Published:Updated:

திருப்பூர்: குடும்ப அட்டைகளை அரசிடம் திரும்ப ஒப்படைத்த விவசாயிகள்! - என்ன காரணம்?

விவசாயிகள்

``வாய்க்காலில் சைடு போர் அமைத்து நூதன முறையில் தண்ணீர்த் திருட்டு நடைபெறுகிறது. இதனால், கடைமடை பகுதியான எங்களுக்கு தண்ணீர் வரத்து மிக குறைந்த அளவிலேயே வருகிறது." - வெள்ளகோவில், காங்கேயம் விவசாயிகள்

திருப்பூர்: குடும்ப அட்டைகளை அரசிடம் திரும்ப ஒப்படைத்த விவசாயிகள்! - என்ன காரணம்?

``வாய்க்காலில் சைடு போர் அமைத்து நூதன முறையில் தண்ணீர்த் திருட்டு நடைபெறுகிறது. இதனால், கடைமடை பகுதியான எங்களுக்கு தண்ணீர் வரத்து மிக குறைந்த அளவிலேயே வருகிறது." - வெள்ளகோவில், காங்கேயம் விவசாயிகள்

Published:Updated:
விவசாயிகள்

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் சுமார் 48 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கடைமடையான இப்பகுதிக்கு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் விடப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், பி.ஏ.பி வாய்க்காலின் வழித்தடத்தில் நீர் திருட்டு காரணமாக கடந்த பல ஆண்டுகளாக தங்களுக்கான நீர் குறைவாக வருவதாகவும், இது தொடர்பாக பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளகோவில், காங்கேயம் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளிருப்பு போராட்டம்
உள்ளிருப்பு போராட்டம்

இது குறித்து பி.ஏ.பி வெள்ளகோவில் கிளைவாய்க்கால் சங்கத்தின் தலைவர் ப.வேலுசாமி, ``திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். இந்த நீரை நம்பி வெள்ளிக்கோவில், காங்கேயத்தில் சுமார் 48 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

தொடக்கத்தில் திருமூர்த்தி அணையில் வாய்க்கால் வழியாக வரும் நீரை சில விவசாயிகள் மோட்டர் வைத்து திருடி வந்தனர். பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு தண்ணீர்த் திருட்டு கட்டுக்குள் வந்தது.

ப.வேலுசாமி
ப.வேலுசாமி

தற்போது, வாய்க்காலில் சைடு போர் அமைத்து நூதன முறையில் தண்ணீர்த் திருட்டு நடைபெறுகிறது. இதனால், கடைமடை பகுதியான எங்களுக்கு தண்ணீர் வரத்து மிக குறைந்த அளவிலேயே வருகிறது. இது தொடர்பாக நீர்வளத் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், குடும்ப அட்டை உள்ளிட்ட அரசின் அட்டைகளை திரும்ப ஒப்படைத்துள்ளோம்" என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய திருப்பூர் மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் ஜெய்பீம், இது தொடர்பாக நீர்வளத் துறை அதிகாரிகளுடன் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துபூர்வமாக உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர்.