Published:Updated:

விவசாயப் பணிகளில் ஆள் பற்றாக் குறை! - வாசகர் பரிந்துரைக்கும் எளிய தீர்வு #MyVikatan

சில இடங்களில் ஆட்கள் பற்றாக்குறையின் காரணமாக விவசாய வேலைகளுக்கு நில உரிமையாளர்கள் வடமாநில இளைஞர்களைப் பயன்படுத்துவதாகவும் அண்மையில் செய்தித்தாளில் வாசித்தேன்.

Representational Image
Representational Image

நான் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறையில் கோட்டப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்று ஈரோட்டில் வசித்து வருகிறேன். தற்போது ஆர்வமுடன் விவசாயம் செய்துகொண்டு வருகிறேன். இயற்கை விவசாயத்தில் நாட்டம் உண்டு. சமீப காலமாக விவசாயப் பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்படுவதால் விவசாயிகள் இயந்திரத்துக்கு மாறி வருவதாக அன்றாடம் செய்திகளைப் பார்க்க முடிகிறது. மேலும், சில இடங்களில் ஆட்கள் பற்றாக்குறையின் காரணமாக விவசாய வேலைகளுக்கு நில உரிமையாளர்கள் வடமாநில இளைஞர்களைப் பயன்படுத்துவதாகவும் அண்மையில் செய்தித்தாளில் வாசித்தேன். இந்தப் பிரச்னைக்கு ஒரு சின்ன தீர்வு என் மனதில் தோன்றியது.

Representational Image
Representational Image

மத்திய அரசின் நிதி உதவியுடன் மாநில அரசால் நூறுநாள் வேலை வாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்கள் இதனால் நிச்சயமாகப் பயனடைகிறார்கள். ஆனால், அரசு செலவிடும் தொகைக்கு ஈடான நிரந்தர கட்டமைப்பு பணிகள் [assets] அதிக அளவில் உருவாக்கப்படுவதில்லை. அதே சமயம் கிராமப்புறங்களில் விவசாய வேலைகளுக்கும் சிறு தொழில் வேலைகளுக்கும் கடுமையான ஆள் பற்றாக் குறை நிலவி வருகிறது.

இவ்விரண்டையும் ஒருங்கினைப்பதன் மூலம் இப்பிரச்னைகளுக்கு தீர்வுகாண முடியும். முதலாவதாக பணியாளர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்தில் பதிவுசெய்து கொள்ள வேண்டும். அதேபோல் நில உரிமையாளர்களும் சிறுதொழில் செய்வோரும் தங்கள் ஆள் தேவைகளை ஊராட்சி அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.

Representational Image
Representational Image

ஊராட்சித் தலைவர் அல்லது செயலர் ஆட்களை அவரவர் உடல் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற பணிகளுக்குப் பிரித்து அனுப்பலாம். ஆட்களுக்கான ஊதியத்தை அரசும் பயன்படுத்துவோரும் சரிசமமாக பகிர்ந்துகொள்ளலாம் அல்லது பயன்படுத்துவோரை முழுமையாக வழங்க அறிவுறுத்தலாம். இதன்மூலம் அரசின் செலவை பெருமளவு குறைக்க முடியும். வேலை நாள்களை அதிகப்படுத்தவும் வாய்ப்புள்ளது.

பணியாளர்களும் பல்வேறு வேலைகளைச் செய்வதின் மூலம் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும். உடல் உழைப்பைத் தர இயலாதவர்களை அரசே வேறு எளிய பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ளலாம்.

விவசாயப் பணிகளில் ஆள் பற்றாக் குறை! - வாசகர் பரிந்துரைக்கும் எளிய தீர்வு #MyVikatan

ஊராட்சித் தலைவர்களும் செயலர்களும் உள்ளூர் நிலவரம் தெரிந்தவர்கள் என்பதால் இத்திட்டத்தை எளிதாக செயல்படுத்த முடியும் என்று நம்புகிறேன். இது எனக்குத் தோன்றிய யோசனை. இதில் மாற்றுக்கருத்தோ அல்லது இதேபோன்று யோசனைகள் இருப்பின் இங்கே பகிரலாம்.

-அ. வேலுசாமி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/