Published:Updated:

கல்லணைக் கால்வாயில் கான்கிரீட் தளம்; விவசாயிகளுக்கு கை கொடுக்குமா?

கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

கல்லணைக் கால்வாய் வெட்டப்பட்டபோது அதன் கொள்ளளவு 4,400 கன அடி ஆகும். அந்த 4,400 கன அடி நீரை எடுத்தால்தான், கல்லணைக் கால்வாயை நம்பியுள்ள சுமார் இரண்டரை லட்சம் ஏக்கர் பாசனப் பகுதிகள் சாகுபடி செய்ய முடியும்.

கல்லணைக் கால்வாயில் கான்கிரீட் தளம்; விவசாயிகளுக்கு கை கொடுக்குமா?

கல்லணைக் கால்வாய் வெட்டப்பட்டபோது அதன் கொள்ளளவு 4,400 கன அடி ஆகும். அந்த 4,400 கன அடி நீரை எடுத்தால்தான், கல்லணைக் கால்வாயை நம்பியுள்ள சுமார் இரண்டரை லட்சம் ஏக்கர் பாசனப் பகுதிகள் சாகுபடி செய்ய முடியும்.

Published:Updated:
கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

கல்லணைக் கால்வாயின் பிரதான வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. `கால்வாயின் கரைகளில் ஏற்படும் உடைப்பும் நீர்க்கசிவும்தான் கடைமடை வரைக்கும் பாசனத்துக்கு தண்ணீர் போய்ச் சேராததற்குக் காரணம். கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டால், இந்தப் பிரச்னை இருக்காது. கடைமடை விவசாயிகளுக்கும் தண்ணீர் போய்ச் சேர்ந்துவிடும்’ என இதற்கு அரசுத் தரப்பில் இருந்து காரணம் சொல்லப்படுகிறது. ஆனால், விவசாயிகளோ `கால்வாயில் கான்கிரீட் தளம் அமைத்தால் நிலத்தடி நீர் குறைபாடு ஏற்படும். கால்வாய் கசிவுநீரால் நிரம்பிய குளம், குட்டை, ஏரிகள் நீரின்றி வறண்டு போகும். கால்வாயை சீரமைக்கிறேன் என்கின்ற பெயரில் கான்கிரீட் தளம் அமைப்பது நீராதாரத்தை அழித்தொழிக்கும் செயல்’ என்கின்ற விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.

கல்லணை
கல்லணை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`கல்லணைக் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டம் உண்மையிலேயே பயனுள்ளதுதானா..? எதில் என்னென்ன சாதக பாதகங்கள் இருக்கின்றன’ என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி நடராஜன் அவர்களிடம் பேசினோம். ``கல்லணைக் கால்வாயின் பிரதான வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டில் இருந்தே நடைபெற்று வருகின்றன. கல்லணைக் கால்வாய் மறுசீரமைப்புத் திட்டம் என்கின்ற பெயரில், ஆசிய வளர்ச்சி வங்கியின் உள்கட்டமைப்பு நிதி பெற்று இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மதிப்பு சுமார் 2,500 கோடி என்கின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கல்லணைக் கால்வாய் வெட்டப்பட்டபோது அதன் கொள்ளளவு 4,400 கன அடி ஆகும். அந்த 4,400 கன அடி நீரை எடுத்தால்தான், கல்லணைக் கால்வாயை நம்பியுள்ள சுமார் இரண்டரை லட்சம் ஏக்கர் பாசனப் பகுதிகள் சாகுபடி செய்ய முடியும். ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக 3,000 கன அடி தண்ணீரை எடுத்தாலே வாய்க்காலின் கரைகள் உடைபடும் சூழல் நிலவுகிறது. அந்தளவுக்கு வாய்க்காலின் கட்டமைப்பு வலுவிழந்து போயிருக்கிறது.

கல்லணை
கல்லணை

அரசுத் தரப்பிலோ `40 - 50 வருஷமாகக் கல்லணைக் கால்வாயை சீரமைக்காமல் விட்டுவிட்டோம். அதனால தண்ணி திறந்தாலும் கடைமடைக்கு போய்ச் சேர மாட்டேங்குது. ஒரே பிரச்னையாக இருக்கு. அதுக்காகத்தான் தண்ணி வேஸ்டேஜ் ஆகாம கடைசிவரைக்கும் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காகத்தான் இந்த கான்கிரீட் தளம் அமைக்குறோம்’னு சொல்றாங்க. `கால்வாயின் தரைத்தளத்தில் கான்கிரீட் போட்டால், நிலத்தில் தண்ணீர் இறங்காது’ என்பதை முதலில் சுட்டிக் காட்டினோம். அதையடுத்து, கால்வாயில் ஒவ்வொரு 15 அடிக்கும் நிலத்தில் தண்ணீர் இறங்குகின்ற வகையில அமைப்பை ஏற்படுத்துவதாகத் திட்டமிட்டிருக்கிறார்கள். `பாசனத்துக்கு முழுமையாகத் தண்ணீர் கிடைக்க வேண்டும். பாசன வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை நாங்கள் தொடர்ச்சியாக சொல்லி வந்தோம். அப்படியிருக்க இப்போது கடன் வாங்கி இந்தத் திட்டத்தை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே, இதை எங்களால் முழுமையாக எதிர்க்கவும் முடியவில்லை, முழுமையாக ஆதரிக்கவும் முடியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒட்டுமொத்த காவிரி டெல்டாவினுடைய பாசன சிஸ்டமே பழைமையானது. அதை நவீனப்படுத்த வேண்டும். கரைகளை பலப்படுத்தி, ஷட்டர்கள் பழுதி நீக்க வேண்டுமென தொடர்ந்து போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த ஸ்கீம் ஒட்டுமொத்த டெல்டாவுக்கும் வரவில்லை. கல்லணைக் கால்வாய்க்கு மட்டும்தான். காவிரி, வெண்ணாற்றில் எங்கும் இப்படி கான்கிரீட் தளங்கள் அமைக்கவில்லை. இது முழுக்க முழுக்க செயற்கையாக வெட்டப்பட்ட ஒரு பாசனக் கால்வாய். மேட்டுப் பகுதியை நோக்கிப் பாய்கிறது.

கல்லணை
கல்லணை

இதனுடைய பாசனப் பகுதி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வரைக்கும் இருக்கிறது. இதில் கல்லணையில் முகப்பில் ஒரத்தநாடுக்கு முன் இருக்கக்கூடிய பகுதிகளுக்கு தண்ணீர் கிடைத்து சாகுபடி செய்துவிடுகிறார்கள். ஆனால், ஒரத்தநாட்டின் தென்பகுதிகளுக்கு தண்ணீர் போய்ச் சேர்வதில்லை. அப்படியிருக்க `இந்தத் திட்டத்தை நாம எதிர்த்தா, அப்படியே விட்டுட்டாங்கன்னா என்ன செய்றது. கடைமடை வரைக்கும் எப்படியாவது தண்ணீர் போய்ச் சேர்ந்தா பரவாயில்லை என ஆதரிக்க வேண்டிய சூழல்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism