Published:Updated:

கைம்மாறு!

தலையங்கம்

ஆசிரியர்

கைம்மாறு!

ஆசிரியர்

Published:Updated:
தலையங்கம்

கைம்மாறு!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

நெல் கொள்முதல் தொடங்கும் முன்பாக, விவசாயிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி, விவசாயிகளின் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது தமிழக அரசு.

மேட்டூர் அணையிலிருந்து இந்த ஆண்டு வழக்கத்துக்கு முன்னதாக மே மாதமே பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டதால், ஒரு மாதத்துக்கு முன்னதாகவே நெல் கொள்முதல் செய்வதையும் தொடங்கியுள்ளது தமிழக அரசு. இதற்காக ஆகஸ்ட் 24-ம் தேதி சென்னையில் வேளாண்மைத்துறை அமைச்சர், உணவுத்துறை அமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில்தான் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர் விவசாயிகள்! கூடவே, அவர்கள் வைத்த முக்கியமான கோரிக்கை, “நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும்” என்பதுதான்.

“நெல் மூட்டை ஒன்றுக்கு 60 ரூபாய் வரை லஞ்சம் வாங்கும் ஊழியர்கள், ‘சாக்கு, எடை இழப்பு, ஏற்றுதல், இறக்குதல், தூய்மைப்படுத்துதல் என பலவற்றுக்கும் சேர்த்துதான் இந்தத் தொகை’ என்று நியாயப்படுத்துகிறார்கள். அரசாங்கம் அடிப்படைக் கட்டமைப்புகள் செய்யாமல் இருப்பதால்தான், லஞ்சம் நீடிக்கிறது’’ என்று பிரச்னையின் மூலகாரணத்தை எடுத்து வைத்தார்கள் விவசாயிகள்.

‘‘முறைகேடுகள், ஊழலைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. கட்டமைப்பு வசதிகளுக்கும் விரைவில் ஏற்பாடு செய்கிறோம்’’ என்று பதில் கொடுத்தார் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி.

உண்மைதான்... லஞ்சத்தை ஒழிக்கும் வகையில் ஆங்காங்கே ‘குத்தூசி கொள்ளையர்கள்’ கைது செய்யப்படும் செய்திகள் வருகின்றன. அதேசமயம், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்கி, ‘ஒரு பைசாகூட லஞ்சம் தராமல் என் நெல்லை விற்றேன்’ என்று அத்தனை விவசாயிகளும் சொல்லக்கூடிய சூழலை தமிழக அரசு உருவாக்க வேண்டும். அதுதான், நமக்கு சோறுபோடும் விவசாயிக்கு நாம் செய்யக்கூடிய பெரிய கைம்மாறாக இருக்கும்!

- ஆசிரியர்செய்தி: நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது- உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி

கார்ட்டூன்
கார்ட்டூன்