Published:Updated:

டெல்லி சலோ... வெற்றி ரகசியம்... விவசாயிகளின் வியூகத்தால் விழிபிதுங்கும் பி.ஜே.பி அரசு!

போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
போராட்டம்

போராட்டம்

டெல்லி சலோ... வெற்றி ரகசியம்... விவசாயிகளின் வியூகத்தால் விழிபிதுங்கும் பி.ஜே.பி அரசு!

போராட்டம்

Published:Updated:
போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
போராட்டம்
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்திப் பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாகப் பல்வேறு மாநிலங்களிலும் விவசாயச் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ‘புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, சந்தை அமைப்பு போன்றவற்றுக்கு ஆபத்து இருக்கிறது, அதனால் அந்தச் சட்டம் எங்களுக்கு வேண்டாம், திரும்பப் பெற வேண்டும்’ என்பதுதான் போராட்டத்தின் முக்கிய நோக்கமே.

இந்தப் போராட்டத்தை நிலைகுலைய வைப்பதற்காக, எதிர்க்கட்சிகளிடம் விளையாட்டுக் காட்டுவதுபோல தந்திர வேலைகள் சிலவற்றை மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு கையில் எடுத்தது. ஆனால், அவையெல்லாம் துளியும் பலன் கொடுக்கவில்லை. உறுதியாகக் களத்தில் நின்று போராடி வருகின்றனர் விவசாயிகள். வழக்கம்போல ஆன்ட்டி இன்டியன் உள்பட பல்வேறு சித்துவேலைகளைக் காட்டியும் விவசாயிகளிடம் மோடியின் பாச்சா பலிக்கவில்லை. இதற்கெல்லாம் காரணமே... தற்போது விவசாயிகள் முன்னெடுத்திருக்கும் போராட்ட வடிவமே! எப்போதுமே போராட்டம் என்பதில் ஆபத்து அதிகமே. அதிலும், கடந்த ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி-யின் நரேந்திர மோடி ஆட்சிக்கு எதிராக போராட்டம் என்பது கத்திமுனையில் நடப்பது போலத்தான். கொஞ்சம் பிசகினாலும், தேசவிரோதி முத்திரையைக் குத்தி மூலையில் உட்கார வைத்துவிடுவார்கள். இத்தகைய சூழலில், மத்திய அரசையே நிலைகுலைய வைக்கும் வகையில் போராட்டம் தீவிரமாகி வருகிறது. இதை விவசாயிகள் சாதித்தது எப்படி என்கிற கேள்விதான் எங்கும் எழுந்துகிடக்கிறது.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்

இந்நிலையில், டெல்லியில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவு சொல்லி தமிழகத்திலிருந்து விவசாய சங்கத்தினர், விவசாய ஆர்வலர்கள் என்று பலரும் சென்றவண்ணம் உள்ளனர். அவர்களில் சிலரிடம் பேசியபோது, விவசாயிகளின் போராட்ட வியூகம் பற்றி நன்றாகவே அறிந்துகொள்ள முடிந்தது.

டெல்லி சலோ... வெற்றி ரகசியம்... விவசாயிகளின் வியூகத்தால் விழிபிதுங்கும் பி.ஜே.பி அரசு!

தமிழக விவசாயிகள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நல்லா கவுண்டர் பேசும்போது, “டெல்லிக்குள் நுழையும் இடங்களில் தடுக்கப்படும் விவசாயிகள் அங்கேயே நின்றுகொள்கிறார்கள். முதலில் திகிரி ஏரியாவுக்குப் போயிருந்தோம். கடுமையான குளிரிலும் 17 கி.மீ தொலைவுக்கு டிராக்டர்களுடன் விவசாயிகள் குவிந்திருக் கிறார்கள். இந்தப் போராட்டத்தைக் கண்டு உள்ளுக்குள் நடுங்கும் மத்திய அரசு, பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. ‘இங்கு போராடுபவர்கள் விவசாயிகள் இல்லை, மூன்று நேரமும் உணவு உண்டு வசதியாக இருக்கும் இடைத்தரகர்கள்தாம்’ என்று அரசு சொன்னது விவசாயிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விவசாயி போராடினால் மூன்று வேளை உணவு உண்ணாமல்தான் போராட வேண்டுமா? நாங்கள் பட்டினி கிடந்து சாக வேண்டும் என அரசு நினைக்கிறதா என்று பலவிதமான கேள்விகள் அவர்களிடம் எழுகின்றன. வேளாண் சட்டம் திரும்பப் பெற வேண்டும் என்ற முடிவோடுதான் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

டெல்லி சலோ... வெற்றி ரகசியம்... விவசாயிகளின் வியூகத்தால் விழிபிதுங்கும் பி.ஜே.பி அரசு!

இந்த மாபெரும் போராட்டத்தை நடத்த விவசாயிகள் வீடு வீடாகச் சென்று திருமணத் துக்கு அழைப்பதுபோல அழைத்திருக்கிறார்கள். அதன் பிறகு, ஆங்காங்கே விவசாயிகள் கலந்து ஆலோசித்துப் போராட்ட யுக்தியை வடிவமைத் திருக்கிறார்கள். பஞ்சாப், ஹரியானா மாதிரியான மாநிலங்களில் பெரும்பாலும் கூட்டுக் குடும்பம்தான். அதனால் வீட்டுக்கு ஒருவர் போராடுவது, தேவையான உணவுகளைத் திரட்டுவது, சில நாள்களுக்குப் பிறகு, ஒருவருக்கு மாற்றாக அந்தக் குடும்பத்திலிருந்து இன்னொருவர் கலந்துகொள்வது, களத்தில் இருக்கும் விவசாயிகளின் நிலத்தை அந்தக் குடும்பமே சேர்ந்து கவனிப்பது எனப் பல யுக்திகளைக் கையாண்டு வருகிறார்கள். அங்கே பெரும்பாலும் கோதுமைதான் முக்கியப் பயிர். அதற்குத் தண்ணீர்ப் பாய்ச்சினால் மட்டும் போதுமானது. அதனால் அதற்கு மட்டும் அவர்கள் சென்று வருகிறார்கள். போராட்டக் களத்திலிருந்து ஒரு டிராக்டர் திரும்பி வருகிறது என விவசாயிகளிடமிருந்து ஒரு செய்தி மக்களுக்கு வந்தால், அதற்கு மாற்றாக இரண்டு டிராக்டர்கள் அனுப்பப்படுகின்றன.

அஞ்சலி செலுத்தும் நல்லா கவுண்டர் மற்றும் ஈசன்.
அஞ்சலி செலுத்தும் நல்லா கவுண்டர் மற்றும் ஈசன்.

டெல்லி எல்லையில் 10 கி.மீ தொலைவுக்கு இருந்த விவசாயிகள் கூட்டம், இப்போது 17 கி.மீ தொலைவுக்கு விரிந்திருக்கிறது. இன்னும் 6 மாதங்கள் ஆனாலும் இங்கிருந்து போகப் போவதில்லை என்பது அவர்களின் பேச்சில் தெரிகிறது. இப்போது ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் என நான்கு மாநில விவசாயிகள் இருக்கிறார்கள். மத்தியப் பிரதேச மாநில விவசாயிகளும், ஆந்திர மாநில விவசாயிகளும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

டெல்லி சலோ... வெற்றி ரகசியம்... விவசாயிகளின் வியூகத்தால் விழிபிதுங்கும் பி.ஜே.பி அரசு!

பேச்சுவார்த்தைக்கு இந்த விவசாயிகள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், வேளாண் சட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டு வந்தால்தான் பேசுவார்கள். இதுவரை 35 விவசாயிகள் போராட்டத்தின்போது இறந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது, நானும் கலந்துகொண்டேன். விவசாயிகள் கலைந்து போய்விடுவார்கள் என நினைப்பது அரசின் தவறான புரிதலைத்தான் காட்டுகிறது” என்றார் கோபத்துடன்.

டெல்லி சலோ... வெற்றி ரகசியம்... விவசாயிகளின் வியூகத்தால் விழிபிதுங்கும் பி.ஜே.பி அரசு!

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஈசன் பேசும்போது, “இளைஞர்கள் அதிக அளவில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த அரசியல் கட்சிகளும் இங்கு அனுமதிக்கப்படவில்லை. தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் அனைத்துக் கிராமங்களும் ஆதரவு கொடுத்தன. அதுபோல அருகில் உள்ள கிராம மக்கள் பால் முதல் உணவுப் பொருள்கள் வரை வழங்குகிறார்கள். சரியான வழிகாட்டுதல், முறையான கட்டமைப்புடன் அறவழியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. காவல்துறை பட்டாளமே டெல்லி மாநில எல்லைகளில் குவிக்கப்பட்டிருக்கிறது. போராட்டத்தைக் கையில் எடுக்கும் அளவுக்குக் கொண்டு வந்துவிட்ட மோடி அரசின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள், விவசாயிகள். மத்திய அரசு விவசாயிகளைக் கண்டுகொள்ளாமல் வியாபாரிகளுக்குச் சாதகமாகவே நடந்து கொள்கிறது. இதுவரை அவர்களுக்கான ஒரு தீர்வை மத்திய அரசு கொடுக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது” என்றார் ஆதங்கத்துடன்.

திருத்தம் வேண்டாம்; திரும்பப் பெற வேண்டும்!

டெ
ல்லி விவசாயிகள் போராட்டத்தில் களத்தில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரஜ்விந்தர் சிங்கிடம் பேசினோம். “எனக்கு நன்றாக தமிழ் பேச தெரியும். நான் முன்பு கோயம்புத்தூரில் இருந்தேன். அப்போது தமிழ் பேச கற்றுக்கொண்டேன்” என்றவர் அழகுத் தமிழில் பேசினார்.”இந்தப் போராட்டத்துக்கு முன்பே பஞ்சாபில் 2 மாதங்களுக்கும் மேல் போராட்டம் நடத்தினோம். கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 90,000 டிராக்டர்கள் இருந்தன. இப்போது எண்ணிக்கையைக் கணக்கிட முடியவில்லை. நாளுக்கு நாள் டிராக்டர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டுதான் இருக்கிறது. மத்திய அரசு எங்களை அவமானப்படுத்தும் விதமாகப் பேசிக் கொண்டிருக்கிறது. எல்லையில் சண்டையிட அரசுக்கு நாங்கள் தேவைப்படுகிறோம். ஆனால், எங்கள் உரிமைகளை கோரிக்கைகளாக வைக்கும்போது தீவிரவாதிகள் என்கிறார்கள். மத்திய அரசுக்குத் தனது தோல்வி தெரிந்துவிட்டது. அதை ஏற்க முடியாமல் பிடிவாதமாக இருக்கிறது. விவசாயிகள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுவிட்டால் அவர்கள் கொண்டுவந்திருக்கும் பல சட்டங்களால் பாதிக்கப்படுவோரும் வந்து அமர்ந்துவிடுவார்கள் என்று பயப்படுகிறது. அதற்காக எங்கள் உரிமையை நாங்கள் கேட்காமல் இருக்க முடியுமா? மத்திய அரசுத் திருத்தம் மட்டுமே செய்யச் சொல்கிறது, சட்டங்களைத் திரும்பப் பெறும் கோரிக்கைகளை வேண்டாம் என்கிறது.

ரஜ்விந்தர் சிங்
ரஜ்விந்தர் சிங்

இங்கு ஒரு வருடத்துக்கு, சமையல் செய்யத் தேவையான விறகுகள் இருக்கின்றன. மூன்று மாதங்களுக்குத் தேவையான தண்ணீரை இப்போதே இருப்பு வைத்திருக்கிறோம். உணவுப் பொருள்கள் மலைபோலக் குவிந்திருக்கின்றன. இதை வைத்தே நாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்பது புரியும். புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறும் வரைக்கும் எங்களது போராட்டம் தொடரும்.’டெல்லி மக்களுக்குப் பொருள்களைக் கொண்டு செல்லாமல் விவசாயிகள் தடுக்கின்றனர்’ என்கிற குற்றச்சாட்ட்டை வைக்கிறது மத்திய அரசு. ஆனால், ‘விவசாயிகள் தடுக்கிறார்கள்’ என்று மக்கள் யாரும் சொல்லவில்லை. எங்களுக்கு வைத்திருக்கும் பொருள்களைக் கொண்டுபோய் மக்களுக்குக் கொடுத்து உதவத் தயாராக இருக்கிறோம். எங்கள்மீது பழி சுமத்தும் எண்ணத்தைக் கைவிட்டு, எங்கள் கோரிக்கைக்குச் செவி சாய்க்க வேண்டும். அதற்காகத்தான் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். “ என்றார் ஆவேசமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism