Published:Updated:

விவசாயி உண்ணாவிரதப் போராட்டம்... கல்குவாரியை மூட உத்தரவிட்ட கலெக்டர்!

விவசாயி போராட்டம்

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடுமோ என்ற அச்சத்தில் மாவட்ட நிர்வாகம் உரிமத்தைத் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோடாங்கிபாளையம் அருகே, கந்தையா தோட்டத்தில் ஆர்.ராமகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்தக் கல்குவாரி 2026 டிசம்பர் 1-ம் தேதிவரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தக் குவாரி சுற்றுச்சூழல் விதிகளை மீறிச் செயல்படுவதாகவும், தன்னுடைய வாழ்வாதாரத்தை அழித்ததாகவும் கூறி விஜயகுமார் என்ற விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டார். அவரின் போராட்டத்தைத் தொடர்ந்து கோடாங்கிபாளையத்தில் உள்ள விவசாயிகள், ஆர்வலர்கள் எனப் பலரும் போராட்டத்தில் அவருக்கு உறுதுணையாக நின்றனர்.

கல்குவாரி
கல்குவாரி
Representational image

எனவே, கல்குவாரி விதிகளுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுகிறதா என்பதை அறிய பல்லடம் மண்டலத்திலிருந்து ஒரு குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழு ஆய்வு செய்த பின்னர், எந்த விதிமீறலும் இல்லை என்று கூறியுள்ளது. அதோடு வருவாய்த்துறை, தீயணைப்புத் துறை, பொதுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தும், எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், குவாரிக்கு வேலி அமைக்கவில்லை என்றும், சட்டப்படி மரக்கன்றுகள் நடப்படவில்லை என்றும் அங்குள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உண்ணாவிரதப் போராட்டத்தில் விஜயகுமார்
உண்ணாவிரதப் போராட்டத்தில் விஜயகுமார்

இந்நிலையில், கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், விவசாயி விஜயகுமாருக்குச் சாதகமாகக் கல்குவாரி நடத்துவதற்கான உரிமத்தைத் திருப்பூர் கலெக்டர் டாக்டர் எஸ்.வினீத் வியாழக்கிழமை ரத்து செய்தார். மேலும், அந்த இடத்தை மூடவும் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து விஜயகுமார் தன் போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடுமோ என்ற அச்சத்தில் மாவட்ட நிர்வாகம் உரிமத்தைத் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.