Published:Updated:

`குடிமராமத்து பணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் யூக்கலிப்டஸ்!’ -புலம்பும் புதுக்கோட்டை விவசாயிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கண்மாய்களில்  செழித்து வளர்ந்துள்ள யூக்கலிப்டஸ்
கண்மாய்களில் செழித்து வளர்ந்துள்ள யூக்கலிப்டஸ்

கண்மாய் ஓரங்களிலும், உள்பகுதியிலும் வனத்துறை பல ஏக்கருக்கு யூக்கலிப்டஸ் மரங்களை நீர்வள ஆதாரத்துறையின் தடை இல்லா சான்று வாங்காமலேயே போட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகம் முழுவதும் பொதுப்பணித் துறை சார்பில் நடப்பு ஆண்டுக்கான குடிமாரமத்துப் பணிகள் தொடங்கியுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் ரூ. 21கோடி செலவில் நீர் நிலைகளைத் தூர்வாருவதற்கு உத்தரவிட்டுள்ளது. அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி பகுதிகளில் உள்ள ஏராளமான கண்மாய்களில் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது.

அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் பகுதிகளுக்குட்பட்ட ஏம்பல் சாத்தக்கண்மாய், ஏனங்கண் கண்மாய், இச்சிக்கோட்டை கண்மாய், சிலட்டூர் கண்மாய் போன்ற பகுதிகளில் குடிமராமத்துப் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இங்குள்ள கண்மாய்களில் பல ஏக்கர் பரப்பளவில் வனத்துறை, யூக்கலிப்டஸ் மரங்களைப் பயிரிட்டுள்ளனர். இதனால், குடிமராமத்து திட்டத்தின் மூலம், தூர்வாரும் பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பணிகள் நடைபெறும் 25 -க்கும் மேற்பட்ட கண்மாய்களில் வனத்துறை சார்பில் யூக்கலிப்டஸ் மரங்கள் போடப்பட்டுள்ளன. இந்த நிலையில், குடிமராமத்துப் பணிகள் தொடங்குவதற்கு முன்பே மரங்களை அகற்றக்கோரி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவசாயிகள் பல முறை மனு கொடுத்தும் வீண்தான் என்கின்றனர்.

`குடிமராமத்து பணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் யூக்கலிப்டஸ்!’ -புலம்பும் புதுக்கோட்டை விவசாயிகள்

இதுபற்றி ஏம்பல் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, "எங்க பகுதியில் உள்ள கண்மாய்கள் 30ஆண்டுகளில் முதல்முறையாகப் பலகட்ட போராட்டத்திற்குப் பிறகு குடிமராமத்துப் பணிகளில் சேர்க்கப்பட்டு, தற்போது பணிகள் நடைபெறுகிறது. இந்த நேரத்துலதான் கண்மாய் ஓரங்களிலும், உள்பகுதியிலும் வனத்துறை பல ஏக்கருக்கு யூக்கலிப்டஸ் மரங்களை நீர்வள ஆதாரத்துறையின் தடை இல்லாச் சான்று வாங்காமலேயே போட்டுள்ளது.

மரங்கள் எல்லாம் வேரோடு அகற்றப்பட்டால்தான் கண்மாய் தூர்வாரும் பணிகள் முழுமையாக முடிவடையும். முழுமையாக முடிக்கப்பட்டால்தான், கண்மாய்களில் தண்ணீரைத் தேக்கி விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியும். இந்தப் பணிகள் எல்லாம் தொடங்குவதற்கு முன்பாகவே மரங்களை அகற்றக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை" என்றனர் வேதனையுடன்.

இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,"ஒவ்வொரு கண்மாயிலும் எவ்வளவு ஏக்கர் யூக்கலிப்டஸ் நடப்பட்டிருக்கிறது. அது எந்த நிலைகளில் இருக்கிறது என்பது குறித்த விபரங்களைச் சேகரித்து, விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு