Published:Updated:

கட்டுக்குள் வந்த தட்டுப்பாடு..!- வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்க மத்திய அரசு முடிவு

வெங்காய ஏற்றுமதி
வெங்காய ஏற்றுமதி ( vikatan )

ஏற்றுமதிக்கான வெங்காயத்தை இந்தியாவுக்குள்ளேயே விற்பனை செய்து, தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, வெங்காய விலை கட்டுக்குள் வந்துள்ளது. எனவே, மீண்டும் வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளிப்பதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்துவருகிறது.

கடந்த ஆண்டின் பிற்பாதியில், வெங்காய விலை அதிரடியாக உயர்ந்தது. அதையடுத்து, 2019 செப்டம்பரில் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், குறைந்தபட்ச ஏற்றுமதிக் கட்டணத்தை ஒரு டன்னுக்கு 850 டாலர் என்று நிர்ணயித்தது.

வெங்காய ஏற்றுமதி
வெங்காய ஏற்றுமதி
vikatan

கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கடுமையான மழை, வெள்ளம் காரணமாக வெங்காய விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டது. வியாபாரிகள் வெங்காயத்தைப் பதுக்கி வைப்பதாகவும், அதன்மூலம் செயற்கையாக வெங்காய விலையேற்றம் ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து, வெங்காய விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த, வெங்காயத்தைப் பதுக்கியவர்களைக் கண்டறிவது, வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியது.

வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்குத் தடைவிதிக்கப்பட்டது. அதன்மூலம், ஏற்றுமதிக்கான வெங்காயத்தை இந்தியாவுக்குள்ளேயே விற்பனைசெய்து தட்டுபாட்டை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது வெங்காய விலை கட்டுக்குள் வந்துள்ளது. எனவே, மீண்டும் வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளிப்பதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்துவருகிறது.

கட்டுக்குள் வந்த தட்டுப்பாடு..!- வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்க மத்திய அரசு முடிவு

உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பின்னர் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தனது ட்விட்டர் செய்தியில், `வெங்காய விலை சீரடைந்திருப்பதால், ஏற்றுமதிக்கான தடையை நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு