Published:Updated:

தென்னிந்திய, வட இந்திய விவசாயிகள் இணைய வேண்டும்!

மாநாட்டில் விவசாயப் பிரதிநிதிகளுடன் ராஜேந்திர சிங்
பிரீமியம் ஸ்டோரி
மாநாட்டில் விவசாயப் பிரதிநிதிகளுடன் ராஜேந்திர சிங்

கூட்டம்

தென்னிந்திய, வட இந்திய விவசாயிகள் இணைய வேண்டும்!

கூட்டம்

Published:Updated:
மாநாட்டில் விவசாயப் பிரதிநிதிகளுடன் ராஜேந்திர சிங்
பிரீமியம் ஸ்டோரி
மாநாட்டில் விவசாயப் பிரதிநிதிகளுடன் ராஜேந்திர சிங்

ந்தியாவின் மாறுபட்ட காலநிலை, அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரச் சூழல் காரணமாக, வடக்கு, தெற்கு என்று அனைத்து மாநிலங்களும் பிரிந்து நிர்வாகச் சிக்கல்களுக்குள் சிக்கித் தவித்து வருகிறது.இதில் வேளாண் மக்களின் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் நிரந்தர அரசியல் மற்றும் நிர்வாகத் தீர்வுகளை வேண்டி சென்னையில், கடந்த ஆகஸ்ட் 20, 21, 22 ஆகிய தேதிகளில் ‘வேளாண் பிரச்னைகள் மீதான இந்திய மாநிலங்களின் பிரதிநிதிகள் மாநாடு’ நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டு விவசாயப் பிரதிநிதிகள், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, பீகார், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயப் பிரதிநிதிகளும் பங்கெடுத்தனர். இந்தத் தேசிய ஆய்வரங்கத்திற்குத் தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் தலைமை வகித்தார்.

மாநாட்டில் பேசிய ராஜேந்திர சிங், “கன்னியாகுமரி முதல் டெல்லி வரை, விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து யாத்திரை செல்லவேண்டும். அரசுக்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைக் காட்டவேண்டும். அனைவரும் இணைந்து நின்றாலே, ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் காணமுடியும். இந்தியாவின் தெற்கிலுள்ள விவசாயிகளும் வடக்கிலுள்ள விவசாயிகளும் எந்தப் பாகுபாடுகளுமின்றி ஒன்றிணைய வேண்டும். அதன்மூலம் நாம் விரைவில் வெற்றியடைய முடியும்” என்றார்.

மாநாட்டில் விவசாயப் பிரதிநிதிகளுடன் ராஜேந்திர சிங்
மாநாட்டில் விவசாயப் பிரதிநிதிகளுடன் ராஜேந்திர சிங்


கேரள மாநிலம் சார்பாக மாநாட்டில் கலந்துகொண்ட வயநாடு ஜான், “பாசிஸ்ட்களை நம் தலைமுறையும் நமக்கு அடுத்த தலைமுறையும் வீழ்த்தவில்லையென்றால், அவர்களுக்கு அடுத்து வரும் தலைமுறை அவர்களை வீழ்த்துவார்கள் என்ற நிலைப்பாட்டையே இன்று பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் எடுத்துள்ளார்கள். கேரளாவில் செப்டம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் விவசாயச் சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள் அனைத்தும் ஒன்றுகூடி, மாநில அளவிலான விவசாயப் பிரச்னைகளை முழுமையாக விவாதித்து, ஒரு போராட்டத்தை வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

கேரளாவில் பா.ஜ.க சட்டமன்றத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டிலும் சொற்பம்தான். கர்நாடக விவசாயிகளிடம் நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்தால், கர்நாடகாவிலிருந்தும் அவர்களை வெளியேற்ற முடியும். இது நடந்துவிட்டால், மொத்த தென்னிந்தியாவும் பாசிசம் இல்லாததாக மாறிவிடும்.

ராஜேந்திர சிங் யாத்திரை செல்வது குறித்துச் சொல்லியிருந்தார். நவம்பர் 26-ம் தேதியன்று, டெல்லி போராட்டத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, விவசாயிகள், உழைப்பாளிகள் என்று அனைவரும் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை மனிதச் சங்கிலி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். நரேந்திர மோடி, இந்தப் போராட்டத்தைப் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் மட்டும்தான் மேற்கொள்கிறார்கள் என்கிறார். இந்தியாவின் மொத்த விவசாயிகளும் அவர்களோடு இணைந்திருக்கிறார்கள் என்பதை இதன்மூலம் உணர்த்துவோம்” என்று கூறினார்.

சுவாமிமலை  விமல்நாதன்
சுவாமிமலை விமல்நாதன்


இந்த மாநாடு குறித்துப் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன், “இந்திய அரசு எந்தவொரு விவசாயப் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசாமல், விவசாயிகளின் நலனுக்கு எதிராகவும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் இயற்றிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் மாதக்கணக்கில் விவசாயிகள் போராட்டம் நடந்துவருகின்றனர். பனி, மழை எதையும் பொருட்படுத்தாமல், அவர்கள் நடத்தும் போராட்டங்கள் குறிப்பிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளால் மட்டுமே நடத்தப்படுகிறது, தென்னிந்தியாவிலோ நாட்டின் மற்ற மாநிலங்களிலோ இதற்கு ஆதரவில்லை என்ற கருத்தை மத்திய அரசு மக்களிடையே பரப்புகிறது. இந்தவேளையில், வட இந்திய விவசாயிகள் தங்களுக்காக மட்டும் போராடவில்லை, நாடு முழுக்கவுள்ள விவசாயிகளுக்காகவும், அடுத்த தலைமுறை விவசாயிகளுக்காகவும் போராடுகிறார்கள்.இந்திய வேளாண்மைக்கு எதிரான மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு என்பதைத் தெளிவுபடுத்த இந்த மூன்று நாள் மாநாட்டை, தென்னிந்தியாவிலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளும் சேர்ந்து நடத்துகிறோம்.

இந்த மாநாட்டில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயத் தலைவர்கள் இங்கு கூடியுள்ளோம். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை இந்திய அரசு திரும்பப் பெறவேண்டும். அதோடு மின் திருத்த சட்டம் என்ற பெயரில், நாடு முழுவதுமுள்ள விவசாயிகளுக்கு, விவசாய உற்பத்திக்காகக் கிடைக்கும் மின்சார மானியத்தை இழக்கவேண்டிய பேரபாயம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்தும் விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டியிருப்பதால், அந்தச் சட்ட திருத்தத்தையும் இந்திய அரசு உடனடியாக ரத்துச் செய்யவேண்டும்” என்றார்.