Published:Updated:

`வெங்காய ஏற்றுமதிக்குத் தடை; இறக்குமதிக்கு ஆதரவு!’- மத்திய அரசு அதிரடி

1 லட்சம் டன் வரையில் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

வெங்காயம்
வெங்காயம்

வறட்சி, வெள்ளம் காரணமாக இந்த ஆண்டின் காரிப் பருவத்தில் வெங்காய உற்பத்தி 40 சதவிகிதம் வரையில் வீழ்ச்சியடைந்தது. இதனால் வெங்காயத்துக்கான தேவை அதிகரித்து விலை உயரத் தொடங்கியது. போதிய அளவுக்கு வெங்காயம் இருப்பில் இல்லாததாலும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கடந்த வாரம் சென்னையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை நூறு ரூபாய்க்கும் மேல் உயர்ந்தது.

டெல்லி, சென்னை உள்ளிட்ட சில முக்கியச் சந்தைகளிலும் வெங்காயத்தின் விலை நூறு ரூபாயைத் தாண்டியது.
வணிகர்கள்

அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகளால் இப்போது வெங்காயத்தின் விலை 60 ரூபாயாகக் குறைந்திருக்கிறது. மேலும் விலை ஏறாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, விலைஉயர்வைக் கட்டுப்படுத்த 1 லட்சம் டன் வரையில் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

மீண்டும் மிரள வைக்கும் வெங்காயம் விலை!- ஜனவரியில் குறைய வாய்ப்பு

அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் எம்.எம்.டி.சி நிறுவனம் வெங்காயத்தை இறக்குமதி செய்யவுள்ளது. வர்த்தகர்கள் தரப்பிலிருந்தும் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

வெங்காயம்
வெங்காயம்

இம்மாத இறுதிக்குள் 1,000 டன் வெங்காயத்தை வர்த்தகர்கள் இறக்குமதி செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதத்திலும் அதிகப்படியான வெங்காயத்தை வர்த்தகர்கள் இறக்குமதி செய்யவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.

பா.ஜ.க-வை மிரட்டும் வெங்காயம், பூண்டு!

இறக்குமதியை எளிதாக்கும் நோக்கத்தில் வெங்காய இறக்குமதிக்கான விதிமுறைகளை மத்திய அரசு சமீபத்தில் தளர்த்தியது. இதனால் வெங்காய இறக்குமதியாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். உள்நாட்டில் வெங்காயத்துக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதால், வெங்காய ஏற்றுமதிக்கு அரசு முற்றிலுமாக தடை விதித்துள்ளது.