Published:Updated:

பேரணி, பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள்; டெல்லியை அதிர வைத்த உழவர் தின விழா!

டெல்லியில் உழவர் தின விழா

30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் விவசாயப் போராட்டங்களில் பங்கேற்று, காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிலும் தடியடியிலும் காயம்பட்டு உயிரிழந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயத் தியாகிகளின் நினைவாக இந்த `உழவர் தினம்' நினைவுகூரப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் ஜுலை 5-ம் தேதி தமிழகத்தில் உழவர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சிறப்பாகக் கொண்டாடும் விதமாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் தனித்தனியாக பேரணி, பொதுக்கூட்டங்களை நடத்தினர்.

இதில் முத்தாய்ப்பாக, பேரூர் கந்தசாமி தலைமையிலான சாதி மதம் கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் 150 பெண்கள் உட்பட 1,500 பேர் தனி ரயில் ஏற்பாடு செய்து டெல்லி சென்றனர். அங்கு உழவர் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினார்கள். பெண்கள் நடத்திய தமிழக பாரம்பர்ய கலையான ஒயிலாட்டம் டெல்லி வாசிகளை வெகுவாகக் கவர்ந்தது.

புதுடெல்லி

டெல்லிக்கு செல்லும் விவசாயிகள்
டெல்லிக்கு செல்லும் விவசாயிகள்
கார்த்திக் கிருஷ்ணா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெல்லியில் விழிப்புணர்வு
டெல்லியில் விழிப்புணர்வு
கார்த்திக் கிருஷ்ணா
டெல்லியில் ஒயிலாட்டம்
டெல்லியில் ஒயிலாட்டம்
கார்த்திக் கிருஷ்ணா
டெல்லியில் விழிப்புணர்வு
டெல்லியில் விழிப்புணர்வு
கார்த்திக் கிருஷ்ணா
டெல்லியில் விழிப்புணர்வு
டெல்லியில் விழிப்புணர்வு
கார்த்திக் கிருஷ்ணா
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோவை

உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் கே.செல்லமுத்து தலைமையில் கோவையை அடுத்த தொண்டாமுத்தூரில் உழவர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.

உழவர் உழைப்பாளர் கட்சி  சார்பில் நடைபெற்ற உழவர் தின விழா
உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் நடைபெற்ற உழவர் தின விழா
கோவை தொண்டாமுத்தூரில் உழவர் தின விழா
கோவை தொண்டாமுத்தூரில் உழவர் தின விழா

தர்மபுரி சின்னசாமி தலைமையில் செயல்படும் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி மாநகரிலும், என்.எஸ்.பி.வெற்றி தலைமையிலான கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் கரூர் நகரிலும் உழவர் தின விழாவைக் கொண்டாடினர்.

திருவண்ணாமலை

உழவர் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், வல்லத்தில் இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் வேட்டவலம் மணிகண்டன் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் நடைபெற்ற
 கூட்டம் | உழவர் தின விழா
இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டம் | உழவர் தின விழா

வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமையிலான தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பல்லடம், உடுமலை, பொள்ளாச்சி, குடிமங்கலம் உள்ளிட்ட 15 ஊர்களில் உழவர் தினவிழாவை நடத்தினார்கள்.