Published:Updated:

`விவசாயிகளால் காப்பீட்டு நிறுவனங்கள் மட்டும்தான் வளர்கின்றன!' குற்றம்சாட்டும் விவசாயிகள்

நான்கு மாநில விவசாயிகளின் கருத்தரங்கில் எழுப்பப்பட்ட கோரிக்கைகளும் தீர்வுகளும்.

கொரோனா காலத்தில் மட்டுமல்ல, எல்லா காலத்திலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் பிரச்னையை அரசுக்கு வலியுறுத்தும் வகையில் `விவசாயிகளின் துயரங்களும் தீர்வுகளும்' என்ற தலைப்பில் காணொலிக்காட்சி மூலமாகக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

இக்கருத்தரங்கில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரா தெலுங்கானாவைச் சேர்ந்த விவசாயப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் மத்திய, மாநில அரசுகளுக்கு எடுத்து வைத்தனர். இந்த நிகழ்வை நான்கு மாநில விவசாயிகளும் பார்த்தனர்.

கருத்தரங்குக்கு தலைமை வகித்த திராவிட தேசம் என்ற அமைப்பின் தலைவர் கிருஷ்ணராவ், ''விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க நதிகளின் இணைப்புத் திட்டம்தான் மிகவும் முக்கியமானது. இத்திட்டத்தை வெற்றிபெறச் செய்ய மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான டி.எம்.சி மழைநீர் கடலில் வீணடிக்கப்படுகிறது. இதற்கு ஒரு தீர்வாகக் கூடுதல் தடுப்பணைகளைக் கட்ட வேண்டிய அவசியம். அதற்குப் போதிய நிதியை மத்திய மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்வது அவசியமானது'' என்றார்.

கிருஷ்ண ராவ்
கிருஷ்ண ராவ்

முன்னாள் வேளாண் அமைச்சர் ஸ்ரீ வட்டே ஷோபனாத்ரிஸ்வர ராவ், ''விவசாயிகள் தற்போது பல சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். முக்கியமாக உற்பத்திக்கு போதிய விலை கிடைக்காமலும், பயிர்களுக்கு ஏற்படும் இழப்பு காரணமாகவும் பல சிக்கலுக்கு உள்ளாகிறார்கள். பல செயற்கைக்கோள்களை ஏவி முன்னேற்றம் அடைந்துவரும் மத்திய அரசு, விவசாயிகளுக்காக எந்தக் கருணையும் காட்டுவதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேளான் விஞ்ஞானி சுவாமிநாதன் குழுவின் அறிவுறுத்தல்களின்படி விவசாயிகளுக்கு போதிய மானியம் வழங்கப்படவில்லை. வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாத பெரிய தொழிலதிபர்களுக்கு பில்லியன் கணக்கான கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால், விவசாயிகள் பெற்ற சிறு கடனைத் திரும்ப செலுத்த முடியவில்லை என்றால் துன்புறுத்தப்படுகிறார்கள்.

ஸ்ரீ வட்டே ஷோபனாத்ரிஸ்வர ராவ்
ஸ்ரீ வட்டே ஷோபனாத்ரிஸ்வர ராவ்

என்னுடைய தலைமையிலான 400 விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்து சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தும், இதுவரை நிறைவேறவில்லை. வளர்ந்த அமெரிக்காவில் விவசாயிகள் தங்கள் வருமானத்தை, அரசுப் பணியாளர்களுக்கு இணையாக அதிகரிக்க ஊக்குவித்தும் விவசாயிககளின் பயிர்களுக்கு அரசாங்கம் காப்பீடு செலுத்தி வருகிறார்கள். ஆனால், நம் நாட்டில் காப்பீட்டு நிறுவனங்கள் மட்டும்தான் விவசாயிகளை வைத்து வளர்கின்றன'' என்று ஆதங்கத்துடன் பேசினார்.

சிபிஐ முன்னாள் இணை இயக்குநர் ஸ்ரீ லட்சுமிநாராயணா, ''உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் அமைக்கப்பட்டால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபகரமான விலையும் நுகர்வோருக்கு உணவு பாதுகாப்பும் கிடைக்கும். விவசாயிகளுக்கு தரமான பூச்சிக்கொல்லிகளை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும். அரசியல்வாதிகள் வெறும் வார்த்தைகளால் விவசாயிகளை ஏமாற்றிவிடக் கூடாது, தங்கள் விளைபொருள்களின் விலையைத் தாங்களாகவே தீர்மானிக்க வேண்டும்'' என்றார்.

ஸ்ரீலட்சுமிநாராயணா
ஸ்ரீலட்சுமிநாராயணா

தோட்டக்கலைத்துறை முன்னாள் இயக்குநர் சித்ராசெனன், தெலுங்கானா விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் கிரண் குமார், கோவை வேளாண் பல்கலைக்கழக முன்னாள் இயக்குநர் டாக்டர் செல்வராஜ் ஆகியோர் விவசாயிகள் தொடர்ந்து சந்தித்து வரும் பிரச்னைகள் பற்றியும் அதற்கான தீர்வுகளையும் பேசினார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு