விவசாயிகளுக்கு வங்கிகள்மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்களில் ஒன்று `கிஸான் கிரெடிட் கார்டு’ எனப்படும் உழவர் கடன் அட்டைத் திட்டம். வங்கிகளில் வட்டி மானியத்தோடு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவந்த நகைக்கடன் திட்டம், சமீபத்தில் ரத்துசெய்யப்பட்டிருக்கும் நிலையில், `கிஸான் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்றுக்கொள்ளலாம்’ என்று மத்திய அரசும் மாநில அரசும் அறிவித்துள்ளன. ஆனால், ``பெரும்பாலான வங்கிகள் கிஸான் கிரெடிட் கார்டைக் கொடுப்பதில்லை’’ என்று குற்றம்சாட்டுகிறார்கள் தமிழக விவசாயிகள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், ``ஆர்.பி.குப்தா ஆய்வறிக்கையின்படி, 1998-ம் ஆண்டில் விவசாயிகள் நேரடியாகப் பயன்பெறும் வகையில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப் பட்ட திட்டம், கிஸான் கிரெடிட் கார்டு திட்டம். இதன்மூலம் விவசாயிகள் விளைவிக்கும் பயிர்களுக்கு ஏற்ப அவர்கள் வங்கியில் கடன் பெறலாம். இந்தத் திட்டத்தில் மத்திய அரசு தற்போது சில மாற்றங்களைச் செய்திருக்கிறது. விவசாயிகளின் பணப்பரிவர்த்தனைகள் அனைத்தையும் இந்த அட்டையின்கீழ் கொண்டுவருவதற்கான முயற்சியிலும் மத்திய அரசு இருக்கிறது. அதனால், தகுதியுள்ள விவசாயிகள் அனைவருக்கும் இந்தக் கடன் அட்டையை வழங்க வேண்டும் என வலியுறுத்திவருகிறது.

தகுதியுடைய விவசாயிகளுக்கு இந்தக் கடன் அட்டைக்கான விண்ணப்பத்தைத் தமிழக வேளாண்மைத் துறை வழங்கிவருகிறது.

இந்தக் கடன் அட்டைமூலம் எந்தவிதப் பிணையும் இல்லாமல் 10,000 ரூபாய் முதல் 1,60,000 ரூபாய் வரை வங்கிகளில் கடன் பெறலாம்.

உரக்கடைகளில் `ஸ்வைப்’ செய்து இடுபொருள்கள், விதை போன்றவற்றை வாங்க முடியும். குறித்த காலத்துக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தினால், வட்டியில் மூன்று சதவிகிதம் தள்ளுபடி உண்டு. விவசாயிகளுக்குப் பலவிதங்களிலும் பலன் கொடுக்கக்கூடிய இந்தத் திட்டம், இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

அனைத்து ஆவணங்களுடன் வங்கிக்குச் சென்று கேட்டால், `கடன் அட்டை தொடர்பான முழுமையான உத்தரவு எங்களுக்கு வரவில்லை’ என்று சொல்லி விண்ணப்பங்களை வாங்க மறுக்கின்றனர். சில வங்கிகளில், `முன்பு விவசாயக் கடன் வாங்கி முறையாகத் திருப்பிச் செலுத்தியிருப்பவர்கள் மட்டும்தான் இந்தத் திட்டத்தில் சேர முடியும்’ என்று சொல்கின்றனர். சில வங்கிகளில், `மற்ற வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் கடன் இல்லை’ எனும் சான்றிதழை வாங்கி வரச் சொல்கிறார்கள். இப்படிப் பல்வேறு காரணங்களைச் சொல்லி அலைக்கழிக்கிறார்களே தவிர, கடன் அட்டையைக் கொடுப்பதில்லை. மேலும், `பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதித் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 6,000 ரூபாய் ஊக்கத்தொகை வாங்கும் விவசாயிகளுக்கு மட்டும்தான் முன்னுரிமை’ என்று சொல்லி, தகுதியுடைய விவசாயிகளைப் புறக்கணிக்கின்றனர். வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் சொன்னால், `விண்ணப்பம் கொடுப்பது மட்டும்தான் எங்கள் வேலை’ என்கின்றனர்.

வட்டி மானியத்துடன் வழங்கப்பட்டுவந்த விவசாய நகைக்கடன் திட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில், கிஸான் கிரெடிட் கார்டு மூலம்தான் விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். அதனால், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, தகுதியுடைய அனைத்து விவசாயிகளுக்கும் இந்த உழவர் கடன் அட்டை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார்.

தஞ்சை மாவட்டக் காவிரி விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன், ``விவசாயிகளுக்கு அதிக பயன் கொடுக்கக்கூடிய இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வங்கிகளுக்கு மனமில்லை என்பதுதான் உண்மை. விவசாயியின் செல்போன் எண்ணைவைத்தே, சிபில் ரிப்போர்ட் மூலம் விவசாயி பெற்றுள்ள கடன் விவரங்களை வங்கிகளால் திரட்ட முடியும். ஆனால், வேண்டுமென்றே மற்ற வங்கிகளில் சான்றிதழ் வாங்கி வரச் சொல்லி அலையவிடுகிறார்கள். மத்திய அரசும் மாநில அரசும் வெறும் அறிவிப்போடு நிறுத்திவிடாமல், ஒரு கண்காணிப்புக் குழுவை உருவாக்கி, இந்தத் திட்டம் விவசாயிகளைச் சென்றடைகிறதா என ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அத்துடன், இன்னும் இந்தக் கடன் அட்டைத் திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும். குத்தகை விவசாயிகளுக்கும் இந்தக் கடன் அட்டை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்துத் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் பேசினோம். ``மற்ற வங்கிகளில் கடன் இல்லை என்று சான்றிதழ் வாங்கி வரச் சொல்வது வழக்கமான நடைமுறைதான். இருந்தாலும், விவசாயிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து எங்கள் துறையின் முதன்மைச் செயலாளரிடம் பேசி, குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன்’’ என்றார்.

விவசாயிகளின் பிரச்னைகளுக்கு விரைவில் விடிவு பிறக்கட்டும்!