Published:Updated:

`பாரம்பர்ய விதைகளுக்கான உரிமைகள் பறிக்கப்படும்!’ - மாதிரி விதைகள் சட்ட மசோதாவால் கலங்கும் விவசாயிகள்

விதைகள்
விதைகள்

`இம்மசோதா நிறைவேற்றப்பட்டால் 2001-ல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களால் கொண்டு வரப்பட்டு, செயல்பாட்டில் உள்ள சட்ட நடைமுறைக்கு எதிரானதாக அமையும்.’

``மத்திய அரசு கொண்டுவர உள்ள புதிய மாதிரி விதைகள் சட்ட மசோதாவைக் கைவிட வேண்டும்" என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

விதைகள்
விதைகள்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பருத்தியூர் கிராமத்தில் கிரியேட், தாய் மண் உழவர் உற்பத்தியாளர் குழுவுடன் இணைந்து செயல்படும் லஷ்மி பாரம்பர்ய விதை நெல் ஆராய்ச்சி பண்ணையை தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேரில் பார்வையிட்டார்.

அதன்பின் பி.ஆர்.பாண்டியனிடம் பேசியபோது, ``தமிழகத்தில் பாரம்பர்ய விவசாய முறைகளைப் பின்பற்றி இயற்கை முறையில் மருத்துவக் குணம் கொண்ட காட்டுயாணம், தூய மல்லி, சீரகசம்பா உள்ளிட்ட 10 வகையான நெல் வகைகளை நெல் ஜெயராமன் நினைவாக ஆராய்ச்சி முறையில் இங்கு சாகுபடி செய்துள்ளனர். முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் உரங்களைக் கொண்டு, பூச்சி தாக்குதலுக்கு இடமின்றி, நல்ல மகசூல் கிடைக்கும் நிலையில், தூய்மையாக சாகுபடி செய்துள்ளது பாராட்டுதலுக்குரியது.

இதை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ளதோடு, வாரம் ஒருமுறை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தும் வருகின்றனர். எனவே, தமிழக அரசு இயற்கை விவசாயத்தை மேம்படுத்த தனிக் கொள்கை திட்டம் உருவாக்கி தனித்துறையை ஏற்படுத்தி மேம்படுத்த வேண்டும்.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

இந்த நிலையில், பாரம்பர்ய விவசாயத்திற்கெதிராக மத்திய அரசு புதிய மாதிரி விதைகள் சட்ட மசோதாவை தயார் செய்து நாடாளுமன்ற ஒப்புதல் பெற காத்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இம்மசோதா நிறைவேற்றப் பட்டால் 2001-ல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களால் கொண்டு வரப்பட்டு, செயல்பாட்டில் உள்ள சட்ட நடைமுறைக்கு எதிரானதாக அமையும். விவசாயிகளின் பாரம்பர்ய விதைகளுக்கான அனைத்து உரிமைகளும் பறிக்கப்படும்.

மரபணு மாற்றம் செய்த விதைகள் சந்தைக்கு விற்பனைக்கு வரும். பாரம்பர்ய விதைகள் பயன்பாடு தடுக்கப்படும். நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைக்கு எதிரானது. புதிய விதைகள் குறித்து கலந்துரையாடலோ, எந்தவொரு அனுமதியோ தேவையில்லை, விற்பனையாளர்களுக்கு லாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படவே இது வழிகோளும்.

விதை பழுதானாலோ, மகசூல் இழப்பு ஏற்பட்டாலோ சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் நேரடியாக இழப்பீடு பெற முடியாது. நுகர்வோர் நீதிமன்றங்களை அணுக வேண்டும். புதிய சட்டம் குறித்து சந்தேகமோ, அச்சமோ எழுப்ப மக்களுக்கான அதிகாரம் மறுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்திய விவசாயிகளுக்கு எதிராக எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரப்படவுள்ள இம்மசோதாவை கைவிட மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மறுக்கும் பட்சத்தில் தீவிரமான போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரிக்கிறோம்" என்றார்.

விதைகள்
விதைகள்

புதிய சட்டம் குறித்து சந்தேகமோ, அச்சமோ எழுப்ப மக்களுக்கான அதிகாரம் மறுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்திய விவசாயிகளுக்கு எதிராக எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரப்படவுள்ள இம்மசோதாவை கைவிட மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மறுக்கும் பட்சத்தில் தீவிரமான போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரிக்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு