Published:Updated:

`எங்களை ஒதுக்கி வச்சுட்டு வியாபாரிகளிடம் வாங்கிட்டாங்க!' -விவசாயிகளைக் கலங்கடித்த `கரும்பு ஊழல்'

அறுவடை செய்யாமல் கிடக்கும் கரும்புகள்
அறுவடை செய்யாமல் கிடக்கும் கரும்புகள்

``ஒரு ஏக்கருக்கு இரண்டுல இருந்து மூணு லட்சம் வரை கடன் வாங்கி செலவு பண்ணிருக்கோம், பொண்டாட்டி தாலியைக்கூட அடகு வச்சுதான் விவசாயம் போட்டோம்.”

பொங்கல், விவசாயிகள் வருடம் முழுவதும் உழைத்து, அதற்குத் துணையாக நின்ற சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு நிகழ்வாகத்தான் தமிழர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அந்த நாள் தமிழர்களின் திருநாளாக கருதப்படுகிறது. பொங்கல் என்றாலே சாமானியனுக்கு நினைவில் வந்து நிற்பது கரும்பும் அதன் தித்திப்பும்தான், கரும்பு இல்லாத பொங்கல் பற்றி யோசிக்கக் கூட விரும்பமாட்டோம்.

அறுவடை செய்யாமல் கிடக்கும் கரும்புகள்
அறுவடை செய்யாமல் கிடக்கும் கரும்புகள்

அத்தகைய தித்திப்பு தரும் கரும்பை விதைத்தவர்கள் கண்ணீரில் மூழ்கியிருக்கிறார்கள். மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு தாலுகாவைச் சேர்ந்த மாங்குளம் கிராமத்தில் பொங்கலுக்காக விதைத்த கரும்பை அறுவடை செய்யாமல் காத்திருக்கின்றனர் விவசாயிகள். வருடா வருடம் பொங்கல் பண்டிகைக்காக விதைக்கும் கரும்பை அரசாங்கமே வாங்கிக்கொள்ளும். இந்த வருடமும் அதை நம்பியே அவர்கள் கரும்பை விதைத்தார்கள். ஆனால், அரசாங்கம் அவர்களிடம் கரும்பை வாங்காமல் இடைத்தரகர்களிடம் கரும்பை வாங்கி அவர்களைக் கலங்கடித்திருக்கிறது.

வெளில ஒரு கட்டு கரும்பு முன்னூத்தியம்பது ரூவா போகுது, நாங்க நூறு ரூவாய்க்கு கூட தரத் தயாரா இருக்கோம்.
ரசாயனம் போடாத ஆர்கானிக் செங்கரும்பு... சாகுபடியில் அசத்தும் தேனி விவசாயி!

இது தொடர்பாக விவசாயி மலைச்சாமி என்பவர், ``எல்லா வருஷமும் அரசாங்கம் விவசாயிகிட்ட இருந்துதான் கரும்பு வாங்கும், அத நம்பிதான் இந்த வருஷமும் கரும்பு விதைச்சோம். ஆனா இந்த வருஷம் அரசாங்கம் வியாபாரிகள்கிட்ட இருந்து கரும்ப வாங்கிருச்சு. ஒரு ஏக்கருக்கு இரண்டுல இருந்து மூணு லட்சம் வரை கடன் வாங்கி செலவு பண்ணிருக்கோம், பொண்டாட்டி தாலியைக்கூட அடகு வச்சுதான் விவசாயம் போட்டோம், ஆனா இந்த அரசாங்கம் எங்கள கண்டுக்கல. வெளில ஒரு கட்டு கரும்பு முன்னூத்தியம்பது ரூவா போகுது, நாங்க நூறு ரூவாய்க்கு கூட தரத் தயாரா இருக்கோம்.

விவசாயி மலைச்சாமி
விவசாயி மலைச்சாமி

இத பத்தி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவங்ககிட்டயும், மதுரை கலெக்டர்கிட்டயும் மனு கொடுத்தோம். அதிகாரிகள், `யார கேட்டு கரும்பு போட்டீங்க, வியாபாரிகள்ட்ட வாங்கிட்டோம். எங்களால ஒன்னும் பண்ணமுடியாது'ன்னு சொல்லிட்டாங்க.

அந்த வியாபாரிகள் எல்லாம் அவங்களுக்கு நெருக்கமானவங்க. பொங்கலுக்கு இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு. ஆனா எங்க கரும்ப இன்னும் அரசாங்கம் எடுத்துக்கல. எங்க ஊருல மொத்தம் ஆயிரத்தி ஐநூறு ஏக்கருக்கு கரும்பு விதைச்சிருக்கோம். இந்தக் கரும்ப சாப்பிட மட்டும்தான் முடியும், வேற எதுக்கும் பயன்படுத்த முடியாது. இத மட்டும் அரசாங்கம் எடுத்துக்கலைனா என்ன பண்ணனும்னு தெரியல" என கனத்துடன் முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு