Published:Updated:

3,204 கிராம பஞ்சாயத்துக்களில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி?

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ( Photo: Vikatan / Muthukumar.A )

பஞ்சாயத்தின் கீழ் உள்ள சிற்றூர் உட்பட அனைத்து பகுதிகளையும் கிராம நிர்வாக அலுவலருடன் ஆய்வு செய்து, தொகுப்பாக 10 முதல் 15 ஏக்கர் வரை உள்ள தரிசு நிலங்களை சர்வே எண் வாரியாக கண்டறிந்து தொகுப்பாக அமைக்கப்படுகிறது.

3,204 கிராம பஞ்சாயத்துக்களில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாயத்தின் கீழ் உள்ள சிற்றூர் உட்பட அனைத்து பகுதிகளையும் கிராம நிர்வாக அலுவலருடன் ஆய்வு செய்து, தொகுப்பாக 10 முதல் 15 ஏக்கர் வரை உள்ள தரிசு நிலங்களை சர்வே எண் வாரியாக கண்டறிந்து தொகுப்பாக அமைக்கப்படுகிறது.

Published:Updated:
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ( Photo: Vikatan / Muthukumar.A )

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 2022 - 2023 -ம் ஆண்டில் சுமார் 3,204 கிராம பஞ்சாயத்துகளில் இத்திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில், ``கிராம அளவில் ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டும் நோக்கில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021 - 2022 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியும், அதன் மூலம் தன்னிறைவு அடைவதே இத்திட்டத்தின் நோக்கம்.

Village life
Village life
Vijayakumar.M

ஒவ்வொரு ஆண்டும் இதற்காகக் கிராமங்கள் தேர்வு செய்யப்படும் நிலையில், 2021 -22 -ஆம் ஆண்டில் 1,997 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டது. தற்போது 2022 - 23 நடப்பு ஆண்டில் 3,204 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு, ஆரம்பக் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

பஞ்சாயத்தின் கீழ் உள்ள சிற்றூர் உட்பட அனைத்து பகுதிகளையும் கிராம நிர்வாக அலுவலருடன் ஆய்வு செய்து, 10 முதல் 15 ஏக்கர் வரை உள்ள தரிசு நிலங்களை சர்வே எண் வாரியாக கண்டறிந்து தொகுப்பாக அமைக்கப்படுகிறது. ஒரு கிராம பஞ்சாயத்தில் அதிக தரிசு நிலங்கள் இருக்கும் பட்சத்தில் அவை ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுப்புகளாக அமைக்கப்படுகிறது.

மேலும் 10 ஏக்கருக்குக் குறைவாக உள்ள தரிசு நிலங்கள் தேசிய வளர்ச்சித்திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மரக்கன்றுகள்
மரக்கன்றுகள்

தொகுப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தரிசு நிலத்தில், பாசன ஆதாரத்திற்காக புதிய ஆழ்துளைக் கிணறு அமைப்பது, விவசாயிகளுக்குத் தொடர்ந்து வருமானம் கிடைக்க, தோட்டக்கலை பழ மரப்பயிர்கள், ஊடுபயிராகச் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடி செய்ய வழிவகை செய்யப்படுகிறது.

அதோடு ஏரி, குளம், வரத்துக் கால்வாய்கள் தூர் வாருதல், பண்ணை குட்டைகள் அமைத்தல் மற்றும் மரக்கன்றுகள் அடங்கிய மானிய தொகுப்புகளும் விநியோகிக்கப்படுகின்றது. இதற்காக இப்பணிகளைத் திறம்படச் செய்ய ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துக்கும் ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்படுவார்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் பெயரை உழவன் செயலி அல்லது www.tnagrisnet.tn.gov.in அல்லது www.tnhorticulture.tn.gov.in அல்லது www.mis.aed.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.