Published:Updated:

விவசாயிகள் இனி இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்! தமிழக அரசின் விதிமுறைகள் இதுதான்...

வண்டல் மண் எடுக்கும் பணி

வண்டல் மண்ணை எடுக்க விரும்பும் விவசாயிகள், தங்கள் விளை நிலங்களுக்கான 10 (1) சிட்டா அல்லது அடங்கல் நகலுடன் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த 20 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அனுமதி வழங்கப்படும்.

விவசாயிகள் இனி இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்! தமிழக அரசின் விதிமுறைகள் இதுதான்...

வண்டல் மண்ணை எடுக்க விரும்பும் விவசாயிகள், தங்கள் விளை நிலங்களுக்கான 10 (1) சிட்டா அல்லது அடங்கல் நகலுடன் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த 20 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அனுமதி வழங்கப்படும்.

Published:Updated:
வண்டல் மண் எடுக்கும் பணி

ஏரி மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து தங்கள் நிலங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே தமிழக சட்டமன்ற பேரவையில், ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை, மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அனுமதியை பெற்று விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என, 2021 - 2022 வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

விளை நிலம்
விளை நிலம்

இத்திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, சமீபத்தில் தமிழக அரசின் புவியியல் மற்றும் கனிம வளத்துறை வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், "சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை தவிர, மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்ட ஏரி மற்றும் குளங்களில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண்ணை எடுத்து, தங்கள் நிலங்களுடைய மேம்பாட்டுக்காக பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதி 1959, விதி 12(2) இல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எனவே, விவசாயிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அனுமதி பெற்று நஞ்சை நிலத்தின் பயன்பாட்டுக்கென ஹெக்டேர் ஒன்றுக்கு 185 கன மீட்டர் வண்டல் மண்ணும், புஞ்சை நிலத்தின் மேம்பாட்டுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 222 கன மீட்டர் வண்டல் மண்ணும் ஏரி மற்றும் குளங்களில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்து மணலை எடுக்க, மாவட்ட ஆட்சியரிடம் இருந்து இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை அனுமதி பெற வேண்டும்.

வண்டல்
வண்டல்

வண்டல் மண்ணை எடுக்க விரும்பும் விவசாயிகள், தங்கள் விளை நிலங்களுக்கான 10 (1) சிட்டா அல்லது அடங்கல் நகலுடன், மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த 20 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அனுமதி வழங்கப்படும்.

மேலும், ஏரி மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண்ணை எடுத்து பயன்படுத்துவதற்கு விவசாயிகள் சுற்றுச்சூழல் துறையின் சான்றிதழைப் பெறத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.