Published:Updated:

ஆந்திராவில் இருக்கிறது, தமிழ்நாட்டில் ஏன் இல்லை? ஆர்தர் காட்டனுக்கு மணிமண்டபம் கட்ட கோரிக்கை!

சர் ஆர்தர் காட்டன் பிறந்த நாள் விழாவில் விவசாயிகள்

ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் நீர் பாசன திட்டத்தையே வகுத்தவர். அதில் முல்லை பெரியார், மேட்டூருக்கும் இவர் தான் வரைபடத்தையே தயார் செய்தார். குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதை தடுக்க தடுப்புகள் வைத்தார்.

ஆந்திராவில் இருக்கிறது, தமிழ்நாட்டில் ஏன் இல்லை? ஆர்தர் காட்டனுக்கு மணிமண்டபம் கட்ட கோரிக்கை!

ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் நீர் பாசன திட்டத்தையே வகுத்தவர். அதில் முல்லை பெரியார், மேட்டூருக்கும் இவர் தான் வரைபடத்தையே தயார் செய்தார். குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதை தடுக்க தடுப்புகள் வைத்தார்.

Published:Updated:
சர் ஆர்தர் காட்டன் பிறந்த நாள் விழாவில் விவசாயிகள்

ஆங்கிலேயே பொறியாளரும், இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுபவருமான சர் ஆர்தர் காட்டனின் (Sir Arthur Cotton) 219-வது பிறந்த நாள் விழா கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கரை கீழணையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், சர் ஆர்தர் காட்டனின் பிறந்த நாளான மே 15-ம் தேதியை நீர்ப்பாசன மேலாண்மை தினமாகவும், அவருடைய வாழ்க்கை வரலாற்றை தமிழ்நாடு பாடநூல் கழகம் புத்தகமாக வெளியிடவும், அவருடைய சிறப்பினை அறிந்துகொள்ள அருங்காட்சியகம் அமைக்கவும் ஊர்வலமாக சென்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

சர் ஆர்தர் காட்டன் பிறந்த நாள் விழா
சர் ஆர்தர் காட்டன் பிறந்த நாள் விழா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிகழ்வை குறித்து கீழணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தியிடம் பேசியபோது, "பென்னி குயிக்குக்கு முல்லை பெரியாறில் மணி மண்டபம் அமைக்கும் போதே, ஆர்தர் காட்டனுக்கும் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை வைத்தோம். அரசு கண்டு கொள்ளவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கரிகாலனுக்கு மணிமண்டபம் அமைக்கும்போது கூட கல்லணைக்கு மேலாக தடுப்பு (ஷட்டர்) அமைத்தவர் சர் ஆர்தர் காட்டன் என்று புகழ்ந்து அறிக்கை வெளியிட்டார். ஆனால், அவருடைய அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் அளவிற்கு ஏதும் செய்யவில்லை. தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்பும்கூட நிறைய பேருக்கு மணிமண்டபம் அமைக்க நிதி ஒதுக்கினார்கள். ஆனால் ஆர்தர் காட்டனுக்கு ஒன்றும் செய்யவில்லை. இதுகுறித்து முதலமைச்சருக்கு மனுவும் கொடுத்தோம். அப்போதும் அரசு கண்டுகொள்ளவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பே பிறந்த நாள் விழா வைத்தோம். எல்லா கட்சி உறுப்பினர்களுக்கும் இதுகுறித்த செய்தியை அனுப்பினோம். சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் சட்டசபையில் பேசி அரசின் கவனத்தை ஈர்த்தார்.

விழாவில் பங்கேற்ற விவசாயிகள்
விழாவில் பங்கேற்ற விவசாயிகள்

சர் ஆர்தர் காட்டன் ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் நீர்ப்பாசன திட்டத்தையே வகுத்தவர். அதில் முல்லை பெரியாறு அணை, மேட்டூர் அணைக்கும் இவர்தான் வரைபடத்தையே தயார் செய்தார். குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதை தடுக்க பல தடுப்புகள் அமைத்தார். தண்ணீர் கடலுக்கு போவதை தடுக்க முக்கொம்பு என்ற இடத்தில் தடுப்பணை கட்டினார். மூன்றாண்டுகள் நீரோட்டத்தை கணக்கிட்டு அணைக்கரையில் கீழணையில் தண்ணீரைத் தேக்கி தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களின் பாசன வசதிக்காகவும், போக்குவரத்துக்காகவும் அணையை கட்டினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதுமட்டுமில்லாமல் சென்னை துறைமுகத்தைச் சீரமைத்தவரும் இவர்தான். பாம்பன் பாலத்தைச் சீரமைத்ததும் இவர்தான். இப்படி பல பணிகளுக்குச் சொந்தக்காரராக இருந்தார். கோதாவரி ஆற்றின் குறுக்கே தவளேஸ்வரம் என்ற இடத்தில் தடுப்பணையை கட்டியதற்காக இவருக்கு ஆந்திர அரசு ராஜமுந்திரி என்கிற இடத்தில் அருங்காட்சியகம் அமைத்து கௌரவித்துள்ளது.

ஊர்வலமாக
ஊர்வலமாக

இப்படிப்பட்ட சிறப்புகள் வாய்ந்த பொறியாளருக்கு சிலை அமைக்க வேண்டும், மணிமண்டபம் அமைக்க வேண்டும், அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பதே எங்களின் பத்தாண்டு கால கோரிக்கை. இதை அரசு உடனே செயல்படுத்த முன்வர வேண்டும்" என தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism