Published:Updated:

75 லட்சம் மெட்ரிக் டன், 150 கோடி ரூபாய்... மாட்டுச் சாணம் கொள்முதலில் சாதனை படைக்கும் சத்தீஸ்கர்!

மாடு பராமரிப்பு மையம்
பிரீமியம் ஸ்டோரி
மாடு பராமரிப்பு மையம்

பக்கத்து வயல்

75 லட்சம் மெட்ரிக் டன், 150 கோடி ரூபாய்... மாட்டுச் சாணம் கொள்முதலில் சாதனை படைக்கும் சத்தீஸ்கர்!

பக்கத்து வயல்

Published:Updated:
மாடு பராமரிப்பு மையம்
பிரீமியம் ஸ்டோரி
மாடு பராமரிப்பு மையம்

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பிஜப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மண்டுராம் காஷ்யப் - மீரா தம்பதி, மாட்டுச் சாணத்தைப் பாதுகாப்பதையே தங்கள் முழு நேரப் பணியாகச் செய்து வருகின்றனர். இரவு நேரங்களில் தங்கள் வீட்டு மாட்டுச் சாணம் திருடு போகாமல் இருக்க, ஒருவர் மாற்றி ஒருவர் கண்விழித்துப் பாதுகாத்து வருகிறார்கள்... ஆச்சர்யமாக இருக்கிறதா? இவர்களின் குடும்பப் பொருளாதாரத்தில் மாட்டுச் சாணம் அந்தளவுக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது.

மாடு பராமரிப்பு மையம்
மாடு பராமரிப்பு மையம்

சத்தீஸ்கர் அரசு, கடந்த 2020-ல் மாட்டுச் சாணத்தைக் கொள்முதல் செய்யும் திட்டத்தை (Godhan Nyay yogana) அறிமுகப் படுத்தியது. இப்படி ஒரு திட்டம் இந்திய அளவில் வேறு எங்கும் இதுவரை இல்லை. இதுவே முதல்முறை. ஒரு கிலோவுக்கு 2 ரூபாய் வீதம் விலை கொடுத்து, விவசாயி களிடமிருந்து சாணத்தைக் கொள்முதல் செய்கிறது சத்தீஸ்கர் மாநில அரசு. மண்டுராம் காஷ்யப் - மீரா தம்பதி இரவெல்லாம் கண்விழித்துச் சாணம் திருடு போகாமல் பாதுகாப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா? இதுவரை 14,000 கிலோ மாட்டுச் சாணத்தை 28,000 ரூபாய்க்கு அரசு கொள்முதல் நிலையத்தில் விற்றிருக்கிறார்கள் இந்தத் தம்பதி. லேசான மழைக்கே ஒழுகும் வீட்டை சாணம் விற்றப் பணத்தில்தான் பழுது பார்த்திருக்கிறார்கள். இதுபோல் அங்குள்ள இன்னும் ஏராளமான விவசாயக் குடும்பங்கள் வருமானம் ஈட்ட பெரிதும் கைகொடுத்துக்கொண்டிருக்கிறது சாண கொள்முதல் திட்டம். இதுவரை கிட்டத்தட்ட 2 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தால் பயன் அடைந்திருக்கிறார்கள்.

மாடு பராமரிப்பு மையம்
மாடு பராமரிப்பு மையம்

மாட்டுச் சாணத்தை மக்களிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதற்காக, அம்மாநில அரசு அனைத்து பஞ்சாயத்து களிலும் 8,000-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை சுமார் 7,00,000 டன் சாணம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 150 கோடி ரூபாய். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த சாணத்துக்கான தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்திவிடுகிறது அம்மாநில அரசு.

இதுபற்றிச் சத்தீஸ்கர் மாநில சுகாதாரத் துறைச் செயலாளர் டாக்டர் சி.ஆர். பிரசன்னாவிடம் பேசினோம்.
‘‘கால்நடைகளை இலவசமாகப் பராமரிப் பதற்காகவும், விவசாயிகளிடமிருந்து சாணம் கொள்முதல் செய்வதற்காகவும் கோடான் என்ற பெயரில் இங்கு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. 2020-ம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த இரண்டு வருடங் களில் 7 லட்சம் மெட்ரிக் டன் சாணம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப் பட்டுள்ளது.

மாடு பராமரிப்பு மையம்
மாடு பராமரிப்பு மையம்

10,000 கோடான்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தற்போது வரை 8,000 கோடான்கள், கோடான் மேனேஜ்மென்ட் கமிட்டியினரால் வெற்றி கரமாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அந்தந்தக் கிராமத்தினரும், அவற்றைச் சேர்ந்த சுய உதவிக்குழுவினரும்தான் இந்தக் கமிட்டியின் உறுப்பினர்கள். கொள்முதல் செய்யப்படும் சாணம், மண்புழுவுரமாக மதிப்புக் கூட்டப்பட்டு விற்பனை செய்யப் படுகிறது. இதனால் ரசாயன உரங்களின் பயன்பாடு குறைகிறது. சத்தீஸ்கரில் இயற்கை விவசாயத்தை வளர்த்தெடுக்க, சாணம் கொள்முதல் திட்டம் பெரிது கைகொடுக்கிறது’’ எனத் தெரிவித்தார்.

மாடு பராமரிப்பு மையம்
மாடு பராமரிப்பு மையம்

இரண்டு மாடுகள் மாதம் 4,000 ரூபாய்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுகாதாரத்துறை செயலாளராகப் பதவி வகிக்கும் பிரசன்னா ஐ.ஏ.எஸ், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அடிப்படையில் ஒரு கால்நடை மருத்துவர். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவர் சத்தீஸ்கர் மாநில கால்நடைத்துறையின் இயக்குநராகப் பணியாற்றியபோதுதான் அம்மாநிலத்தில் கோடான் திட்டம் தொடங்கப்பட்டது.

‘‘இங்கு தற்போது செயல்பட்டு வரும் 8,000 கோடான்களில், 3,000 கோடான்கள் அரசிடமிருந்து உதவிபெறாமல் பொருளாதாரத் தன்னிறைவுப் பெற்றவையாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட கோடான்களை நடத்துகிற சுய உதவிக்குழுப் பெண்கள், தங்கள் கமிட்டியில் உள்ள பணத்தைக் கொண்டு விவசாயிகளிடமிருந்து சாணம் கொள்முதல் செய்யும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள். தங்கள் கோடான்களைக் கிராமப்புற வளர்ச்சி மையங்களைப்போலவும் உருவாக்கிவிட்டார்கள். கோடான்களிலேயே, மாடுகளுக்கான பசுந்தீவனம் வளர்க்கிறார்கள்; சாணமும் களிமண்ணும் கலந்து எளிதில் மட்கக்கூடிய பூந்தொட்டிகள் தயாரித்து விற்பனை செய்கிறார்கள். இங்கிருந்து வாங்கப்படும் செடிகளை அந்தச் சட்டியுடன் அப்படியே மண்ணுக்குள் புதைத்துவிடலாம். அந்தச் சட்டியே உரமாகிவிடும்.

பிரசன்னா ஐ.ஏ.எஸ்
பிரசன்னா ஐ.ஏ.எஸ்

இந்தத் தொட்டிகளுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு இருக்கிறது. இதன் மூலமாகவும் அந்தக் குழுக்களுக்கு வருமானம் கிடைக்கிறது. சாணத்தை மண்புழு உரமாக மாற்றி ஒரு கிலோ 10 ரூபாய் என விவசாயிகளுக்கும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வனத்துறையினருக்கும் விற்பனை செய்து வருகின்றனர். சத்தீஸ்கரில் பெரும்பாலும் மாடுகளைக் கொட்டிலில் கட்டிப்போட்டு வளர்ப்பதில்லை.

அவை மேய்ந்துவிட்டு மாலை வீட்டுக்கு வந்துவிடுகின்றன. வீட்டிலேயே வைத்து சத்தான தீவனங்கள் தருவது, தடுப்பூசி போடுவதெல்லாம்கூட மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் சத்தீஸ்கரில் சற்றுக் குறைவுதான். மாடுகள் மேய்ச்சலுக்குச் செல்கின்றன அல்லது மேய்ப்பர்கள் மாடுகளை அழைத்துச் செல்கிறார்கள். இதனால் சத்தான தாவரங்களை உண்ணும் மாடுகள், உயிர்ச்சத்துக்கள் நிறைந்த சாணம் தருகிறது.

இயற்கை உரம்
இயற்கை உரம்

தங்களுடைய வீடுகளில் இரண்டு மாடுகள் மட்டுமே வளர்க்கும் பெண்கள்கூட, சாணத்தை விற்று மாதத்துக்கு 3,000 முதல் 4,000 வரை சம்பாதித்துவிடுகிறார்கள். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் இதே முறையைப் பின்பற்றி மக்களின் வருமானத்தைப் பெருக்கலாம். இயற்கை விவசாயத்தையும் வளர்த்தெடுக்கலாம்’’ என்கிறார் பிரசன்னா.