குப்பையில்லா மாநகராட்சியை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சியால் தயாரிக்கப்பட்ட பசுமை உரமானது மிகவும் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது என மாநகராட்சி ஆணையரான ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சேகரிக்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என முதலில் தரம் பிரித்து, மக்கும் குப்பை உரம் தயாரிக்கும் நிலையங்களுக்கும், மக்காத குப்பைகள் மற்றும் கழிவுகள் சிமென்ட் தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்படுகின்றன. 208 உரம் தயாரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, அதிலிருந்து நாள் ஒன்றுக்கு 450 டன் மக்கும் கழிவுகள் பதனிடப்பட்டு உரமாக்கப்படுகின்றன. இப்பணிகளில் 19,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உரம் தயாரிக்கும் நிலையங்கள் இயற்கையான முறையில் உரத்தினை தயார் செய்கின்றன. தயாரிக்கப்படும் இந்த உரத்தை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறது, சென்னை மாநகராட்சி. மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் மற்றும் பூங்காக்களில், இந்த உரத்தை விற்பனை செய்வதோடு, மக்கள் அனைவரும் எளிதாக வாங்கும் வண்ணம் இதன் விலையை மிக குறைந்த அளவுக்கு விற்று வருகிறது. ஒரு கிலோ உரத்தின் விலை 15 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.