Published:Updated:

மண்புழு உரம், பிண்ணாக்கு, தொழு உரம் தயாரிப்பில் ஈடுபடுபவர்களுக்கு வங்கிக் கடன்; - வேளாண்மைத்துறை!

கடனுதவி வழங்கும் விழா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகமாக 5,383 பயனாளர்களுக்கு ரூ.344.53 கோடி கடன் வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள் முறையாகப் பயன்படுத்திக்கொண்டால் விவசாயத்தில் முதலீடு செய்து நல்ல லாபம் காணலாம்.

மண்புழு உரம், பிண்ணாக்கு, தொழு உரம் தயாரிப்பில் ஈடுபடுபவர்களுக்கு வங்கிக் கடன்; - வேளாண்மைத்துறை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகமாக 5,383 பயனாளர்களுக்கு ரூ.344.53 கோடி கடன் வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள் முறையாகப் பயன்படுத்திக்கொண்டால் விவசாயத்தில் முதலீடு செய்து நல்ல லாபம் காணலாம்.

Published:Updated:
கடனுதவி வழங்கும் விழா

தமிழ்நாடு அரசின் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படுத்தப்படுகிற இத்திட்டம் குறித்து காஞ்சிபுரம், மாவட்ட வேளாண்துறையின் இணை இயக்குநர் இளங்கோவனிடம் கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது,

விவசாய நிலம்
விவசாய நிலம்

``விவசாயம் லாபகரமான தொழில் அல்ல என்கிற கருத்து பரவலாக இருக்கிறது. இந்நிலையில், விவசாய உற்பத்தியைப் பெருக்க வேண்டுமெனில், விவசாயிகளுக்கான நிதி உதவி நிச்சயம் தேவை. அதன் அடிப்படையில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே விவசாயத்தின் பல்வேறு விதமான உற்பத்திகளுக்கு இந்தியன் வங்கித் தலைமையில் கடன் வழங்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இளங்கோவன்
இளங்கோவன்

மண்புழு உரம், பிண்ணாக்கு உற்பத்தி, தொழு உரம் போன்ற பயிர்/விலங்கு கழிவுப் பயன்பாடு, தேனீ வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு போன்ற சுற்றுச்சூழல் சார்புடைய உற்பத்தி, காளான் வளர்ப்பு, குதிரை வளர்ப்பு, முயல் வளர்ப்பு போன்ற இருப்பிடச்சார்பு கொண்ட உற்பத்தி, மீன் வளர்ப்பு போன்ற நீர் சார்பு உற்பத்தி, உயிர்வேலி பராமரிப்பு, வீட்டுக்கூரை பயன்பாடு, தீவனம் தரும் தொழில்கள், பால் சார் தொழில்கள், தென்னை மரம் சார் தொழில்கள் எனப் பல வகைப்பட்ட வேளாண் சார் தொழில்களுக்கு முதலீடாக வங்கிகளில் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதை விவசாயிகள் முறையாகப் பயன்படுத்திக்கொண்டால் விவசாயத்தில் முதலீடு செய்து நல்ல லாபம் காணலாம். வருமானமுள்ள தொழிலாகத்தான் விவசாயம் இருக்கிறது என்கிற நம்பிக்கையை ஆழமாகப் பதிக்க முடியும்" என்றார் இளங்கோவன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுயதொழில் முனைவோருக்கான கடன் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பேசியதாவது, ``சுய தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டே இந்தக் கடனுதவி செய்யும் திட்டத்தை வங்கிகளுடன் இணைந்து தமிழக அரசு முன்னெடுத்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 5,383 பயனாளர்களுக்கு 344.53 கோடி கடன் வழங்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தைவிடவும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் அதிக அளவில் வழங்கப்படுகிறது. இந்த நல்ல வாய்ப்பை சுய தொழில் முனைவோர்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். ஒட்டுமொத்தத் தொகையில் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு மட்டும் 166 கோடி வழங்கப்படுகிறது. விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செயல்பாடுதான் இது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி

அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை அனைவரும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். சுய தொழில் மூலமாக வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். விவசாயத்துக்கு அது சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. விளைபொருள்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக்கி லாபம் பார்க்க முடியும். கடன்பெற்று புதிய தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு விவசாயம் மற்றும் அது சார் தொழில்களில் ஈடுபட்டு லாபம் ஈட்ட முடியும். முறையாகக் கடனைத் திரும்பச் செலுத்தினால் சிபிள் ஸ்கோர் உயரும். உங்களுக்கு மேலும் கடன் வழங்கப்படும்" என்று கூறினார் காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism