Published:Updated:

தீருமா... வரலாற்று வேதனை!

ஆசிரியர்
பிரீமியம் ஸ்டோரி
ஆசிரியர்

தலையங்கம்

தீருமா... வரலாற்று வேதனை!

தலையங்கம்

Published:Updated:
ஆசிரியர்
பிரீமியம் ஸ்டோரி
ஆசிரியர்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக ஜூன் 12-ல் தண்ணீர் திறந்துவிடப்படும். இந்தத் தடவை 15 நாள்கள் முன்னதாகவே திறந்துவிடப்பட்டிருக்கிறது. இதை, ‘சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக மே 24-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. டெல்டா விவசாயிகள் பெருமகிழ்ச்சி’ என்று வரலாற்றுச் சாதனையாகவே பேசி வருகின்றனர் தமிழக ஆட்சியாளர்கள்.

‘இதில் காட்டிய அக்கறையை, வரலாற்று வேதனையைத் தீர்த்துவைப்பதிலும் காட்டியிருக்கலாமே’ என்கிற புலம்பலொலி, வழக்கம்போல திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் அதையொட்டியுள்ள டெல்டா மாவட்டங்களிலிருந்து ஓங்கி ஒலித்தபடி இருக்கிறது. ‘தூர்வாருகிறோம்’ என்கிற பெயரில் ‘துட்டு வாருவது’ மட்டுமே வரலாறாக இருப்பதுதான் இந்தப் புலம்பலுக்குக் காரணம்.

இந்த ஆண்டு, ‘சிறப்புத் தூர்வாரும் திட்டம்’ என்கிற பெயரில் 4,964.11 கிலோமீட்டர் நீளத்துக்குப் பணிகளை மேற்கொள்வதற்காக 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ‘80 சதவிகித பணிகள் முடிந்துவிட்டன’ என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் அறிவித்தார். ஆனால், ‘50 சதவிகித பணிகளாவது முடிக்கப்பட்டிருக்குமா?’ என்பதே கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

மேட்டூரில் தண்ணீரைத் திறந்துவிட்ட முதல்வர், அடுத்த 10 நாள்களில் டெல்டா பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு என்பது அதிரடியாக இருக்க வேண்டும். ‘தகவல் தெரிவித்துவிட்டு ரெய்டுக்குச் செல்லும் கதை’போல, சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்ட ஆற்றங்கரைகளில் ஆய்வு செய்வதால் எந்தப் பலனும் இல்லை.

மேலே இருக்கும் புகைப்படத்தைப் பார்த்தாலே உண்மை நிலையைத் தெரிந்துகொள்ள முடியும். இதுபோல ஏகப்பட்ட நீர்வழித்தடங்கள் மண்மூடி, புதர் மண்டி, தூர்வாரப்படாத நிலையில்தான் இந்த நொடி வரையிலும் இருக்கின்றன.

உண்மையிலேயே ஆய்வு செய்வதுதான் முதல்வரின் நோக்கமென்றால், அதிரடியாக மீண்டும் ஓர் ஆய்வு நடத்தட்டும்... அது வரலாற்று வேதனையைத் தீர்ப்பதாகவும் இருக்கட்டும்.

- ஆசிரியர்

கார்ட்டூன்
கார்ட்டூன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism