Published:Updated:

மரத்தடி மாநாடு: விவசாயிகளைச் சந்திக்கும் அதிகாரிகள்... மீண்டும் வருகிறதா கறுப்புச் சட்டம்..?

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

நீங்களும் பட்ஜெட் பத்தி பேச ஆரம்பிச்சுட்டீங்களா? யாரைக் கேட்டாலும் பட்ஜெட் பத்திதான் பேச்சா இருக்கு.

மரத்தடி மாநாடு: விவசாயிகளைச் சந்திக்கும் அதிகாரிகள்... மீண்டும் வருகிறதா கறுப்புச் சட்டம்..?

நீங்களும் பட்ஜெட் பத்தி பேச ஆரம்பிச்சுட்டீங்களா? யாரைக் கேட்டாலும் பட்ஜெட் பத்திதான் பேச்சா இருக்கு.

Published:Updated:
மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

ண்டியிலிருந்து செடிகளை இறக்கி, நிலத்தில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அவரைத்தேடி நிலத்துக்கு வந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி, ‘‘என்னய்யா... நர்சரி எதுவும் ஆரம்பிக்கப்போறியா? செடிகளைக் கொண்டு வந்து அடுக்கிக்கிட்டு இருக்கியே’’ என்றார் சிரித்தபடி. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது ‘காய்கறி’ கண்ணம்மா வும் வந்து சேர்ந்தார்.

‘‘என்ன வாத்தியாரே... ரெண்டு பேரும் சேர்ந்து புதுத்தொழில் ஆரம்பிச்சுட்டீங்களா? ஒரே செடிகளா இருக்கே...’’ என்ற கண்ணம்மாவிடம் ‘‘அவர் தோட்டத்துல மூலிகைச் செடி நடப்போறாரு. நானும் வீட்டுல கொஞ்சம் மூலிகைச் செடிகளை நடலாம்னு நினைச்சேன். இங்கயிருந்து கொண்டுபோனா என் பட்ஜெட்லயும் துண்டு விழுகாதுல்ல’’ என்றார் வாத்தியார்.

‘‘நீங்களும் பட்ஜெட் பத்தி பேச ஆரம்பிச்சுட்டீங்களா? யாரைக் கேட்டாலும் பட்ஜெட் பத்திதான் பேச்சா இருக்கு. அதுலயும் விவசாயத்துக்குத் தனி பட்ஜெட் தாக்கல் பண்றதால ஊரெல்லாம் அதைப் பத்திதான் பேசிக்கிறாங்க. விவசாயிகளுக்கு விளைபொருள் விற்பனை முக்கியமான பிரச்னையா இருக்கு. இதைத் தீர்க்க வேளாண்மை விற்பனைத்துறை ஆணையர் வள்ளலார், விவசாயிகள், வல்லுநர்கள், நிறுவனங்கள்னு பல தரப்பிலிருந்து ஆலோசனைகளைக் கேட்டுக்கிட்டு இருக்கிறாராம். இந்தத் துறையில உள்ள அதிகாரிகளை, விவசாயிகளோட வயலுக்கே நேரடியா போய் சந்திச்சு, அவங்களோட பிரச்னைகளைக் கேட்டுட்டு வாங்கன்னு ஆணையிட்டிருக்கிறாராம்’’ என்றார் ஏரோட்டி.

வள்ளலார்
வள்ளலார்


‘‘எப்படியோ நல்லது நடக்கட்டும். தமிழ்நாட்டுல முதல்தடவையா வேளாண் மைக்குத் தனி பட்ஜெட் தாக்கல் பண்ணப் போறாங்க. இதனால நிறையவே எதிர் பார்ப்பு உருவாகியிருக்கு. அதே நேரம் கடந்த தி.மு.க ஆட்சியில கொண்டு வந்த வேளாண் மன்றச் சட்டத்தை மறுபடியும் கொண்டு வர்ற வேலை நடந்துகிட்டு இருக்கிறதாச் சொல்றாங்க.

ஏற்கெனவே இந்தச் சட்டம் கொண்டு வர முயற்சி நடக்கும்போதே தமிழ்நாட்டுல பெரிய எதிர்ப்பு இருந்துச்சு. விவசாயிகள் போராட்டத்துனால சட்டத்தைச் செயல் படுத்தல அப்போதைய தி.மு.க அரசு. ஆனா, இப்ப மறுபடியும் தூசி தட்டிக்கொண்டு வர்றதுல முன்னாள், இந்நாள் வேளாண்துறை அதிகாரிகள் சிலபேர் முனைப்பா இருக்காங்களாம். அதுக்காக ஒரு குழுகூட அமைச்சு, அரசுகிட்ட பேச்சுவார்த்தை நடந்துகிட்டு இருக்குதாம்’’ என்றார் வாத்தியார்.

‘‘தனி பட்ஜெட் போட்டு விவசாயிகள் வயித்துல பால் வார்த்த தி.மு.க அரசாங்கம், அந்தக் கறுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்து வயித்துல நெருப்பு அள்ளிப் போடக் கூடாது. முதலமைச்சர்தான் இதுல தெளிவான முடிவு எடுக்கணும்’’ என்றார் ஏரோட்டி.

“முதலமைச்சருக்கு நீ கோரிக்கை வைக்குற மாதிரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஓர் அறிக்கை வெளியிட்டுருக் காருய்யா... அது என்னன்னா, மரவள்ளிக் கிழங்குல மாவுப்பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்கு. சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள்ல லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு மரவள்ளிக் கிழங்குதான் வாழ்வாதாரம். போன வருஷம் அ.தி.மு.க ஆட்சியில மாவுப்பூச்சித் தாக்குதலை ஆரம்பத்திலேயே கண்டுபிடிச்சோம். 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி மருந்து தெளிச்சு அதைக் கட்டுப் படுத்தினோம். அதேபோல இந்த அரசும் உடனடியா செயல்படணும்’’ என்றார் வாத்தியார்.

“மாவுப்பூச்சியைக் கட்டுபடுத்துற ஆலோசனைக்காக 2013-ம் வருஷம் திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி, பரமகல்யாணி கல்யாண மண்டபத்தில் ‘பசுமை விகடன்’ கொடுத்த பயிற்சியில நானும் கலந்துகிட்டேன். அங்க பேசுன நம்ம ‘பூச்சி’ செல்வம், ‘ஒரு லிட்டர் தண்ணிக்கு, ஒரு சிட்டிகைங்கிற (சுமார் 5 கிராம்) கணக்குல ஏதாவது ஒரு சோப்புத்தூளைக் கலந்து, மாவுப்பூச்சி தாக்கியிருக்குற செடிகள் மேல முதல்ல தெளிக்கணும். பிறகு, உங்க இஷ்டம்போல ஏதாவது ஒரு மூலிகைப் பூச்சிவிரட்டி, வேப்பங்கொட்டைக் கரைசல் அல்லது பரிந்துரைக்கிற ரசாயனப் பூச்சிக்கொல்லினு எதை வேணும்னாலும் தெளிக்கலாம்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு


மாவுப்பூச்சியோட முதுகுப் புறத்துல ஒரு மெழுகுப்பூச்சு இருக்கும். முதல்ல சோப்பு தண்ணியைத் தெளிக்கும்போது, அந்த மெழுகுப்பூச்சு கரைஞ்சுடும். அதுக்கப்புறம் பூச்சிவிரட்டியைத் தெளிச்சா... பூச்சிகள் ஒழியும். சோப்பு தண்ணியைத் தெளிக்காம, எவ்வளவு வீரிய பூச்சிக்கொல்லியை அடிச்சாலும், அதுங்கள கட்டுப்படுத்தவே முடியாது.

‘மீன் எண்ணெய் சோப்பு (ஃபிஷ் ஆயில் ரோசின் சோப்பு)னு ஒரு சோப்பு இருக்கு. இதை ஒரு லிட்டர் தண்ணிக்கு 5 கிராம்கிற அளவுல கலந்து தெளிச்சா... மாவுப்பூச்சி மாதிரியான சாறு உறிஞ்சுற பூச்சிகளை எளிதா கட்டுப்படுத்தலாம். இது இயற்கை பொருள்ங்கிறதால பக்க விளைவுகள் இருக்கிறதில்லை’னு சொன்னாரு. அவர் சொன்ன ஆலோசனை நல்ல தீர்வா இருக்குன்னு பல விவசாயிகள் சொல்றாங்க’’ என்றார் ஏரோட்டி.

“அருமையா சொன்னய்யா... இந்தப் பிரச்னைக்கு இன்னொரு தீர்வும் இருக்கு. அதை நான் கேட்டதும் பசுமை விகடன் நடத்தின நிகழ்ச்சியிலதான். போன வருஷம் நவம்பர் மாசத்துல, ‘மரவள்ளியில் மரவள்ளியில் மாவுப்பூச்சி மேலாண்மை’னு பசுமை விகடன்ல ஒரு ஆன்லைன் நிகழ்ச்சி நடத்துனாங்க. அதுல பேசுன தைவான்ல இருக்க உலக காய்கறி மையத்தின் பூச்சியியல் துறையின் தலைமை விஞ்ஞானி சீனிவாசன் ராமசாமி சொன்ன தகவலைச் சொல்றேன். ‘இதைத் தடுக்க ஒட்டுண்ணிதான் ஒரே வழி. உலக நாடுகள் அனாகைரஸ் லோபெஸி (Anagyrus Lopezi) என்ற ஒட்டுண்ணிமூலம்தான் மாவுப்பூச்சியைச் சமாளித்து வருகின்றன’னு சொன்னாரு’’ என்றார் வாத்தியார்.

“கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிச்ச மாதிரி இந்த மாவுப்பூச்சிக்கும் ஏதாவது ஒண்ணை விஞ்ஞானிகதான் சீக்கிரம் கண்டுபிடிச்சுகொடுக்கணும்’’ என்ற காய்கறி, “நான் ஒரு பூச்செடியை எடுத்துகிறேன்யா’’ என்றபடி ஒரு செடியை எடுத்துக்கொண்டு கிளம்ப முடிவுக்கு வந்தது மாநாடு.