Published:Updated:

`வேளாண் இயந்திர வாடகை மையம்' அமைக்க ரூ.10 லட்சம் வரை மானியம்! தமிழக அரசு அறிவிப்பு!

வேளாண் கருவிகள்

வட்டார அளவில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க மானியம் சிறு, குறு விவசாயிகள் குழுவாக ஒருங்கிணைந்து, வட்டார அளவில் வேளாண் இயந்திர வாடகை மையம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கு, 40 சதவிகித மானியம் அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வழங்கப்படும்.

`வேளாண் இயந்திர வாடகை மையம்' அமைக்க ரூ.10 லட்சம் வரை மானியம்! தமிழக அரசு அறிவிப்பு!

வட்டார அளவில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க மானியம் சிறு, குறு விவசாயிகள் குழுவாக ஒருங்கிணைந்து, வட்டார அளவில் வேளாண் இயந்திர வாடகை மையம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கு, 40 சதவிகித மானியம் அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வழங்கப்படும்.

Published:Updated:
வேளாண் கருவிகள்

வேளாண் பணிகளுக்கு இயந்திரங்களை பயன்படுத்தும் திட்டத்தினை அனைத்து கிராமங்களிலும் நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வேளாண்மை-உழவர் நலத்துறைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

"சாகுபடிக்கு போதிய வேலையாட்கள் கிடைக்காத நிலையில், விவசாயிகள் உரிய காலத்தில் சாகுபடிப் பணிகளை மேற்கொள்வதற்காக, வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தினை தமிழக விவசாயிகளிடையே நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Photo: Vikatan / Muthukumar.A

மானியம்

நடப்பு 2022-23 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கை அறிவிப்புகள் தனிப்பட்ட விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கு இளைஞர்களை விவசாய தொழிலில் ஈர்த்திட, விவசாயிகள், தொழில் முனைவோர்கள், பதிவு செய்த விவசாய சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் கிராம, வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையம் நிறுவ மானியம் போன்ற வகைகளில் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டத்தினை தமிழகத்தில், 2022-23 ஆம் ஆண்டில் செயல்படுத்துவதற்காக, ரூ.150 கோடி மத்திய, மாநில அரசினால் ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக ரூ.41.67 கோடி நிதியில் இத்திட்டத்தினை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வளவு மானியமாக கிடைக்கும்...

இத்திட்டத்தில், தனிப்பட்ட விவசாயிகளுக்கு 40 சதவிகித மானியத்திலும், சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின, பெண் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்திலும் வேளாண் இயந்திரங்கள் விநியோகம் செய்யப்படும்.

நெல் அறுவடை இயந்திரம்
நெல் அறுவடை இயந்திரம்

அதிகபட்சமாக கிடைக்கும் மானிய விபரங்கள்:

  • டிராக்டருக்கு ரூ.5 இலட்சம்,

  • மினி டிராக்டருக்கு ரூ.2.25 இலட்சம்,

  • பவர்டில்லருக்கு ரூ.85,000/-,

  • நெல் நடவு இயந்திரத்திற்கு ரூ.5 இலட்சம்,

  • களையெடுக்கும் இயந்திரத்திற்கு ரூ.63,000/-

  • சுழல் கலப்பைக்கு ரூ.44,800/-,

  • விதைப்புக் கருவிக்கு ரூ.24,100/-,

  • நிலக்கடலை அறுவடை இயந்திரத்திற்கு ரூ.75,000/-,

  • கொத்துக் கலப்பைக்கு ரூ.50,000/-,

  • நெல் அறுவடை இயந்திரத்திற்கு ரூ.11 இலட்சம்.

  • பல்வகைப் பயிர் கதிரடிக்கும் இயந்திரத்திற்கு ரூ.2.50 இலட்சம்,

  • கரும்பு சோகையை துகளாக்கும் கருவிக்கு ரூ.1.25 இலட்சம்,

  • தென்னை ஓலைகளை துகளாக்கும் கருவிக்கு ரூ.63,000/-,

  • வைக்கோல் கட்டும் கருவிக்கு ரூ.2.25 இலட்சம்,

  • கரும்பு சோகை உரிக்கும் கருவிக்கு ரூ.75,000/-,

  • புதர் அகற்றும் கருவிக்கு ரூ.30,000/-,

  • தட்டை வெட்டும் கருவிக்கு ரூ.20,000/- மானியமாக வழங்கப்படும்.

முதற்கட்டமாக, 1615 வேளாண் இயந்திரங்களை மானியத்தில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு...

ஆதி திராவிட, பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்துடன், கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்கப்படும். இதனால், இப்பிரிவினைச் சார்ந்த விவசாயிகள் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகை வெகுவாக குறையும். இதற்கான மானியம் மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்படும்.

விவசாயிகள்
விவசாயிகள்

விளைபொருள்களை மதிப்புக்கூட்டும் இயந்திரத்திற்கு மானியம் விவசாயிகள் உற்பத்தி செய்த சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் அதிக வருமானம் பெறுவதற்கு சிறுதானிய சுத்திகரிப்பு, பயறு உடைத்தல், எண்ணெய் பிழிதல் போன்ற வகைகளில் மதிப்புக்கூட்டும் இயந்திரங்களுக்கு அதிகபட்சமாக 40 சதவீத மானியம் வழங்கப்படும்.

சூரிய கூடார உலர்த்தி நிறுவ மானியம்

இயற்கையில் அதிகமாகக் கிடைக்கும் சூரிய ஆற்றலைக் கொண்டு, கொப்பரை தேங்காய், எள், நிலக்கடலை, முருங்கை இலை போன்ற வேளாண் விளைபொருட்களை சுகாதாரமான முறையில் சீராக உலர்த்தி, விற்பனை செய்வதன் மூலம் அதிக வருமானம் ஈட்டிட தனிப்பட்ட விவசாயிகள், விவசாய குழுக்களுக்கு 40 சதவீத மானியத்தில், 400 முதல் 1000 சதுர அடி வரை பாலிகார்பனேட் தகடுகளுடன் கூடிய சூரிய கூடார உலர்த்தியை நிறுவுவதற்கு, 40 சதவிகித மானியம் வழங்கப்படும்.

வேளாண் கருவிகள்
வேளாண் கருவிகள்

வட்டார அளவில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க மானியம் சிறு, குறு விவசாயிகள் குழுவாக ஒருங்கிணைந்து, வட்டார அளவில் வேளாண் இயந்திர வாடகை மையம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கு, 40 சதவிகித மானியம் அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வழங்கப்படும்.

வேளாண் இயந்திர சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களில் சிறு, குறு விவசாயிகள் ஒருங்கிணைந்து, பதிவு செய்த விவசாய சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தேவைப்படும் சிறிய அளவிலான வேளாண் இயந்திரங்கள், கருவிகள், உபகரணங்களை ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் வாங்கி கிராம அளவில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைப்பதற்கு 80 சதவிகித மானியம் அதிகபட்சமாக ரூ.8 லட்சம் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.