Published:Updated:

பெண்கள் உழவோட்டினால் பஞ்சமும், நோய்களும் வரும்: ஒரு `கட்டப் பஞ்சாயத்து' கிராமத்தின் கதை!

மஞ்சு

மஞ்சுவை உழவிடாமல் தடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் அங்குள்ள மக்களை எச்சரித்துள்ளனர்.

பெண்கள் உழவோட்டினால் பஞ்சமும், நோய்களும் வரும்: ஒரு `கட்டப் பஞ்சாயத்து' கிராமத்தின் கதை!

மஞ்சுவை உழவிடாமல் தடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் அங்குள்ள மக்களை எச்சரித்துள்ளனர்.

Published:Updated:
மஞ்சு

ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா மாவட்டத்தில் வசித்து வருபவர் 22 வயதான மஞ்சு ஒரன். இவர் சம்ஸ்கிருதத்தில் தன்னுடைய பட்டப்படிப்பை தொடர்கிறார். கொரோனா ஊரடங்கு நேரத்தில் விவசாயத்தில் கவனம் செலுத்தியவர், விவசாயத்தின் மூலம் கிடைத்த தொகையில் செகண்ட் ஹேண்டில் டிராக்டர் ஒன்றை வாங்கி, 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் காய்கறிகளை பயிரிட திட்டமிட்டு நிலத்தை உழுதுள்ளார்.

agriculture - pixabay
agriculture - pixabay

இந்நிலையில், அம்மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து மக்கள் பெண்கள் நிலத்தை உழுவது கெட்ட சகுனம் என்றும், அப்படி செய்தால் பஞ்சமும் கொள்ளை நோய்களும் வரும் எனவும் கூறி, அப்பெண் நிலத்தை உழுவதற்கு தடை விதித்ததோடு, அபராதமும் விதித்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த செய்தி ஊடகத்தில் வெளியானதை தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகம் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் நான்கு மணிநேரம் பேச்சு வார்த்தை நடத்தியது. அந்த கூட்டத்தில் சுமார் 250 கிராமத்தினர் கலந்துகொண்டனர். 'பெண்கள் நிலத்தை உழுதால் வறட்சி ஏற்படாது; அது கெட்ட சகுனமும் இல்லை' என அவர்களின் மூடநம்பிக்கையை விடுத்து அப்பெண்ணை நிலத்தை உழ அனுமதிக்குமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதனை தொடர்ந்து இப்பஞ்சாயத்து அதிகாரிகளும், கிராம மக்களும் அப்பெண்னை உழவு செய்ய கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதித்துள்ளனர்.

Agriculture (Representational Image)
Agriculture (Representational Image)
Photo by Sergio Camalich on Unsplash

இச்செய்தியை வெளியே கொண்டு வந்து தனக்கு உறுதுணையாக நின்ற உள்ளூர் அதிகாரிகளுக்கும், ஊடகத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார் மஞ்சு. அதோடு இந்த துறையிலேயே பயணிக்க போவதாகவும், இதனால் வேலை தேடி பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் வெளியே செல்லும் நிலை ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார் மஞ்சு.

இதன்பிறகு மஞ்சுவை உழவிடாமல் தடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் அங்குள்ள மக்களை எச்சரித்துள்ளனர்.