Published:Updated:

விவசாயிகளுக்காக காந்தியின் முதல் சத்தியாகிரகப் போராட்டம்! #IndependenceDay2022

காந்தி

விவசாயிகள் குறிப்பிட்ட நிலத்தில் அவுரியைக் கட்டாயமாக சாகுபடி செய்ய வேண்டும் என்றும், விளைச்சலைப் பண்ணை முதலாளிகள் நிர்ணயித்த விலைக்கே விற்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப் பட்டனர். பண்ணையார்கள் அவுரிப் பயிர்களுக்கு மிகக் குறைந்த விலையைக் கொடுத்து விவசாயிகளை சுரண்டி வந்தனர்.

விவசாயிகளுக்காக காந்தியின் முதல் சத்தியாகிரகப் போராட்டம்! #IndependenceDay2022

விவசாயிகள் குறிப்பிட்ட நிலத்தில் அவுரியைக் கட்டாயமாக சாகுபடி செய்ய வேண்டும் என்றும், விளைச்சலைப் பண்ணை முதலாளிகள் நிர்ணயித்த விலைக்கே விற்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப் பட்டனர். பண்ணையார்கள் அவுரிப் பயிர்களுக்கு மிகக் குறைந்த விலையைக் கொடுத்து விவசாயிகளை சுரண்டி வந்தனர்.

Published:Updated:
காந்தி

அவுரி செடியில் இருந்து எடுக்கும் சாயம் துணிகளுக்கு தேவையான நிறத்தைக் கொடுக்கும். எனவே, ஆங்கிலேயர்கள் தங்கள் சுயலாபத்துக்காக இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உணவு வகைகளைப் பயிரிட அனுமதி மறுத்து, அவுரியைப் பயிரிட கட்டாயப்படுத்தினர்.

பீகார் மாநிலத்தில் சம்பரான் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு 1910-களில் பிரிட்டிஷ் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் படி விவசாயிகள் தாங்கள் விரும்பிய உணவை பயிரிட முடியாது. அவுரி (Indigofera tinctoria) முதலான பணப்பயிர்களை பயிரிட விவசாயிகளைக் கட்டாயப்படுத்தியது.

காந்தி
காந்தி

விவசாயிகள் குறிப்பிட்ட நிலத்தில் அவுரியைக் கட்டாயமாக சாகுபடி செய்ய வேண்டும் என்றும், விளைச்சலைப் பண்ணை முதலாளிகள் நிர்ணயித்த விலைக்கே விற்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்பட்டனர். அரசு ஆதரவு பெற்ற பண்ணையார்கள் அவுரிப் பயிர்களுக்கு மிகக் குறைந்த விலையைக் கொடுத்து விவசாயிகளை சுரண்டி வந்தனர்.

அப்படி விவசாயிகளுக்கு கிடைத்த குறைந்த வருமானத்தையும் வரி விதித்து சுரண்டியது பிரிட்டிஷ் அரசு. அவ்வரி விகிதத்தையும் அடிக்கடி உயர்த்தியது. இதனால் விவசாயிகளுக்குத் தேவையான உணவு கிடைக்காமல் பஞ்சம் எற்படும் நிலை உருவானது. உயிர் வாழ்வதற்குப் போராடுவதைவிட வேறு வழியில்லை என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1917-ல் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியிருந்த காந்தி, இந்திய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். அப்போது சம்பரான் விவசாயிகள் சிலர் காந்தியை சந்தித்து அவர்களுடைய பிரச்னைகளை எடுத்துக் கூறி, உதவி செய்யுமாறு வேண்டுகோள் வைத்தனர்.

சம்பரான் அடக்குமுறை பற்றி நேரடியாக அறிந்துகொள்வதற்காக காந்தி, ராஜேந்திர பிரசாத், அனுக்கிர நாராயண் சின்கா போன்ற வழக்கறிஞர்கள் உட்பட மஷார் உல்கக், ஜே.பி.கிருபளானி, நர்ஹாரி பரேக், மிகாதேவி தேசாய் ஆகியோருடன் சம்பரான் சென்றார்.

மகாத்மா காந்தி உரை
மகாத்மா காந்தி உரை

அங்கு சென்று சாகுபடியாளர்களின் நிலை பற்றி விரிவாகக் கேட்டறிந்தார்கள். சம்பரான் போராட்டத்தை வரிகொடா இயக்கமாக மாற்றி அமைத்தனர்.

சம்பரானில் ஆசிரமம் ஒன்றை நிறுவிய காந்தி, அப்பகுதியில் இருந்த கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் சென்று மக்களின் குறைகளை விரிவாகக் கேட்டறிந்து ஆவணப்படுத்தினார். அப்பகுதி மக்களை அரசுக்கு வரி கொடாமல் அறவழியில் தங்கள் எதிர்ப்பைக் காட்டுமாறு ஊக்குவித்தார்.

மேலும் அவ்வூர்களை சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளிலும் காந்தியின் ஆதரவாளர்கள் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் மீது நம்பிக்கை கொண்ட சம்பரான் மக்கள், காந்தியின் வழிகாட்டுதலின்படி வரி கொடுக்க மறுத்தனர்.

`காந்தி உடனடியாக முசாஃபர் நகரைவிட்டு வெளியேற வேண்டும்’ என்று கமிஷனர் உத்தரவிட்டார். அந்த உத்தரவுக்கு கீழ்ப்பணிய மறுத்த காந்தி சட்டத்தை மீறியதாக ஒத்துக் கொண்டு சட்ட மறுப்புக்கான வழக்கை சந்திக்கவும், சிறை செல்லவும் தயாராக இருப்பதாகவும் அறிவித்தார். காந்தியைப் பற்றி அறிந்திருந்த அரசாங்க அதிகாரிகள் அரசாங்க உத்தரவை விலக்கிக் கொண்டனர்! அவுரி சாகுபடியாளர்களின் உண்மை நிலையைக் கண்டறிவதற்காக ஒரு குழுவை நியமிப்பதாகவும், அக்குழுவில் காந்தி ஓர் உறுப்பினராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

காந்தி
காந்தி

அரசாங்கம் அமைத்த குழுவின் அறிக்கையின் விளைவாக அவுரி சாகுபடியாளர்களின் துன்பங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டன. போராடிய விவசாயிகளின் வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட பண்ணையார்கள் அவர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். அதன்படி பஞ்ச காலம் முடியும் வரை வரி வசூலும், வரி விகித உயர்வும் நிறுத்தி வைக்கப்பட்டன. அவுரி பயிரிடுவோருக்கு அதிக விலையும் வழங்குவதாக ஒப்புக் கொண்டனர். சம்பரான் விவசாயப் போராட்டம் காந்தி மேற்கொண்ட சத்தியாகிரகத்துக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும். சம்பரான் சத்தியாகிரகம் மூலம் இந்தியாவில் நிலவிய வறுமையை காந்தி அறிந்தார். இப்போராட்டத்தின் போதுதான் காந்தி முதன்முதலில் ``பாபூ” என்று அழைக்கப்பட்டார்.

- தேசிய நல்லாசிரியர் சு.செல்லப்பா