Election bannerElection banner
Published:Updated:

நாமக்கல்: `விவசாயிகளின் வாக்குகளே ஆயுதம்; ஓட்டளிப்பதே போராட்டம்!' - களமிறங்கும் விவசாய சங்கங்கள்

பேட்டியளிக்கும் தெய்வசிகாமணி
பேட்டியளிக்கும் தெய்வசிகாமணி ( நா.ராஜமுருகன் )

தமிழக அரசு, கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய நகைக் கடன், பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்திருக்கிறது. 12,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் 90 சதவிகிதம் பேர் அ.தி.மு.க-வினர்தான்.

``வரும் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஒரு விடிவு காலம் ஏற்படும். போராடிப் போராடி அலுத்துப்போன விவசாயிகளுக்கு, ஓட்டு மூலம் ஒரு போராட்டம் நடத்தும் நோக்கில் மஹா பஞ்சாயத்துக் கூட்டம் என்று ஒன்று, திருச்சியில் வரும் மார்ச் 6-ம் தேதி சனிக்கிழமை நடக்க இருக்கு. அதில், 250 முக்கிய விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு முக்கிய முடிவு எடுக்க இருக்கோம்" என்று தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநில தலைவர் பி.கே.தெய்வசிகாமணி அதிரடியாகத் தெரிவித்திருக்கிறார்.

பேட்டியளிக்கும் தெய்வசிகாமணி
பேட்டியளிக்கும் தெய்வசிகாமணி
நா.ராஜமுருகன்

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் செய்தியாளர் சந்திப்பு, நாமக்கல் பரமத்தி ரோடு பகுதியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.தெய்வசிகாமணி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்,

``வரும் 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஒரு விடிவு காலம் ஏற்படுத்தும். வரும் மார்ச் 6-ம் தேதி சனிக்கிழமை, திருச்சி ரவி மினிஹாலில், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில், போராடிப் போராடி அலுத்துப்போன விவசாயிகளுக்கு ஓட்டு மூலம் நடத்தும் ஒரு போராட்டம் நடத்தும் நோக்கில் மஹா பஞ்சாயத்து கூட்டம் என்று கூட்டி, அதில் 250 முக்கிய விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டு முக்கிய முடிவு எடுக்கவிருக்கிறோம். அதில், விவசாயிகளுக்கு நன்மை செய்தவர்களுக்கு இந்த மஹா பஞ்சாயத்து கூட்டம் நல்ல முடிவு எடுக்கும். விவசாயிகளுக்கு எதிராக மத்திய மோடி அரசு வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது.

பேட்டியளிக்கும் தெய்வசிகாமணி
பேட்டியளிக்கும் தெய்வசிகாமணி
நா.ராஜமுருகன்

அதற்காகப் போராடிய விவசாயிகளை அவர் கண்டுகொள்ளவே இல்லை. நானும் டெல்லி சென்று விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் ஆறு நாள்கள் கலந்துகொண்டேன். அப்போது, விவசாயிகளின் வேதனை புரிந்தது. ஆனால், விவசாயிகளையும் அவர்களின் நியாயமான போராட்டத்தையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாத மோடி, அதற்குரிய விலையைக் கொடுத்தே தீர வேண்டும். விவசாயிகள் அடிப்படைப் பிரச்னைகளுக்காக எவ்வளவு போராட்டங்கள் நடத்தினாலும், அரசாங்கங்கள் அவர்களைக் கண்டுகொள்வதில்லை.

தேர்தல் நடத்தை விதி: தீவிரமடையும் கண்காணிப்பு - விவசாயியின் பணம் பறிமுதல்!

பேச்சுவார்த்தை என்று அழைத்து, விவசாயிகளின் போராட்டங்களை பிசுபிசுத்துப் போகவைக்கிறார்கள். போராட்டங்களால் எதையும் செய்ய முடியாது என்று இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகள் சோர்ந்துபோயிருக்கிறார்கள். எனவே, எங்களது வாக்குகளையே ஆயுதங்களாக்க முடிவு செய்திருக்கிறோம். ஏற்கெனவே, பல அமைப்புகள் ஆதரவு தருவதற்குப் பேசிவருகிறார்கள். விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்கும் கட்சிகளுக்கு ஆதரவு தரவிருக்கிறோம். நாங்க யாரை ஆதரிக்கிறோம் என்பதை திருச்சியில் வரும் 6-ம் தேதி முடிவுசெய்யவிருக்கிறோம். பிரிந்து கிடக்கும் விவசாயிகளை ஒன்றுதிரட்டி, அவர்களின் வாக்குகளையே ஆயுதமாக்க இருக்கிறோம்.

பேட்டியளிக்கும் தெய்வசிகாமணி
பேட்டியளிக்கும் தெய்வசிகாமணி
நா.ராஜமுருகன்

தமிழக அரசு, கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய நகைக் கடன், பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது. 12,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதில் பலனடைந்தவர்களில் 90 சதவிகிதம் பேர் அ.தி.மு.க-வினர்தான். சாதாரண விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில்தான் கடன் வாங்கியிருக்கிறார்கள். அதனால், அனைத்துக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். இதனால், நாங்க தி.மு.க-வுக்கு ஆதரவளிக்கப் போறோம்னு சொல்றது தவறு. கடந்த சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகளுக்கு ஆதரவாக வாக்குறுதிகளை வழங்கிய மக்கள் நலக் கூட்டணிக்கு எங்கள் ஆதரவைத் தந்தோம். அதேபோல், வரும் தேர்தலில் விவசாயிகளுக்குத் தோழனாக இருக்கும் கட்சிக்கு எங்கள் ஆதரவை வழங்குவோம்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு