Election bannerElection banner
Published:Updated:

பஞ்சாப் தானிய கிடங்குகளில் சி.பி.ஐ ரெய்டு... டெல்லி போராட்டத்தைச் சீர்குலைக்கும் முயற்சியா?

Delhi Farmers Protest
Delhi Farmers Protest ( AP Photo / Manish Swarup )

டெல்லியில் பஞ்சாப் விவசாயிகளின் போராட்டங்கள் உக்கிரமடைந்து கொண்டிருக்கும் வேளையில் சத்தமில்லாமல் பஞ்சாபில் உள்ள தானிய கிடங்குகளில் ரெய்டு செய்திருக்கிறது சி.பி.ஐ.

மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 45 இடங்களில் இந்த ரெய்டை நடத்தியிருக்கிறார்கள். மொத்த இடங்களிலும் அரிசி, கோதுமை மாதிரியை எடுத்துச் சோதனை செய்திருக்கிறார்கள்.

பஞ்சாப் தானிய கொள்முதல் நிலையம், பஞ்சாப் தானிய கிடங்கு மற்றும் இந்திய உணவுக் கழக கிடங்குகளில் இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், எந்த இடத்தில் ரெய்டு நடத்தப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. 2019-20 மற்றும் 2020-21-ம் ஆண்டுக்கான தானிய கொள்முதலை பரிசோதனை செய்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தோடு ஹரியானா மாநிலத்திலும் இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

Delhi Farmers Protest
Delhi Farmers Protest
AP Photo / Manish Swarup

நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில், 'கொள்முதல் செய்யப்படும் தானியங்களின் தூய்மைத் தன்மை சோதனை செய்யப்படும்' என்று தெரிவித்திருந்தார். அதன்படி இந்த ரெய்டு நடந்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் சி.பி.ஐ இதுபோன்ற ரெய்டை நடத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரெய்டு சம்பந்தமாகப் புகாரளிக்க சி.பி.ஐ தயாராகி வருகிறது.

'டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளில் பெரும்பான்மையானோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய போராட்டத்தின் வீரியத்தைக் குறைக்கும் நோக்கோடு இந்த சி.பி.ஐ சோதனை நடத்தப்பட்டிருக்கலாம்' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இதோடு ஹரியானா, உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் போராட்டத்தில் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் நிலையில், இந்த ரெய்டு விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Delhi Farmers Protest
Delhi Farmers Protest
AP Photo / Altaf Qadri

இந்த ரெய்டு எல்லாம் விவசாயிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்த நடத்தப்படும் முயற்சிகள். செங்கோட்டையில் கொடியேற்றிய பிறகு, மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக பெரிய அஸ்திரத்தை வீச நினைக்கிறது. அந்த அஸ்திரத்தில் ஒன்றுதான் இது. போராட்டத்தின் வீரியத்தைக் குலைக்க செய்யப்படும் வேலைகள்' என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 'எப்படி இருந்தாலும் எங்கள் போராட்டம் நிறுத்தபட மாட்டாது' என்று உறுதியோடு இருக்கிறார்கள் விவசாயிகள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு