மரபணு மாற்றுப் பயிர்களுக்கான அனுமதியளிக்கும் குழு, பி.டி பருத்திக்கு அனுமதி கொடுத்த கையோடு பல காலமாகக் கத்திரிக்கும், கடுகுக்கும் அனுமதி கொடுப்பதைத் தீவிரப்படுத்தி வருகிறது.

பி.டி ரகப் பயிர்களை அனுமதிப்பதற்குப் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகிறது அந்தக்குழு. ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பி.டி பருத்தி புதிய நோய்களுக்கும், பூச்சித் தாக்குதல்களுக்கும் உள்ளாகி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. 2010-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி அன்றைய தமிழக அரசின் முதல்வர் கருணாநிதி, பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்புக்குப் பிறகு, ‘தமிழகத் திட்டக்குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் பி.டி கத்தரி தமிழகத்தில் அனுமதிக்கப்படாது’ என்று அறிவித்தார்.

2016-ம் ஆண்டுத் தேர்தல் அறிக்கையில், ‘தமிழகத்தில் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு அனுமதி கொடுக்கப்படாது’ என்றார், மறைந்த முதல்வர் ஜெயலலிதா. இதைப் பல தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் உரக்க அறிவித்துத் தமிழக மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று நம்பிக்கையும் அளித்தார். இதுபோலவே பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள், பொதுவுடைமைக் கட்சிகள், பி.ஜே.பி, காங்கிரஸ் என அனைத்துக் கட்சிகளும், அதன் தலைவர்களும் வெளிப்படையாக மரபணு மாற்றுப் பயிர்களைத் தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாதெனத் தமிழக அரசை வலியுறுத்தினர். தமிழக அரசின் நிலைப்பாடும், தமிழக அரசியல் கட்சியினரின் நிலைப்பாடும், தமிழக மக்களின் நிலைப்பாடும் இப்படி இருக்கையில் மரபணு மாற்று அங்கீகாரக் குழுவின் செயல்பாடு, மீண்டும் தமிழக மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது.

மரபணு மாற்றுப் பயிர்களுக்கான அனுமதியளிக்கும் குழுவின் அடுத்தகட்ட முயற்சியாக, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஜனக் மற்றும் பி.எஸ்.எஸ் 793 என்ற இரு மரபணு மாற்றுக் கத்திரி ரகங்களுக்கு வயல்வெளி பரிசோதனைகள் நடத்திட, பீஜ் ஷீட்டல் (Beej Sheetal) என்ற நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்துள்ளது. மேலும் வயல்வெளி சோதனைகள் நடத்திட அந்தந்த மாநிலங்களின் தடையில்லாச் சான்று பெற்றுக் கொள்ளவும் அக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இதுபற்றிப்பேசிய பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து, “மரபணு மாற்றப்பட்ட பயிர் ரகங்கள், மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கைச் சூழலுக்கும் பாதிப்பில்லாததா என்பதை அறியாத நிலையில், திறந்த வெளியில் இந்த ரகங்கள் பயிரிடப்படும்போது காற்று, தேனீக்கள்மூலம் மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தங்கள், பிற தாவரங்களுக்கும், கத்திரி ரகங்களுக்கும் பரவிடக்கூடிய ஆபத்து உள்ளது. இப்படி ஒரு முறை ஒரு மகரந்தம் பிற ரகங்களில் கலந்துவிட்டால், பிறகு அதைக் கண்டறிந்து அழித்திட எவ்வித வழியும் இல்லை. பூமியின் காலம்வரைக்கும் அவை இங்கேயே இருக்கும். ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பி.டி பருத்தி புதிய நோய்களுக்கும், பூச்சித் தாக்குதல்களுக்கும் உள்ளாகி வருகிறது.

2009-ம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சர் ‘விரிவான ஆய்வுகள் நடத்திய பிறகு, பி.டி.க்கு அனுமதி கொடுக்க வேண்டும்’ என்று நிறுத்தி வைத்தார். தமிழக அரசியல் கட்சியினரின் நிலைப்பாடும், தமிழக மக்களின் நிலைப்பாடும் பி.டி.க்கு எதிராக இருக்கிறது. இந்நிலையில் அங்கீகாரக் குழு மீண்டும் தமிழக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பீஜ் சீட்டல் நிறுவனத்தின் மரபணு மாற்றுக் கத்திரியைத் தமிழகத்தில் வயல்வெளி சோதனை செய்திட அனுமதியளித்துள்ளது. தமிழக அரசு இந்த வயல் வெளிச் சோதனைகளுக்குத் தடையில்லாச் சான்று வழங்கிடக் கூடாதெனக் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், இனிவரும் காலத்தில் மரபணு மாற்று அங்கீகாரக் குழு தமிழகத்தில் எவ்வித மரபணு மாற்றுப் பரிசோதனைகளுக்கும் அனுமதி அளித்திடாமல் இருக்கத் ‘தமிழக அரசு மரபணு மாற்றுப் பயிர்களுக்கும் மரபணு மாற்றுப் பயிர்கள்மூலம் விளைவிக்கப்பட்டவற்றுக்கும் அதன் மூலம் பெறப்பட்ட பண்டங்களுக்கும் இடமளிக்காது’, என்ற கொள்கை முடிவெடுத்து மத்திய அரசிற்கும் அதன் கீழ் இயங்கும் மரபணு மாற்று அங்கீகாரக் குழுவிற்குத் தெரிவிக்கவும் வேண்டுகிறோம்” என்றார்.

இதுகுறித்துத் தமிழ்நாடு வேளாண்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடியிடம் பேசினோம். “தமிழக அரசு கொள்கையளவில் பி.டி பயிர்களை அனுமதிக்க வாய்ப்பில்லை. இதுவரை எந்த மரபணு மாற்று நிறுவனங்களும் எங்களை அணுகவில்லை. தமிழக அரசும், வேளாண் துறையும் மரபணு மாற்றுப் பயிர்களின் வயல்வெளிச் சோதனைக்கு அனுமதியளிக்க வாய்ப்புகள் குறைவு” என்றார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குமாரிடம் பேசினோம். “பி.டி கத்திரியின் கள ஆய்வுக்குப் பல்கலைக்கழகம் சார்பாக அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை. அப்படி எந்த நிறுவனமும் எங்களை அணுகவில்லை” என்றார்.