Published:Updated:

`தூர்வாரிவிட்டு அணையைத் திறந்துவிடுங்கள்; கடைமடைக்குத் தண்ணீரே வரவில்லை!' வேதனையில் விவசாயிகள்!

குறுவை சாகுபடி குறித்த ஆய்வு கூட்டம்

35 சதவீதம் வரை வேளாண் இடுபொருட்களின் விலையேற்றம் அதிகரித் துள்ளது. அதற்கு ஏற்றவகையில் உற்பத்திப் பொருளுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில் தூர்வாரும் பணியை முன்னதாகவே தொடங்கி முடிக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

`தூர்வாரிவிட்டு அணையைத் திறந்துவிடுங்கள்; கடைமடைக்குத் தண்ணீரே வரவில்லை!' வேதனையில் விவசாயிகள்!

35 சதவீதம் வரை வேளாண் இடுபொருட்களின் விலையேற்றம் அதிகரித் துள்ளது. அதற்கு ஏற்றவகையில் உற்பத்திப் பொருளுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில் தூர்வாரும் பணியை முன்னதாகவே தொடங்கி முடிக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Published:Updated:
குறுவை சாகுபடி குறித்த ஆய்வு கூட்டம்

தஞ்சாவூரில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான ஆயத்தப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஐந்து அமைச்சர்கள், ஏழு மாவட்ட விசாயிகள் கலந்து கொண்டனர். மேட்டூர் அணை முன்னதாக திறக்கப்பட்ட நிலையிலும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை. கடந்த ஆண்டு பயிர்க்கடன் பெறுவதற்கான அடங்கல் சான்று கொடுப்பதில் குழப்பங்கள் நிகழ்ந்ததால் பல விவசாயிகளுக்கு சான்று கிடைக்கவில்லை அதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

குறுவை சாகுபடி குறித்த கூட்டத்தில் விவசாயிகள்
குறுவை சாகுபடி குறித்த கூட்டத்தில் விவசாயிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான ஆயத்தப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அதிகாரிகள் மற்றும் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது, ''கடந்த ஆண்டு விவசாய கடன் பெறுவதற்காக, விவசாயிகள் வி.ஏ.ஓக்களிடம் அடங்கல் சான்று பெற்று கொடுப்பதில் பல்வேறு குழப்பங்கள் நிகழ்ந்தது. அடங்கல் சான்று பெற முடியாததால் பல விவசாயிகள் பயிர் கடன் பெற முடியவில்லை. இந்த முறையாவது அதனை தீர்த்து விரைவில் அடங்கல் சான்று கிடைப்பதற்கான நடவடிக்கையினை எடுத்து அந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

குறுவை சாகுபடி குறித்த ஆய்வு கூட்டம்
குறுவை சாகுபடி குறித்த ஆய்வு கூட்டம்

விதை, உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்யும் விநியோக உரிமையை ரத்து செய்து, அரசு டெப்போக்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு உரிய காலத்தில் பயிர் கடன் வழங்கி சாகுபடி பணியை தொடங்க கூட்டுறவுத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பயிர் காப்பீடு திட்டத்தில் மாநில அரசு தனது பங்களிப்பை அதிகம் செலுத்துகிறது. பிற மாநிலங்களைப் போல் பயிர் காப்பீடு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். 35 சதவீதம் வரை வேளாண் இடுபொருட்களின் விலையேற்றம் அதிகரித் துள்ளது. அதற்கு ஏற்றவகையில் உற்பத்திப் பொருளுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.

குறுவை ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள்
குறுவை ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள்

இனி வரும் காலங்களில் தூர்வாரும் பணியை முன்னதாகவே தொடங்கி முடிக்க வேண்டும். கடந்த மே மாதம் 24-ம் தேதி மேட்டூர் அணை, அடுத்த சில தினங்களில் கல்லணையும் பாசனத்திறாக திறக்கப்பட்டது. ஆனால் இதுவரை கடைமடை வரை தண்ணீர் சென்றடையவில்லை. குறிப்பாக கல்லணை கால்வாயில் தண்ணீர் செல்லவில்லை. குறுவை தொகுப்பு திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் பகிர்ந்து வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை களைய வேண்டும். டெல்டா மாவட்டங்களில் சேமிப்புக் கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும்" என பேசினர்கள்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியதாவது, "தமிழக முதல்வர் மே மாதம் 24-ம் தேதி மேட்டூர் அணை திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து,டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி தொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மேற்கொண்டு வரும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள், குறுவை சாகுபடி ஆயத்த பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்தப் படுகிறது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், கடலூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் காவிரி நீர் பாயும் சில பகுதிகளிலும் இயல்பாக 3.30 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும்.

குறுவை சாகுபடி தொடர்பான கூட்டம்
குறுவை சாகுபடி தொடர்பான கூட்டம்

இந்த ஆண்டு பருவமழைக்கு முன்பே டெல்டா மாவட்டங்களில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4,964 கிலோமீட்டர் தூரத்துக்கு தூர்வாரப்பட்டுள்ளது. அதேபோல் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் , நிகழாண்டு மே 24-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட குறுவையில் 5.20 லட்சம் ஏக்கரும், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும் சாகுபடி பரப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு நிகழாண்டும் ரூ.61 கோடி மதிப்பிலான குறுவை தொகுப்பு திட்டம் செயல் படுத்தப்படும். இந்த திட்டத்தின் மூலம் 3 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். இதன் மூலமாக கடந்த ஆண்டு சாதனை அளவை விட இந்த ஆண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.நடப்பு குறுவைப் பருவத்துக்கு நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு,குறுவை சாகுபடிக்குத் தேவையான குறுகிய கால நெல் ரக விதைகள், உரங்கள், போன்ற இடுப் பொருட்களை போதிய அளவு இருப்பில் வைத்து, நெல் நடவு இயந்திரங்களைக் கொண்டு,விரைவாக நடவுப்பணியை மேற்கொள்ள வேளாண்மைத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

டெல்டா விவசாயம்
டெல்டா விவசாயம்

பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் நோக்கத்தில், கடைமடைப் பகுதிகளில் நேரடி நெல் விதைப்புப் பணி மேற்கொள்ள விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது'' என்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ''விவசாயிகள் கூறிய கருத்துகள் அனைத்தும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும். கடந்தாண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தவில்லை. நிகழாண்டு நிச்சயம் குறுவைக்கு பயிர் காப்பீடு திட்டம் உண்டு. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism