Published:Updated:

புதிய மின் திருத்த சட்ட மசோதா... விவசாயிகளை பாதிக்குமா?

மின் திருத்த சட்டம்
பிரீமியம் ஸ்டோரி
மின் திருத்த சட்டம்

சட்டம்

புதிய மின் திருத்த சட்ட மசோதா... விவசாயிகளை பாதிக்குமா?

சட்டம்

Published:Updated:
மின் திருத்த சட்டம்
பிரீமியம் ஸ்டோரி
மின் திருத்த சட்டம்

மத்திய அரசால் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய மின்சார சட்ட திருத்த மசோதா நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக்குள்ளானதால், அதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது மத்திய பா.ஜ.க அரசு.

அதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும்கூட இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார், தமிழ்நாடு மின்சாரம் மற்றும் எரிசக்தித்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. ‘புதிய மின் சட்ட மசோதா... மின் விநியோகத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இதனால் ஏழை எளிய மக்கள், விவசாயிகள், நெசவாளர்கள் எனப் பல தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்’ எனக் கூறியுள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசியுள்ள மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், `புதிய மின் சட்ட மசோதா, அனைத்து தரப்பு மக்களுக்கும் சாதகமான அம்சங்களையே கொண்டிருக்கிறது. இதனால் இலவச மின்சாரம் மற்றும் மானிய மின்சாரம் வழங்கு வதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது’ எனத் தெரிவித்திருக்கிறார்.

சட்ட மசோதா
சட்ட மசோதா



இதில் எதுதான் உண்மை? திருத்தியமைக்கப்பட்ட புதிய மின் சட்ட மசோதாவால் விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்டவர் களுக்கு பாதிப்புகள் ஏற்படுமா? பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜனிடம் கேட்டோம்.

“மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் மாநில அரசுகளின் உரிமைகளை முழுவதுமாகப் பறித்துவிட்டு, அவற்றை மத்திய அரசு கைக் கொள்வதற்காகவே புதிய மின் திருத்த சட்ட மசோதா உருவாக் கப்பட்டிருக்கிறது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டால், மின் உற்பத்தி மற்றும் விநியோகம் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படும். தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரமும், நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானிய விலை மின்சாரமும் நிறுத்தப்படும். வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படும். மத்திய அரசு, தற்போது இந்த மசோதாவைக்கொண்டு வர என்ன தேவை எழுந்தது. ஏன் இதைக் கொண்டு வர வேண்டும்?

ஒவ்வொரு மாநிலமும் அதனதன் கொள்கைகளுக்கேற்ப மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் செய்து வரும் நிலையில், இப்படியொரு மசோதாவை, மத்திய அரசு கொண்டு வருவதென்பது மாநில அரசின் உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானது. இந்த மசோதா மூலம் மின்சாரம் தனியார்மய மாக்கப்பட்டால் விவாயிகள், நெசவாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் பாதிக்கப் படுவார்கள் என்பதாலேயே இந்த மசோதா வைக் கடுமையாக எதிர்க்கிறோம்” என்கிறார் சுந்தரராஜன்.

“இந்த மசோதா முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது” என்கிறார் தமிழ்நாடு பா.ஜ.க. விவசாய அணி பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன். “மின்சாரத் துறையைப் பொறுத்தவரை... உற்பத்தி, விநியோகம் ஆகிய இரண்டுக்கும் பெரும் இடைவெளி இருக்கிறது. மேலும் இவைகளின் வரவு -செலவு கணக்குகள் வெளிப்படைத் தன்மையோடு இருக்க வேண்டும் என்பதற்காகவும் மின்சாரத் துறையை லாபகரமாக இயக்குவதற்காகவும்தான் இந்தப் புதிய மின் திருத்த சட்ட மசோதா கொண்டு வரப்படுகிறது. அனல் மின் உற்பத்திக்கு தேவைப்படக் கூடிய நிலக்கரியைக் கொள்முதல் செய்வதில் மிகப்பெரும் ஊழல் நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. 10,000 யூனிட் மின் உற்பத்தி செய்வதற்கு 1,000 டன் நிலக்கரி வாங்கினோம் என்று கணக்குக் காண்பிக்கப்படுகிறது. அந்தந்த மாநில அரசுகளால் கொள்முதல் செய்யப்படக்கூடிய நிலக்கரி முழுமையாகவும் முறையாகவும் பயன்படுத்தப்பட்டதா என்பதற்கான எந்தத் தரவுகளும் இல்லை. இதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

சுந்தரராஜன், ரவிச்சந்திரன்
சுந்தரராஜன், ரவிச்சந்திரன்

தமிழ்நாடு மட்டுமல்ல.. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இது பொருந்தும். மின்சாரத்துறை முறையாக திறமையாக நேர்மையாக இயங்கி வருகிறதென்றால் எப்படி தமிழ்நாடு மின்சாரத் துறைக்கு 3 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கும்.

உற்பத்திச் செலவை விடவும் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிக விலைக்கு மின்சாரம் விற்கப்படும் நிலையில் எப்படி நஷ்டம் ஏற்பட்டது. முறைப்படுத்தப்பட்ட, வெளிப்படைத்தன்மை வாய்ந்த அமைப்பாக இது மாற்றப்பட்டால்தான் இது பல்வேறு சிக்கல்களிலிருந்து விடுபட இயலும். இந்த மசோதா பா.ஜ.க ஆள்கிற மாநிலங்களுக்கும் பொருந்தும். எனவே, மத்திய பா.ஜ.க அரசுக்கு அரசியல் ரீதியான எந்த உள்நோக்கமும் இல்லை. மாநில அரசின் உரிமைகள் பறிபோகும், விவசாயத் துக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படும் என சொல்லப்படுவது உண்மையல்ல’’ எனத் தெரிவித்தார்.