Published:Updated:

சேமிப்புக் கிடங்கு, மதிப்புக்கூட்டும் தொழில்... 2 கோடி ரூபாய் வரை பிணையம் இல்லா கடன்!

நிகழ்வில்
பிரீமியம் ஸ்டோரி
நிகழ்வில்

திட்டம்

சேமிப்புக் கிடங்கு, மதிப்புக்கூட்டும் தொழில்... 2 கோடி ரூபாய் வரை பிணையம் இல்லா கடன்!

திட்டம்

Published:Updated:
நிகழ்வில்
பிரீமியம் ஸ்டோரி
நிகழ்வில்

வேளாண்மைத்துறையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை விவசாயி களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது மத்திய அரசின் வேளாண்மைத்துறை. கிருஷி மேளா (Kisan Bhagidhari Pratmikta Humari Campaign) என்ற பெயரில் விவசாயிகள் பங்கேற்பே எங்களது முன்னுரிமை என்ற பெயரில் விழிப்புணர்வு முகாம் 6 நாள்கள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை மட்டுமல்லாமல், கூட்டுறவுத்துறை, உணவு பதப்படுத்தும் துறை, கால்நடைத்துறை, மீன்வளத்துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகியவையும் இணைந்து கொண்டன.

ஆத்மா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதிலும் உள்ள 731 வேளாண் அறிவியல் மையங்களில் காணொலிக்காட்சி வாயிலாகக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஒவ்வொரு துறை சார்பாகச் செயல்படுத்தப் படும் திட்டங்கள் பற்றியும் எடுத்துச் சொன்ன அதிகாரிகளிடம் அந்தத் திட்டங்களைப் பெறுவதில் தங்களுக்குள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து விவசாயிகள் பகிர்ந்து கொண்டார்கள்.

நிகழ்வில்
நிகழ்வில்

‘கிருஷி மேளா’வை முன்னின்று நடத்திய மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இணைச் செயலாளர் சாமுவேல் பிரவீன் குமாரிடம் பேசினோம். ‘‘வேளாண் விரிவாக்கத்துறை மூலமாக மத்திய அரசு விவசாயிகளுக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநில விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.

நவீன தொழில்நுட்பங்கள், இயற்கை விவசாயம், கருவிகள், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டும் முறைகள், சேமிப்புக் கிடங்குகள், டிரோன் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை விவசாயிகளிடம் பகிர்ந்துகொண்டோம். ‘பஜல் பீமா யோஜனா’ என்ற பெயரில் அழைக்கப்படும் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு கோடி விவசாயிகள் இணைத்துள்ளோம். 21,538 கோடி ரூபாய் பிரிமீயம் செலுத்திய விவசாயி களுக்கு 1,16,500 கோடி ரூபாய் வரை காப்பீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் 10.35 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளார்கள். அதில் உள்ள சாதக, பாதகங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டன. அடுத்தகட்டமாக மாநில அளவில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம்’’ என்றவர், வேளாண் உள்கட்டமைப்புக்காக (Agriculture Infrastructure Fund) மத்திய அரசு வழங்கி வரும் நிதியுதவி குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

நிகழ்வில்
நிகழ்வில்

‘‘வேளாண் உள்கட்டமைப்புக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு. இந்தத் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கிக்கொள்ளலாம். வேளாண் தொடர்பான தொழில்களுக்கு இந்தக் கடனுதவி அளிக்கப்படும். குறிப்பாக, அறுவடை பின்சார் தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விவசாயத்தில் உள்கட்டமைப்புக்காகக் குறுகிய காலக் கடன்கள் கிடைக்கின்றன. குளிர்பதன கிடங்குகள், மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள், கருவிகள் வாங்க லட்சக் கணக்கில் பணம் தேவைப்படும். அதிக கடன் கொடுக்க வங்கிகள் தயங்கும். ஆனால், இந்தத் திட்டத்தில் 2 கோடி ரூபாய் வரை கடனுதவி அளிக்கப்படும். விளைபொருள்கள் காய வைத்தல், சேமிப்புக் கிடங்குகள், சோலார், குளிர்பதன கிடங்குகள், மதிப்புக்கூட்டும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட தொழில்களுக்கு இந்தத் திட்டம்மூலம் கடனுதவி பெறலாம். இந்தத் திட்டம்மூலம் கொடுக்கும் கடன் களுக்கு அதிகபட்சமாக 9 சதவிகிதம் வட்டி. அதில், 3 சதவிகிதம் மத்திய அரசு மானியமாக அளிக்கும். சில கூட்டுறவு வங்கிகளில் 4 சதவிகித வட்டியில் இந்தத் திட்டத்தில் கடனுதவி பெறலாம். அதிலும் 3 சதவிகித மானியம் கிடைக்கும். அதுபோக 1 சதவிகிதம்தான் வட்டி. வேளாண் சார் தொழில்முனைவோர்கள், விவசாயிகள், மகளிர் குழுக்கள் இந்தத் திட்டத்தில் பயனடையலாம். இந்தத் திட்டத்தில் கடனுதவி பெறும் தொழில்முனைவோர்கள் 3-ம் ஆண்டிலிருந்து கடனுக்கான தவணை யைச் செலுத்தினால் போதும். 7 ஆண்டுகளில் கடனைக் கட்டி முடித்துவிட வேண்டும். இந்தத் திட்டத்தில் 2 கோடி ரூபாய் வரை பிணையம் தேவையில்லை என்பது இத் திட்டத்தின் சிறப்பம்சம்.

நிகழ்வில்
நிகழ்வில்

இணையம் (https://agriinfra.dac.gov.in/)வழியாக இதற்கான விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். தேவையான தகவல்களைப் பதிவு செய்து விட்டால் போதும். நீங்கள் செய்யவுள்ள தொழிலின் சாதக, பாதங்கள் ஆராயப்படும். லாபம் ஈட்டும் தொழிலாக இருந்தால் 60 நாள்களில் உங்களுக்குக் கடனுக்கான ஒப்புதல் கிடைத்துவிடும். தொழில் முனைவோர், மகளிர் குழுக்கள், விவசாயிகள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று சொல்லி முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism