Published:Updated:

"விரைவில் மின்சார டிராக்டர்கள், டிரக்குகள் அறிமுகப்படுத்தப்படும்!" - அமைச்சர் நிதின் கட்கரி!

டிராக்டர்கள்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மின்சார வாகனங்கள் தான் முக்கிய பங்காற்ற உள்ளது என நான் பேசிய போது, மக்கள் பலரும் இது சாத்தியமாகுமா என்பது போன்ற கேள்விகளை எழுப்பினர்.

"விரைவில் மின்சார டிராக்டர்கள், டிரக்குகள் அறிமுகப்படுத்தப்படும்!" - அமைச்சர் நிதின் கட்கரி!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மின்சார வாகனங்கள் தான் முக்கிய பங்காற்ற உள்ளது என நான் பேசிய போது, மக்கள் பலரும் இது சாத்தியமாகுமா என்பது போன்ற கேள்விகளை எழுப்பினர்.

Published:Updated:
டிராக்டர்கள்

வேகமாக இயங்கி வரும் உலகில், மனித செயல்களை எளிமையாக்க அனைத்தும் மின்னணு மயமாகி வருகிறது. இந்நிலையில் விவசாயத்திலும் வேலைகளை எளிமையாக்க போக்குவரத்து துறையின் அடுத்த முயற்சியாக மின்சார டிராக்டர்கள் மற்றும் டிரக்குகள் அறிமுகப்படுத்த உள்ளதாக நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

nitin gadkari
nitin gadkari

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மின்சார வாகனங்கள் தான் போக்குவரத்தில் முக்கிய பங்காற்ற உள்ளது என நான் பேசிய போது, மக்கள் பலரும் இது சாத்தியமாகுமா என்பது போன்ற கேள்விகளை எழுப்பினர். ஆனால் தற்போது மின்சார வாகனங்களுக்கான தேவை மக்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் மின்சார வாகனங்களே சாலை போக்குவரத்தில் முக்கியமான பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், எதிர்காலத்தில் எரிபொருளுக்கு மாற்றாக எத்தனால் மற்றும் மெத்தனாலும் பயன்படுத்தப்படும்.

ஏற்கனவே மின்சார ஸ்கூட்டர்கள், மின்சார கார்கள் மற்றும் மின்சார பஸ்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், விரைவிலேயே விவசாய மின்சார டிராக்டர்கள் மற்றும் டிரக்குகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது" என தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism