Published:Updated:

548 நகைப் பைகளில் 261 மாயம்; நகையே இல்லாமல் ரூ.2 கோடிக்கு கடன்! - மிரளவைக்கும் கூட்டுறவு வங்கி மோசடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி
குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி

தூத்துக்குடியில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நகையே இல்லாமல் நகைக்கடன் வழங்கப்பட்டதும், டெப்பாசிட்களுக்கு போலி பாண்ட் வழங்கி ரூ.3 கோடிக்கு மோசடி செய்திருப்பதும் அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் ஏற்கனவே அறிவித்திருந்தார். யாருக்கெல்லாம் இந்தச் சலுகை கிடைக்கும் என்பது குறித்த அறிவிப்பு வெளியானதும், அதிகாரிகள் குழுவினர் அனைத்துக் கூட்டுறவு வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்ட நகைகளின் விவரம் அறிய வங்கிகளில் ஆய்வு செய்துவருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகிலுள்ள குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் தலைவராக நாலுமாவடியைச் சேர்ந்த முருகேச பாண்டியன் இருக்கிறார்.

வங்கி பெயரில் வழங்கப்பட்ட போலி பாண்ட்
வங்கி பெயரில் வழங்கப்பட்ட போலி பாண்ட்

செயலாளராக திருச்செந்தூரைச் சேர்ந்த தேவராஜ், துணைச் செயலாளராக குரும்பூரைச் சேர்ந்த ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய் ஆகியோர் உள்ளனர். இந்தநிலையில், ஆழ்வார்திருநகரி வட்டார கூட்டுறவு வங்கியின் கள அலுவலரும், கூட்டுறவு சார்பதிவாளரான ஆழ்வார்குமாரிடம் குரும்பூர் வங்கியின் நகை அடமான கடன் குறித்து மத்திய கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர்கள் கேட்டறிந்தனர்.

அப்போது அவர், ``நான் அனைத்து நகைக்கடனையும் ஆய்வு செய்துவிட்டேன். அதில் எந்த பிரச்னையும் இல்லை’’ என்று கூறிவிட்டார். பின்னர் அவரே ஒரு நாள் ஆய்வு செய்ததில் ஏதோ சில குளறுபடிகள் இருப்பதாகக் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர், சார்பதிவாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த 8-ம் தேதி மற்றும் 13-ம் தேதியில் நகைக்கடன்கள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மொத்தம் நகை இருந்த 548 பைகளில் 261 நகைப் பைகள் மாயமானது ஆய்வில் தெரியவந்தது.

குரும்பூர்
குரும்பூர்

இதனால், ஆய்வு செய்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் நகையே இல்லாமல் நகைக்கடன் என்ற பெயரில் ரூ.2,03,92,700 மோசடி செய்தது தெரியவந்தது. இதேபோல் வங்கியில் டெப்பாசிட் செய்த பணம் இருக்கிறதா என்று வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராக வந்து பார்த்தபோது, டெப்பாசிட் பணத்தை வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைக்காமல் அவர்களுக்கு போலியான பாண்ட் போட்டுக் கொடுத்து அந்தப் பணத்தையும் மோசடி செய்தது தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தூத்துக்குடி: கூட்டுறவு சங்கக் கடன்கள்; தள்ளுபடி அறிவிப்பு விரைவில் வெளியாகும்- அமைச்சர் ஐ.பெரியசாமி

தொடர்ச்சியாக வங்கியில் லட்சணக்கில் பணத்தை டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராக விசாரணைக் குழுவினரிடம் புகார் அளித்துவருகின்றனர். இதனால், இந்தப் பண மோசடி ரூ.3 கோடிக்கும் மேல் செல்லலாம் என்கின்றனர். இதையடுத்து வங்கித் தலைவர் முருகேசபாண்டியன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். செயலாளர் தேவராஜ், துணைச் செயலாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய், ஆழ்வார்திருநகரி வட்டார கூட்டுறவு வங்கிக் கள அலுவலர் ஆழ்வார்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குரும்பூர் தொடக்க கூட்டுறவு வேளாண் வங்கி
குரும்பூர் தொடக்க கூட்டுறவு வேளாண் வங்கி

இந்தப் பண மோசடி குறித்து விசாரணை அதிகாரிகள் தரப்பில் பேசினோம். ``குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ஆய்வு இன்னும் நிறைவடையவில்லை. நகை வைக்காமலேயே நகைக்கடன் பெற்றதுபோல், போலி நகை வைத்து நகைக்கடன் பெற்றிருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்துவருகிறோம்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு