் 371 மண்டலங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

ஆந்திராவில் விவசாயிகளுக்கு இலவச ஆழ்துளைக் கிணறுகள்! தமிழ்நாட்டில் சாத்தியமா?

விவசாயிகளுக்கான இலவச போர்வெல் திட்டத்துக்குப் பெயர் ஒய்.எஸ்.ஆர் ஜலகலா திட்டம் (YSR Jala Kala scheme). இதன் மூலம், மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட 1.72 லட்சம் விண்ணப்பங்களில் இருந்து முதற்கட்டமாக 11,000 ஆழ்துளைக் கிணறுகள் 371 மண்டலங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

Published:Updated:
கிணறு

பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்துக்கு நிலத்தடி நீர் ஆதாரங்களை நம்பியே உள்ளனர். ஆனால், சிறு குறு விவசாயிகளால் செலவு செய்து தங்கள் நிலங்களில் ஆழ்துளைக் கிணறு (போர்வெல்) அமைத்துக்கொள்ள முடிவதில்லை. எனவே, அரசே ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நீண்ட காலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர அரசு தங்கள் மாநில விவசாயிகளின் இந்தக் கோரிக்கையை பரிசீலித்து, அவர்களுக்கு இலவசமாக ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தை 2020-ல் அறிவித்தது.

கிணறு (File Pic)
கிணறு (File Pic)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விவசாயிகளுக்கான இலவச போர்வெல் திட்டத்துக்குப் பெயர் ஒய்.எஸ்.ஆர் ஜலகலா திட்டம் (YSR Jala Kala scheme). ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இத்திட்டத்தைத் தொடங்கி வைக்க, விவசாயிகள் அதற்கு எதிர்பார்ப்புடன் விண்ணப்பித்தனர். இதன் மூலம், மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட 1.72 லட்சம் விண்ணப்பங்களில் இருந்து முதற்கட்டமாக 11,000 ஆழ்துளைக் கிணறுகள் 371 மண்டலங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து ஆந்திர அரசு அதிகாரிகள் தெரிவிக்கையில், ``நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் பெறப்பட்ட 2.08 லட்சம் விண்ணப்பங்களில் சுமார் 1.72 லட்சம் விண்ணப்பங்களுக்கு அரசு அனுமதி அளித்தது. ஆழ்துளைக் கிணறு தோண்டும் நிறுவனம் நிலத்தடி நீரை கணக்கெடுத்து சுமார் 34,726 விண்ணப்பங்களைத் தேர்வு செய்தது. தற்போது 11,000 போர்வெல்களை 371 மண்டலங்களில் அமைத்துள்ளது.

விவசாயம்
விவசாயம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக நல்ல மழை பெய்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், தண்ணீர் நன்றாகக் கிடைக்கும் என்று நம்புகிறோம். மேலும், விவசாயிகளுக்கு உதவும் வகையில், கோடைக்காலத்திலும் இந்தத் திட்டத்தை அமல்படுத்த உள்ளோம். அடுத்தகட்ட போர்வெல் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்" என்று கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறுகள் அமைத்துக் கொடுக்கும் ஆந்திர அரசின் இந்த முன்னெடுப்பை குறித்தும், தமிழகத்தில் இது போன்ற திட்டம் செயல்படுத்தலாமா என்பது குறித்தும் மூத்த பொறியாளர் முனைவர் வீரப்பனிடம் பேசியபோது, ``சுமார் 30 வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கப்பட்டது. எல்லா மாவட்டங்களிலும் குறிப்பாக, மேற்கு மாவட்டங்களின் பகுதிகளில் போர்வெல் 1000 அடிக்கு மேல் நிலத்தடி நீரை உரிஞ்சு எடுத்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் 38 மாவட்டங்களில் 30 மாவட்டத்துக்கும் மேலே நிலத்தடி நீரை தேவையைவிட அதிகமாகவே எடுத்தாயிற்று. இந்த நிலையில் தமிழக அரசு ஆந்திராவைப்போல பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.

வீரப்பன்
வீரப்பன்

சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் ஜல ஏக்னா என்ற திட்டத்தின் மூலம் நீர் பாசனத் திட்ட வசதிகளைச் செய்துள்ளனர். அவர்கள் இலவச மின்சாரம் கொடுக்காமல் இருந்திருக்கலாம். அதனால் அங்கே போர்வெல் அதிகமாக இல்லாமல் இருக்கலாம். மேற்பரப்பு நீரையே அவர்கள் உபயோகித்திருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டின் நிலைமைக்கும் ஆந்திராவுக்கும் வித்தியாசம் உண்டு. யுனெஸ்கோவில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 22-ம் தேதியை `உலக தண்ணீர் தின'மாகக் கொண்டாடுகின்றனர். இந்த வருடத்துக்கான கருப்பொருளே Groundwater: Making the Invisible Visible என்பதே.

தமிழ்நாட்டில் நிலத்தடி நீரின் நிலை மோசமாக உள்ளது. தமிழ்நாட்டில் இது போன்ற திட்டத்தைச் செயல்படுத்த தேவையில்லை'' எனக் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism