Published:Updated:

விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை... நடுநடுங்க வைக்கும் உத்தரப் பிரதேசம்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை... நடுநடுங்க வைக்கும் உத்தரப் பிரதேசம்!

மரத்தடி மாநாடு

Published:Updated:
மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

பேருந்திலிருந்து இறங்கி, ஊரை நோக்கி நடந்து வந்துகொண்டிருந் தார்கள் ‘வாத்தியார்’ வெள்ளைச் சாமியும், ‘காய்கறி’ கண்ணம்மாவும். ‘‘என்னய்யா... தனியா உக்காந்து சைக்கிள்கூட பேசிக்கிட்டு இருக்க’’ நக்கலாகக் கேட்டார் காய்கறி. குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்த’ ஏரோட்டி’ ஏகாம்பரம், ‘‘சைக்கிள் பஞ்சராகிடுச்சு. அதான் பார்த்துட்டு இருக்கேன்’’ என்று சொல்ல ஆரம்பமானது அன்றைய மாநாடு.

‘‘தலைமைச் செயலர் இறையன்பு, முதலமைச்சரின் தனிச் செயலாளர் உதயச்சந்திரன் ரெண்டு பேரும் விவசாய விஷயங்கள்ல ரொம்ப தீவிரமா இருக்காங்க’’ என்றார் வாத்தியார்.

‘‘அதென்ன வாத்தியாரே... அவங்க ரெண்டு பேரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்றீங்க’’ தனது சந்தேகத்தைக் கேட்டார் காய்கறி.

‘‘தலைமைச் செயலகத்துல ஒவ்வொரு நாளும் நடக்குற மீட்டிங்ல அதிகாரிகளைக் காய்ச்சு எடுக்குறாங்களாம் இவங்க ரெண்டு பேரும். குறிப்பா, உதயச்சந்திரன் கூட்டம்னாலே அலர்றாங்களாம் அதிகாரிங்க. போன வாரம் விவசாயம் சம்பந்தமா ஒரு கூட்டம் நடந்திருக்கு. அதுல பேசுன உதயச்சந்திரன், ‘நான் கலெக் டரா இருந்தப்ப எப்படி இருந்திச்சோ அப்படி தான் இன்னும் இருக்கு விவசாயத்துறை. மற்ற துறைகள் வளர்ந்துகிட்டே இருக்கு. ஆனா, விவசாயத்துறை மட்டும் இன்னும் அப்படியே இருக்கு. இந்தத் துறையை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு்போகணும்னு யாருக் குமே தோணலையா? இத்தனை வருஷம் எப்படியோ... இனிமே அப்படி இருக்கக் கூடாது. முதலமைச்சர் முழு சுதந்திரம் கொடுத்திருக்காரு. இதைப் பயன்படுத்தி இப்பக்கூட இந்தத் துறையை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு போகலைன்னா இனிமே எப்பவும் கொண்டுபோக முடியாது. உங்களால முடிஞ்சா வேலையைப் பாருங்க... இல்லைன்னா வி.ஆர்.எஸ் கொடுத்துட்டுப் போயி டுங்க’னு காய்ச்சி எடுத்திட்டாராம்’’ என்றார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு


‘‘கேக்குறதுக்கே சந்தோஷமா இருக்கு. இது மாதிரி அதிகாரிங்க ஒருசிலர் இருக்குறதாலதான் சாமானிய மக்களுக்குக் கொஞ்சமாச்சும் நல்லது நடக்குது’’ என்றார் ஏரோட்டி.

“அத்தனை அதிகாரிகளும் ஒழுங்கா வேலை பார்த்தா நாடு சுபிட்சமாயிடும். யாரும் எதுக்காகவும் போராட வேண்டிய தேவையே இருக்காது’’ என்று காய்கறி சொல்ல,

“ஆத்தா... போராட்டம்னு சொல்லி கிலி கிளப்பாத. அந்த வார்த்தையைக் கேட்டாலே குலை நடுங்குது. உத்தரப்பிரதேச கொடூரத்தைக் கேட்ட பிறகு, உயிரே போயிடுச்சு’’ என்று வார்த்தைகளிலும் நடுங்கினார் ஏரோட்டி.

“ஏன்... என்னாச்சுய்யா, இந்த பயம் பயப்படுறே?’’ என்று காய்கறி அக்கறையாகக் கேட்டார்.

“விவசாயிகளுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணிச்சது கணக்கா பேசிட்டிருக்காரு பிரதமர் மோடி. ஆனா, அவரோட கட்சி ஆட்சி செய்யுற உத்தரப் பிரதேசத்துல, மத்திய அரசோட வேளாண் சட்டங்களுக்கு எதிரா போராடின விவசாயிகளை கார் ஏத்தி கொலை பண்ணியிருக்காங்க. அதுவும் பி.ஜே.பி-யோட அமைச்சர் மகனே இந்தக் கொலைகளைப் பண்ணியிருக்கறத கொதிக்கிறாங்க. இந்த விஷயத்தை யெல்லாம் நீ கேள்விப்படவே இல்லையா?’’ என்று இடையில் புகுந்தார் வாத்தியார்.

“அட அநியாயக்காரங்களா... உலகத்துல எங்கயுமே நடக்காத கொடுமையால்ல இருக்கு’’ என்று தானும் நடுங்கினார் காய்கறி.

உத்தரப் பிரதேச பிரச்னை
உத்தரப் பிரதேச பிரச்னை

தொடர்ந்த வாத்தியார், “கொல்லப் பட்ட விவசாயிகளோட குடும்பத்தைப் பார்த்து ஆறுதல் சொல்றதுக்காக போன இந்திரா காந்தியோட பேத்தி பிரியங்கா காந்தியையும், பேரன் ராகுல் காந்தியையும்கூட புடிச்சு உள்ள போட்டுட்டாங்க. ஆனா, கொலைகாரப் பாவிங்கள கண்டுக்கவே இல்ல. இந்தியா முழுக்க போராட்டம் கடுமையாகவே, வேற வழியில்லாம பிரியங்காவையும் ராகுலையும் ஆறுதல் சொல்ல அனுமதிச் சிருக்காங்க’’ என்றார்.

“ஆமாம், இதுக்கெல்லாம் பிரதமர் மோடி வாயே திறக்கலையா?’’ என்று கேட்டார் காய்கறி.

‘‘பிரதமர்னா சும்மாவா... எம்புட்டு வேலை இருக்கும். இப்பவும் ஓவர் டைம் வேலை பார்த்து, பொதுச ்சொத்துகளையெல்லாம் அம்பானி, அதானி, டாடானு விற்பனை செய்யுற வேலையை வேற தீவிரமா பார்த்துட்டு இருக்காரு. இதுக்கு நடுவுல விவசாயிகள் பிரச்னை பத்தியெல்லாம் பேசறதுக்கு நேரமிருக்காதுல்ல... பாவம்’’ என்று நக்கலாகச் சொன்னார் வாத்தியார்.

ஏரோட்டி, சைக்கிளுக்குப் பஞ்சர் போடுவதற்காகக் கடையை நோக்கி நகர, முடிவுக்கு வந்தது மாநாடு.