Published:Updated:

மாட்டுச் சாணம் மூலம் வருமானம் எடுக்க முடியுமா? நிதி ஆயோக் திட்டம் சொல்லும் யோசனை!

மாடுகள்

பயோகாஸ் (Bio Gas) உருவாக்க மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில், இதிலிருந்து வருமானத்தைப் பெருக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதா எனப் பரிசீலித்து வருகிறது.

மாட்டுச் சாணம் மூலம் வருமானம் எடுக்க முடியுமா? நிதி ஆயோக் திட்டம் சொல்லும் யோசனை!

பயோகாஸ் (Bio Gas) உருவாக்க மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில், இதிலிருந்து வருமானத்தைப் பெருக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதா எனப் பரிசீலித்து வருகிறது.

Published:Updated:
மாடுகள்

உத்தரப் பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்பிரச்னையைத் தீர்க்க மாட்டுச் சாணத்தின் மூலம்  வருமானத்தை ஈட்டும் நிதி ஆயோக் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய திட்டத்தின் மூலம் மாட்டுச் சாணத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்தி பலன் பெற முடியும். 

நிதி ஆயோக்கின் பொருளாதார திட்டக்குழுத் தலைவரான ரமேஷ் சந்தின் தலைமையிலான அதிகாரிகள் குழு உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பிற மாநிலங்களிலுள்ள கோசாலைகளின் நிலையை நேரடியாகச் சென்று பார்வையிட்டது.

cows are roaming around highway side
cows are roaming around highway side
L.Rajendran

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து ரமேஷ் சந்த் கூறுகையில், ``கோசாலைகளில் வளர்க்கப்படும் பசுக்களுக்கான தீவனம், சிகிச்சை செலவு, அவற்றைப் பராமரிக்க தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பணம் போன்றவை போதுமானதாக இல்லை. கோசாலையில் பராமரிக்கப்படும் மாடுகளும் குறைந்தளவே பால் கொடுக் கின்றன. எனவே, அவற்றின் சாணத்தைக் கொண்டு வருமானத்தைப் பெருக்க நிதி ஆயோக் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயோ காஸ் (Bio Gas) உருவாக்க மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில், இதிலிருந்து வருமானத்தைப் பெருக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதா என பரிசீலித்து வருவதாகவும், அதுமட்டுமல்லாமல் சாணத்தை வேறு பல துணை தயாரிப்புகளுக்கு பயன்படுத்த முடியுமா என்பதையும்  ஆராய்ந்து வருகிறோம்'' எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism