தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ‘கடல்சார் உணவுப்பொருள்கள் வணிக மையம்’ செயல்பட்டு வருகிறது. புதிய கடல்சார் உணவுப் பொருள்கள் தயாரிப்புக்கான தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் மூலம் தொழில் முனைவோர் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது. இம்மையத்தைத் தொழில் முனைவோருக்குப் பிரபலப்படுத்தும் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 29-ம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் சுகுமார், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் ஆட்சியர் விஷ்ணுசந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப் பாளர்களாகக் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சார் ஆட்சியர் விஷ்ணுசந்திரன், “தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடித்தொழில் பரவலாக நடைபெறுகிறது. ஆனாலும்கூட, மீன்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்பவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. மதிப்புக்கூட்டும்போது அவற்றின் மதிப்பு 20 முதல் 60 சதவிகிதம் வரை அதிகமாகிறது. சுயதொழிலில் ஆர்வமுள்ளவர்களைக் கண்டறிந்து தொழில் முனைவோராக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்” என்றார்.

பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் ஜெயசேகரன் மீன்பதனத் துறையில் உள்ள ஆராய்ச்சி வாய்ப்புகள், மீன்பதன உணவுப் பொருள்களின் சந்தை மதிப்புகள் குறித்துப் பேசினார். இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை, திறன் மேம்பாட்டுத்துறை, வங்கி அதிகாரிகள், கல்லூரிப் பேராசிரியர்கள், முதல்வர்கள், தொழில் முனைவோர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பதன மற்றும் தொழில்நுட்பத் துறையின் உதவிப் பேராசிரியரும் கடல்சார் உணவுப் பொருள் வணிக மையத்தின் திட்ட ஒருங்கிணைப் பாளருமான முனைவர் கணேசன் பேசியபோது, ‘‘மீன், சத்து நிறைந்த ஓர் உணவுப் பொருள் மட்டுமல்ல. பிற அசைவ உணவுகளை ஒப்பிடும்போது அதிக சுவையானதும்கூட. தோல் வியாதிகள், ரத்த நாளங்கள் சம்பந்தப்பட்ட நோய்கள், வைட்டமின் ‘ஏ’ குறைபாடு, கால்சியம் குறைபாடு, புரதச்சத்துக் குறைபாடுகளால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. இதயநோய், சர்க்கரை நோய் வராமலும், மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்குக் கொடுப்பதால் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி அடைவதாகப் பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது.

தமிழகத்தின் கடற்கரை நீளம் 1,076 கி.மீ. தமிழகத்தில் கிடைக்கும் மீன்களில் 30 சதவிகிதத்துக்கும் மேல் மீன்கள், பறவைகள், விலங்குகளுக்குத் தயாரிக்கப்படும் உணவுக்குச் செல்கிறது. மீன்களை மதிப்புக் கூட்டுவதால் மீனவர்களுக்குக் கூடுதல் விலை கிடைக்கும். பரவலாக நாம் பயன்படுத்தும் நொறுக்குத் தின்பண்டங்களுடன் மீனையும் சேர்த்தால், புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்ற நோக்கத்தில் சென்னையில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க மையத்துக்கு இதுகுறித்த திட்ட வரைவு அனுப்பினோம். அதை ஏற்றுக்கொண்டு ரூ.2.50 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிதாகத் தொழில்முனைவோர், மீனவ மக்கள், பள்ளியைப் பாதியில் நிறுத்தியவர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோருக்கு மீனிலிருந்து உணவுப் பொருள்கள் தயார் செய்தல், சான்றிதழ் பெறுதல், விற்பனை வாய்ப்பு குறித்துப் பயிற்சி அளித்துத் தொழில்முனைவோராக உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம். பயிற்சி பெற்றவர்கள் மற்றும் மீன்களை மதிப்புக்கூட்டிட விரும்பும் தொழில் முனைவோர்கள் இங்குள்ள இயந்திரங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பெரும்பாலான இயந்திரங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீனமானவை. இவற்றைத் தொழில்முனைவோர்கள் முழுமையாகப் பயன்படுத்திப் பலன் பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். மேலும், கடல் பாசிகள்மூலம் வேளாண்மைக்கான உரம், மீன், இறால் உணவுகளில் பகுதியாகச் சேர்க்கப்படும் உணவுப்பொருள், மனிதர்களுக்கான உணவுப்பொருள் ஆகியவை தயாரிப்பதற்கான திட்டமும் விரைவில் தொடங்க உள்ளோம்” என்றார்.

தொடர்புக்கு:
திட்ட ஒருங்கிணைப்பாளர்,
கடல்சார் உணவுப்பொருள் வணிக மையம்,
மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தூத்துக்குடி.
தொலைபேசி: 0461 2340554/ 2340154

அலங்கார மீன் வளர்ப்பு

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சுகுமார். “அலங்கார மீன் வளர்ப்பு பெரும் லாபகரமான தொழில். ஆனால், இந்தியாவில் வணிக ரீதியாக அதன் ஏற்றுமதி 1 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது. அதை அதிகரிப்பதற்காகச் சென்னை, மாதவரத்தில் உள்ள ‘அட்வான்ஸ்டு ரிசர்ச் ஃபார்ம் ஃபெசிலிட்டி’ வளாகத்தில் ‘அலங்கார வண்ண மீன் வானவில் தொழில்நுட்ப பூங்கா’ இயங்கிக் கொண்டிருக்கிறது. அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் ஏற்றுமதி விற்பனை வாய்ப்பில் உலகளவில் அதிக தேவைகள் இருக்கின்றன. அதனால் அந்தத் தொழில்நுட்ப பூங்காவை விரிவுபடுத்தி வருகிறோம். தமிழகத்திலிருந்து அதிகளவு அலங்கார மீன்களை உற்பத்தி செய்து, உள்நாடு மற்றும் வெளிநாட்டு விற்பனை வாய்ப்பை அதிகரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.

இந்தியாவிலேயே முன்னோடி மீன்வளக் கல்லூரி!

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர் சுந்தரமூர்த்தி, “தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி, 1977-ல் தொடங்கப்பட்டது. அப்போது, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டது. 1989-ல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதுடன் ஆராய்ச்சி நிலையமாக விரிவு படுத்தப்பட்டது. ஆசியாவில் முதன்முறையாக 1969-ம் ஆண்டுக் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் அம்மாநில அரசால் மீன்வளக்கல்லூரி தொடங்கப்பட்டது. தொடர்ச்சியாக இந்தியாவில் இரண்டாவதாகவும் தமிழகத்தில் முதலாவதாகவும் தொடங்கப்பட்ட மீன்வளக் கல்லூரி இதுதான். மீன் வளர்ப்புத்துறை, மீன் வள உயிரியல்துறை, மீன்வள சுற்றுச்சூழல், மீன்பிடித்தல், மீன்வளப் பொறியியல் துறை, மீன்வள விரிவாக்கத்துறை, மீன் பதனத்துறை, மீன் தரமேலாண்மைத்துறை, மீன்வள நோயியல் துறை ஆகிய 8 துறைகள் உள்ளன. இதில், மீன் தரமேலாண்மைத்துறை இந்தியாவில் இங்கு மட்டும்தான் உள்ளது. இது தவிர, தருவைக்குளத்தில் கடல்சார் மீன் வளர்ப்பு மற்றும் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்துக்குள் இக்கல்லூரிக்கான ஆய்வகமும் உள்ளது. கல்லூரி வளாகத்துக்குள் 1.73 ஹெக்டேர் நன்னீர் மீன் பண்ணை, 2.70 ஹெக்டேர் நீர்த்தேக்கம் உள்ளது. கூட்டுமீன் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு உள்ளிட்ட பல வகையான பயிற்சிகள் இங்கு அளிக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

பயிற்சி பெறுவது எப்படி?

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் கடல்சார் உணவுப் பொருள்கள் தயாரிப்பு தொடர்பாக மாதம் இரண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. முதலில் கடல் உணவுப்பொருள் தயாரிப்பு, விற்பனை வாய்ப்புகுறித்து இலவச விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும். அதில் விருப்பம் உடையவர்களுக்கு 5 நாள்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடத்தப்படுகிறது. இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள நபர் ஒன்றுக்கு ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

எப்போது செயல்படும்?

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மீன் பொருள்கள் உற்பத்தி வணிக மையம் செயல்படுகிறது. வார நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் இயந்திரங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உணவுப் பொருள் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்கள், வேலையாட்களை அந்தந்த தொழில்முனைவோரே அழைத்து வர வேண்டும். இயந்திரங்களைப் பயன்படுத்த தனி நபர் ஒருவர் ஆண்டுக்கு ரூ.1,000 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இது தவிர, தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களுக்கு கிலோ கணக்குபடி குறைந்த சதவிகிதம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விலை முன்னறிவிப்பு!

தக்காளி ரூ.18,

கத்திரிரூ.32,

வெண்டை ரூ.27

காய்கறிக்கான விலை முன்னறிவிப்பு வர்த்தக மூலங்களின்படி, இந்த ஆண்டுக் காய்கறி வரத்து அதிகமாக உள்ளது எனத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘‘விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கிவரும், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 20 ஆண்டுகளாக ஒட்டன்சத்திரம் சந்தையில் நிலவிய தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை ஆகியவற்றின் சந்தை விலையை ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு முடிவின்படி தைப்பட்டத்தில் விதைக்க இருக்கும் பயிர்கள் அறுவடையின்போது, தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோவுக்கு 15 ரூபாய் முதல் 18 ரூபாயாகவும், நல்ல தரமான கத்திரி கிலோவுக்கு 30 ரூபாய் முதல் 32 ரூபாயாகவும், தரமான வெண்டையின் பண்ணை விலை 25 ரூபாய் முதல் 27 ரூபாய் வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனையின் அடிப்படையில் விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்’’ என்று ஆய்வு மையம் அறிவித்துள்ளது.