Published:Updated:

உயர் நீதி!

கார்ட்டூன்
பிரீமியம் ஸ்டோரி
கார்ட்டூன்

தலையங்கம்

உயர் நீதி!

தலையங்கம்

Published:Updated:
கார்ட்டூன்
பிரீமியம் ஸ்டோரி
கார்ட்டூன்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘‘நீர்நிலைகளில் நிகழும் ஆக்கிரமிப்புகளைத் தடுத்தல்; திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துதல்; கடல், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கழிவுகளைக் கொட்டுவதை முற்றிலுமாகத் தடை செய்தல் ஆகிய மூன்று விஷயங்களில் சென்னை உயர் நீதிமன்றம் தீவிர கவனம் செலுத்தும்’’ என்று தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி சமீபத்தில் சாட்டையைச் சுழற்றியிருப்பது, பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. ஆனால், இவற்றுக்கெல்லாம் ஆட்சியாளர்கள் கொஞ்சம்கூட அசைவதில்லை என்பதுதான் யோசிக்க வைக்கிறது.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு என்பது அனைத்துயிர்களுக்கும் செய்யும் அநீதி. ஆனால், அந்தக் கட்சி-இந்தக் கட்சி, அந்த மதம்-இந்த மதம், அந்தச் சாதி-இந்தச் சாதி, அந்த அதிகாரி-இந்த அதிகாரி என்று எந்தவிதமான பேதமும் இல்லாமல் அனைவருமே, இந்த அநீதிகளில் பங்காளிகளாகவே இருக்கின்றனர். நீதிமன்றங்கள், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் என்று நீர்நிலைகளில் கட்டிக்கொடுத்து, நீதிபதிகளையும் குற்றவுணர்ச்சிக்கு ஆட்படுத்தி வைத்துள்ளனர்.

இத்தனைக்கும் நடுவே நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் பல காலங்களாகப் பல்வேறு நீதிபதிகளும் மனசாட்சியுடன் உத்தரவுகளைப் பிறப்பிக்கத்தான் செய்துள்ளனர். ஆனால், அவற்றையெல்லாம் அரசாங்கம் ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்பதுதான் வரலாறு. நீதிமன்றங்களுக்கே இப்படியென்றால்... நீர்நிலைகள் பாதுகாப்புக்காகக் குரல்கொடுக்கும் தன்னார்வலர்களின் கதி? வேறென்ன... வெட்டு, குத்து, கொலைதான்! தூத்துக்குடி, வேலூர், கரூர் என்று கொல்லப்பட்டவர்களின் பட்டியல் நீள்கிறது.

இத்தகைய கொடுஞ்சூழலில், ஜனநாயகத்தின் கடைசிப் புகலிடமாக இருக்கும் நீதிமன்றம், இந்த விஷயத்தை மீண்டும் அழுத்தமாகக் கையில் எடுத்திருப்பது ஆரோக்கியமான விஷயமே. அதேசமயம், கொஞ்சம்கூட அசைந்துகொடுக்காமல், ஆக்கிரமிப்புகளுக்குத் துணைபோய்க் கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் பதவிகளை உடனுக்குடன் பறிப்பதோடு அவர்களுக்கெல்லாம் அதிகபட்ச தண்டனையைக் கிடைக்கச் செய்ய வேண்டும். இதுதான் உண்மையிலேயே உயர் நீதியாக இருக்கும்!

கார்ட்டூன்
கார்ட்டூன்