Published:Updated:

உடனடித் தேவை!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

உடனடித் தேவை!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களால் லஞ்சம் உட்பட பல்வேறு வகைகளில் விவசாயிகள் சுரண்டப்படுவது தொடர்கதையாகவே இருக்கிறது. இதுகுறித்துப் பசுமை விகடன் தொடர்ந்து எழுதிவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, விகடன் இணையதளத்தில் விரிவான கட்டுரையும் விகடன் வெப் டிவி மற்றும் பசுமை விகடன் ஆகிய யூடியூப் தளங்களில் விரிவான வீடியோவும் பதிவிட்டிருந்தோம். ‘ஷேர் செய்வோம்... முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காதுகளில் ஏறும் வரை’ என்கிற தலைப்பில் பசுமை விகடன் இதழில் கட்டுரையும் வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் தஞ்சாவூர் சென்ற முதல்வர், ‘நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றுவோருக்கு ஊதியம் இப்போதே உயர்த்தப்படுகிறது. எனவே, புகார்களுக்கு இடமளிக்காமல் பணியாற்றுங்கள்’ என்று சொன்னார். இரண்டு மாதங்கள் உருண்டிருக்கும் நிலையில், ‘நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு பைசா லஞ்சம் வாங்கினாலும் கடும்நடவடிக்கை’ என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, எச்சரிக்கை விடுக்கும் நிலைதான் நீடிக்கிறது. லஞ்சப் பேய்களின் ஆட்டம் ஓயவில்லை என்பதை அமைச்சரே இப்போது உறுதிப்படுத்தியுள்ளார்.

நேரடி நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் தொடங்கி, கோட்டையில் இருப்பவர்கள் வரை அனைவருக்கும் இந்த லஞ்சப் பணம் பங்கு பிரிக்கப்படுகிறது என்பது, இந்த நிலையங்கள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தொடரும் அவலம். அப்படியிருக்க, முதல்வரும் அமைச்சரும் அறிவுரைகளை அள்ளி வீசிக்கொண்டிருப்பது, ஊரை ஏமாற்றும் செயலாகவே உணரப்படும்.

லஞ்சம் புரையோடியிருக்கும் இந்தத் துறைக்கு உடனடித் தேவை அறிவுரைகள் அல்ல; அறுவைசிகிச்சையே!

- ஆசிரியர்

கார்ட்டூன்
கார்ட்டூன்