Published:Updated:

முதல்முறை ஏற்றுமதி செய்யும் விவசாயிகளுக்கு 50% நிதியுதவி! தமிழக அரசின் அறிவிப்பு சாதகமா, பாதகமா?

வேளாண் ஏற்றுமதி

எந்த ஒரு விளைபொருளை ஏற்றுமதி செய்ய வேண்டுமென்றாலும் அது பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே ஏற்றுமதி செய்ய முடியும். இச்சோதனைக்கு ஆகும் செலவில் 10,000 ரூபாய் வரை அரசு நிதியுதவி அளிப்பதாக அறிவித்திருக்கிறது. உண்மையில் இது வரவேற்கத்தக்கது.

முதல்முறை ஏற்றுமதி செய்யும் விவசாயிகளுக்கு 50% நிதியுதவி! தமிழக அரசின் அறிவிப்பு சாதகமா, பாதகமா?

எந்த ஒரு விளைபொருளை ஏற்றுமதி செய்ய வேண்டுமென்றாலும் அது பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே ஏற்றுமதி செய்ய முடியும். இச்சோதனைக்கு ஆகும் செலவில் 10,000 ரூபாய் வரை அரசு நிதியுதவி அளிப்பதாக அறிவித்திருக்கிறது. உண்மையில் இது வரவேற்கத்தக்கது.

Published:Updated:
வேளாண் ஏற்றுமதி

வெளிநாடுகளுக்கு முதன்முறையாக விளைபொருள்களை ஏற்றுமதி செய்யும் விவசாயிகளுக்கு 50 சதவிகித நிதியுதவி வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்முறையாக ஏற்றுமதி செய்யும் விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்குப் பரிசோதனை கட்டணத்தில் 50 சதவிகித நிதியுதவி வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஏப்ரல் 15-ம் தேதிக்குள் http://agrimark.tn.gov.in/MRS/exporter என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியத்தால் செயல்படுத்தப்படும் இத்திட்டம் விவசாயிகளுக்கு பயன்தரக்கூடியதாக இருக்குமா என ஏற்றுமதி மற்றும் வேளாண் துறை சார்ந்தோரிடம் கேட்டோம்.

இத்திட்டத்தின் மூலம் ஏற்றுமதிக்கான வாய்ப்புப் பெருகி, அந்நியச் செலாவணி உயரும் என்கிறார் ஏற்றுமதியாளர் கமாலுதீன்...

விவசாயம்
விவசாயம்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``எந்த ஒரு விளைபொருளை ஏற்றுமதி செய்ய வேண்டுமென்றாலும் அது பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே ஏற்றுமதி செய்ய முடியும். இச்சோதனைக்கு ஆகும் செலவில் 10,000 ரூபாய் வரை அரசு நிதியுதவி அளிப்பதாக அறிவித்திருக்கிறது. உண்மையில் இது வரவேற்கத்தக்கது. பெரும்பாலும் விவசாயிகள் நேரடியாக ஏற்றுமதி செய்வதில்லை. ஏற்றுமதி நிறுவனங்கள் மூலம்தான் விளைபொருள்கள் ஏற்றுமதியாகின்றன. இந்நிலையில், விவசாயிகளையே நேரடியாக ஏற்றுமதி செய்ய ஊக்குவிக்கும் நடவடிக்கையாகவே, முதன்முறையாக ஏற்றுமதி செய்யும் விவசாயிகளுக்கு இந்த நிதியுதவி அளிக்கப்படுகிறது. அதிகபட்ச உச்சவரம்பில் இருந்து கால்நடைத் தீவனம், விவசாயப் பொருள்கள் ஆகியவற்றுக்கான சோதனைக்கட்டணத்தில் 50 சதவிகிதம் நிதியுதவி அளிக்கப் படுகிறது. இதன் மூலம் நாம் கொடுக்கும் பொருள்களை முறையான பரிசோதனைக்குட்படுத்தி மதிப்புக்கூட்டிய பொருளாகக் கொடுக்க முடியும். இதன் மூலம் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் பெருகும் என்பதால் நம் நாட்டின் அந்நிய செலாவணி உயரும். ஆகவே, அரசின் இத்திட்டம் வரவேற்புக்குரியது என கருதுகிறேன்" என்கிறார் கமாலுதீன்.

கமாலுதீன்
கமாலுதீன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவசாயிகளிடமிருந்து அரசே விளைபொருள்களைப் பெற்று ஏற்றுமதி செய்யலாம் என்கிறார் விவசாய சங்கப் பிரதிநிதி ஈசன்,

``பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட சான்றிதழ் இருந்தால்தான் ஏற்றுமதி செய்ய முடியும். இந்நிலையில் அச்சோதனைக்காக வழங்கும் 50% நிதி உதவி விவசாயிகளை நேரடியாக ஏற்றுமதி செய்ய ஊக்குவிக்குமா என்பது கேள்விக்குரியதுதான். முதலில் ஏற்றுமதிக்கான வாய்ப்பு என்ன இருக்கிறது என்பது குறித்த தெளிவு அரசிடம் இருக்கிறதா? தமிழ்நாட்டில் ஏற்றுமதிக்கான உற்பத்தி முறை தொடங்கப்படவில்லை. முதன்முறையாக ஏற்றுமதி செய்யும் விவசாயிகளுக்கானது இத்திட்டம் என்கிறார்கள். வேளாண் ஏற்றுமதி என்பது தொடர் நிகழ்வு. அப்படியிருக்கையில் முதன்முறை மட்டும் வழங்கினால் ஏற்றுமதி அதிகரிக்கும் என எப்படி நினைக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

ஈசன்
ஈசன்

விவசாயிகள் நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கி, அதற்கான சந்தைப் பயிற்சி, விளைபொருள் களுக்கான காப்பீடு, போக்குவரத்து ஆகியவற்றை அரசு ஒழுங்கமைக்க வேண்டும். ஏற்றுமதி செய்கிற விவசாயிக்கு உரிய பணம் கிடைப்பதற்கான உத்தரவாதத்தை ஏற்படுத்திக் கொடுப்பதும் அரசின் வேலை. நம் மாநிலத்தில் விளையும் பொருள்களில் எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு தேவை இருக்கிறது என்பதை அறிந்து அரசே இந்த ஏற்றுமதியை முன்னெடுத்தால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். சின்ன வெங்காயத்தின் விலை தற்போது வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. இதற்குக் காரணம் தேவைக்கும் அதிகமான உற்பத்தி. சின்ன வெங்காயத்தின் தேவை இருக்கிற நாடுகளுக்கு அரசே ஏற்றுமதியை முன்னெடுத்தால் இந்த விலை வீழ்ச்சி இருக்காது. இது போன்ற நடவடிக்கைகள்தான் விவசாயிகளுக்கான தேவையே தவிர, இந்த 50% நிதி உதவியால் விவசாயிகள் நேரடியாக ஏற்றுமதி செய்வது அதிகரிக்காது" என்கிறார் ஈசன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism