Published:Updated:

‘விருது கொடுத்த அரசே வேதனை கொடுக்கலாமா?’

பயிர் மேலாண்மை
பிரீமியம் ஸ்டோரி
பயிர் மேலாண்மை

சிறந்த நீர் மேலாண்மை கிராமத்தின் கண்ணீர் குரல்!

‘விருது கொடுத்த அரசே வேதனை கொடுக்கலாமா?’

சிறந்த நீர் மேலாண்மை கிராமத்தின் கண்ணீர் குரல்!

Published:Updated:
பயிர் மேலாண்மை
பிரீமியம் ஸ்டோரி
பயிர் மேலாண்மை

பிரச்னை

சிவகங்கை வறட்சி மாவட்ட வரிசையில் கணக்கிடப்படுகிறது. இருப்பினும் பல்வேறு சவால்களைத் தாண்டி விவசாயத்தில் சாதனை படைத்து வருகிறார்கள் விவசாயிகள்.

குறிப்பாக, வேப்பங்குளம் கிராமம் நீர் மேலாண்மை, பயிர் மேலாண்மை, சந்தைப்படுத்துதல் எனப் பல விஷயங்களில் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. அரசிடம் ‘சிறந்த நீர் மேலாண்மை கிராமம்’ என்ற விருதையும் பெற்றுள்ளது. இந்நிலையில், நீராதாரத்துக்கு வேட்டு வைக்கும் பணி நடந்து வருகிறது. விவசாயிகளுக்குப் பல்வேறு வகையில் நம்பிக்கை கொடுக்கும் வேப்பங்குளம் கிராமத்தின் விவசாய வேர் அறுபடப்போகிறது எனக் கண்ணீர் வடிக்கிறார்கள் விவசாயிகள். இந்தக் கிராமத்தில், தனியார் நிறுவனம் ஒன்று சூரிய மின்சார ஆலையை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது. அந்தத் திட்டம் நீர்வரத்துக் கால்வாய்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் அமையவுள்ளது என்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருச்செல்வம்
திருச்செல்வம்

இது குறித்துப் பேசிய வேப்பங்குளத்தைச் சேர்ந்த மென்பொறியாளரும் அங்கு மக்கள் பங்களிப்புடன் பல்வேறு நீர் மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்தி வருபவருமான திருச்செல்வம், “எங்கள் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சம் ரூபாய் செலவில் சீமைக்கருவேல மரங்களை அழித்து, நீர்வரத்துக் கால்வாயைச் சரி செய்தோம். அதனால் நீர் ஆதாரங்கள் உயிர் பெற்றன. இதனால் 2 மழைக்கே 60 சதவிகிதத் தண்ணீரை எங்களால் சேமிக்க முடிந்தது. அதுவரை முள்காடாக இருந்த இடங்களில் நெல் விளைய வைத்தோம். முதல் கட்டமாக 250 ஏக்கரில் நெல் விளைந்தது. இந்த ஆண்டு 40,000 ரூபாய் செலவில் மாவட்ட நிர்வாகத்தின் உதவியோடு 3 வரத்துக் கால்வாய்கள் சரிசெய்யப் பட்டன. இதனால் எங்கள் ஊரில் கண்மாய், குளம் உள்ளிட்ட 8 நீர் ஆதாரங்களும் நிரம்பி மறுகால் பாய்ந்தது. சிறந்த நீர் மேலாண்மை காரணமாக எங்கள் ஊரில் அருகிப்போன விவசாயத்தை மீட்டெடுத்து விளைய வைத்தோம். நல்ல மழைப்பொழிவால் பல இடங்களில் நெல் விளைந்ததால் மூட்டைகள் தேக்கமடைந்தன. இதைச் சரிசெய்ய வேப்பங்குளம் இளைஞர்கள் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளைக் கூடுதல் விலைக்கு வாங்கி, நல்ல லாபத்துக்கு விற்பனை செய்தனர். இதனால் எங்கள் கிராமத்தில் நெல் உற்பத்தி செய்த விவசாயிகள் உற்சாகமடைந்தனர். மாவட்ட நிர்வாகம் எங்கள் செயல்பாட்டைப் பாராட்டி நேரடி கொள்முதல் நிலையமும் அமைத்துக் கொடுத்தது. இதனால் வேப்பங்குளம் மட்டுமல்லாமல் அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் பயனடைந்தன. அதனால் 200 விவசாயிகள் இடைத்தரகர்கள் கையில் சிக்காமல் தங்கள் விளைபொருளுக்கான விலையை நேரடியாகப் பெற்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
திருச்செல்வம்
திருச்செல்வம்

