மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றது பா.ஜ.க அரசு. அவை ஒவ்வொன்றும் ஆதரவு - எதிர்ப்பு எனப் பல்வேறு தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன. அந்த வரிசையில், வேளாண்துறையில் மூன்று புதிய சட்டத் திருத்தங்களை அண்மையில் கொண்டு வந்ததையடுத்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் தொடர்ந்து 90 நாள்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வேளாண் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து போராடும் விவசாயிகளுள் பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அம்மாநிலங்களில் விரைவில் கோதுமை அறுவடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், அங்குள்ள விவசாயிகளுக்கு ஆன்லையினின் மூலம் மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) ஆன்லைன் மூலம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வழங்கிடுமாறு மத்திய அரசு அவ்விறு மாநில அரசுக்கும் வலியுறுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உணவு மற்றும் பொது விநியோக மற்றும் நுகர்வோர் அமைச்சகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய மாநில கொள்முதல் நிறுவனங்கள் மூலம் விவசாயிகள் தங்களின் பொருள்களை விற்பனை செய்ய மின்னணு மூலம் தங்கள் அடையாளங்களை பதிவேற்றும் பனி உத்திர பிரதேச மாநிலத்தில் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர். இம்முறையை பின்பற்ற ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன.

இதன் மூலம் விவயசாயிகள் தங்கள் பொருள்களை இடைத்தரகர்களின் உதவியின்றி நேரடியாக விற்பனை செய்ய உதவிகரமாக இருக்கும் என்று அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார். மேலும், பேசிய அவர் நியாய விலைக்கடைகளில் விற்பக்கப்படும் அரிசி, கோதுமையின் விலையை உயர்த்தும் எண்ணம் தற்போது இல்லை எனவும் கூறினார்.
மத்திய உணவுத் துறையில் சீர்திருத்தம் கொண்டு வரும் நோக்கில், இந்திய உணவுக் கழகம் மற்றும் மத்திய சேமிப்புக்கிடங்கு கழகத்தின் சொத்துகளை விற்று அதன் கட்டமைப்பை உயர்த்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.