இப்படி நீர் மேலாண்மை, பயிர் மேலாண்மை, சந்தைப்படுத்துதல் என, எங்கள் கிராமத்துக்கெனத் தனிவழி அமைத்து, சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். இந்நிலையில் விவசாயத்தைப் பிரதானமாக நம்பி இருக்கும் வேப்பங்குளத்தின் அடிமடியில் கைவைக்கும் செயலாக 350 ஏக்கரில் சூரிய மின்சார ஆலையை அமைக்கத் தனியார் நிறுவனம் ஒன்று முயன்று வருகிறது. இந்தத் திட்டம் பற்றிக் கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் எங்களுக்குத் தெரியவந்தது. இந்த ஆலை கிராம நீர்நிலைகளுக்கான முக்கிய வரத்துக் கால்வாய் இருக்கும் பகுதியில் அமைய உள்ளது. மேலும், ஆலை அமையும் இடத்தில் இருக்கும் தைல மரங்களை வெட்டுவதாலும், அதற்குப் பதிலாக அதிக எண்ணிக்கையில் சூரிய தகடுகள் பதிப்பதாலும் வெப்பநிலை அதிகரித்து மழைப்பொழிவும் பாதிக்கப்படும். நீர்நிலைகளுக்கு வரும் வரத்துக் கால்வாய்களைச் சமன்படுத்துவதால் மேடு, பள்ளங்கள் இல்லாமல் தண்ணீர் கொண்டுவருவதில் சிரமம் ஏற்படும். இதனால் நீர்நிலைகளுக்குத் தண்ணீர் வராமல், நிலத்தடி நீர் பெரிதும் பாதிக்கப்படும். விவசாயிகளிடம் விவசாயம் செய்வதற்கான நம்பிக்கையும் இல்லாமல் போகும். தற்சார்பு இந்தியாவின் முதன்மை முக்கியத்துவம் விவசாயம் மற்றும் கிராம பொருளாதாரம் என்கிற அணுகுமுறையோடு அரசாங்கம் செயல்பட்டுவருகிறது. வேப்பங்குளத்தில் விவசாயத்தின் மூலம் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாய எந்திரங்கள் வாடகைக்கு விடுபவர்கள் எனச் சுமார் 400 குடும்பங்கள், சுமார் 1 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டி வருகின்றனர். விரைவில் இதை 2 கோடி அளவுக்கு அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.

மேல கண்மாய் வாய்க்கால்
மேல கண்மாய் வாய்க்கால்

இந்த நிலையில் இப்படியொரு திட்டம் எங்களுக்குப் பெரிய அடியாக மாறும். மேலும், சூரிய மின்சார ஆலைகளைத் தரிசு நிலங்களில் அமைப்பதற்கு மட்டும்தான் அரசு பரிந்துரைக்கிறது. அதனடிப்படையில் வேப்பங்குளம் போன்ற விவசாயம் தழைத்தோங்கி வரும் கிராமத்திலிருந்து இந்தச் சூரிய மின்சார ஆலையை வேறு உகந்த இடத்துக்கு மாற்றி, அரசின் தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு வலுசேர்க்கும் கிராமமாக வேப்பங்குளம் செயல்பட வழிசெய்ய வேண்டும். சூரிய மின் திட்டம் நல்லதா, கெட்டதா என்று விமர்சனங்களுக்குள் நாங்கள் வரவில்லை. ஆனால், இந்தத் திட்டம் வேப்பங்குளத்துக்குப் பொருந்தாத ஒன்று” என்றார்.

சந்தான கண்மாய்
சந்தான கண்மாய்

இதுகுறித்துச் சம்பந்தப்பட்ட சோலார் மின்சார ஆலையின், வேப்பங்குளம் திட்ட மேலாளரிடம் பேசினோம்.

சூரிய மின்சார ஆலை அமைக்கும் பணி...
சூரிய மின்சார ஆலை அமைக்கும் பணி...

‘‘கடந்த சில வாரங்களாக எங்கள் நிறுவனத்தைப் பற்றித் தவறான தகவல் வெளியாகிறது. வேப்பங்குளத்தில் நாங்கள் அமைக்கும் பிளான்ட் ஒரு ரோபோ சிஸ்டத்தில் சுத்தம் செய்யும் பணியில் இயங்க உள்ளது. வேப்பங்குளத்தில் அமையும் இந்தத் திட்டத்தைப் பல்வேறு துறையைச் சேர்ந்த நபர்களும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். இதன் மூலம் விவசாயத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. வெப்பம் அதிகரிக்கும், கெமிக்கல்ஸ் வெளியே வரும் என்று சொல்லப்படுவதும் தவறானது. பல்வேறு இடங்களிலும் சோலார் திட்டம்தான் வந்து கொண்டிருக்கிறது. இது இயற்கைக்கு விரோதி அல்ல. நாங்கள், வெளிப்படையாகத்தான் செயல்படுகிறோம். வரத்துக்கால்வாய்களுக்குப் பாதிப்பில்லாத வகையில்தான் இந்தத் திட்டம் அமையும். இங்கு கிடைக்கும் மழை நீர் அனைத்தும் வேப்பங்குளம் கிராமத்துக்குத்தான் சென்றடையும். எங்கள் நிறுவனம் இங்கு அமைவது வேப்பங்குளம் கிராமத்துக்கு நன்மைதான்... தீமை அல்ல” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பயப்பட வேண்டாம்!

துகுறித்துச் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் பேசினோம். “வேப்பங்குளம் கிராமத்தில் அமையும் சோலார் மின்சக்தி நிறுவனத்தால் நீர்வரத்துக் கால்வாய் பாதிக்க வாய்ப்பில்லை. அங்கு கிடைக்கும் தண்ணீரை விவசாயத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விளக்கமாகக் கூறியுள்ளேன். வரத்துக் கால்வாய் அடைப்பு ஏற்பட்டாலோ, பாதிப்பு ஏற்பட்டாலோ சீரமைத்துக் கொடுப்போம். பொதுமக்கள் பயப்பட வேண்டாம்” என்றார்.

ஜெயகாந்தன், ஜி.பாஸ்கரன்
ஜெயகாந்தன், ஜி.பாஸ்கரன்

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஜி.பாஸ்கரன், “வேப்பங்குளம் பொதுமக்கள் என்னிடம் மனுக்கொடுத்துள்ளனர். இந்த மனுவைப் பரிசீலனை செய்கிறேன். விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் திட்டத்தை அனுமதிக்கமாட்டேன். நானும் ஒரு விவசாயிதான். இந்தத் திட்டம் குறித்து முழு விசாரணை செய்து முடிவு செய்கிறேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism