Published:Updated:

நாட்டுக்கோழி, ஆடு வளர்ப்பை லாபகரமாக நடத்த வேண்டுமா? வழிகாட்டும் நேரடிப் பயிற்சி!

நாட்டுக்கோழி வளர்ப்பு

சிறிய அளவில் நாட்டுக்கோழி, முயல் வளர்ப்பை தொடங்குவது குறித்தான ஆலோசனைகளும், கோழிக் குஞ்சுகள், முயல் குட்டிகள் எங்கு கிடைக்கும் போன்ற தகவல்களும் கிடைக்கும்.

நாட்டுக்கோழி, ஆடு வளர்ப்பை லாபகரமாக நடத்த வேண்டுமா? வழிகாட்டும் நேரடிப் பயிற்சி!

சிறிய அளவில் நாட்டுக்கோழி, முயல் வளர்ப்பை தொடங்குவது குறித்தான ஆலோசனைகளும், கோழிக் குஞ்சுகள், முயல் குட்டிகள் எங்கு கிடைக்கும் போன்ற தகவல்களும் கிடைக்கும்.

Published:Updated:
நாட்டுக்கோழி வளர்ப்பு

விவசாயத்தின் ஓர் அங்கமாக இருந்த கால்நடை வளர்ப்பு, இன்று பிரதான தொழிலாக மாறி இருக்கிறது. கால்நடை வளர்ப்பு என்றாலே ஆடு, மாடு, கோழி மட்டுமே என்றிருந்த நிலையில் இப்போது முயல், வெண்பன்றி என்று சில கால்நடைகளை வளர்ப்பதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரிய இடத்தில்தான் வளர்க்க வேண்டும் என்றில்லாமல், சிறிய இடங்களிலும் கால்நடை வளர்ப்பை மேற்கொள்ள பசுமைவிகடன் மற்றும் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து நடத்தும் ‘லாபகரமான கால்நடைப் பண்ணை’ என்ற நேரடி பயிற்சி வழிகாட்ட இருக்கிறது.

முன்பதிவுக்கு https://bit.ly/3v6y0QJ

பயிற்சி அறிவிப்பு
பயிற்சி அறிவிப்பு

ஆட்டுப்பண்ணை மற்றும் மாட்டுப்பண்ணை அமைப்பதற்கான இடத் தேர்வு, எத்தனை ஆடு, மாடுகள் வளர்ப்பதற்கு எவ்வளவு சதுர அடியில் கொட்டகை அமைக்க வேண்டும் என்பதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. கிராமங்களில் மட்டுமல்லாமல் நகரங்களிலும் கால்நடை வளர்ப்பை மேற்கொள்ள பலர் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் சிறிய அளவில் நாட்டுக்கோழி, முயல் வளர்ப்பை தொடங்குவது குறித்தான ஆலோசனைகளும், கோழிக் குஞ்சுகள், முயல் குட்டிகள் எங்கு கிடைக்கும் போன்ற தகவல்களும் கிடைக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கால்நடை வளர்ப்பில் முக்கியமானது நோய் பராமரிப்பு முறைகள். ஆடு, மாடு, கோழி, முயல், வென்பண்றி என்று ஒவ்வொன்றுக்குமான பராமரிப்பு முறைகள் வேறுபடுகின்றன. அதை எவ்வாறு கையாள வேண்டும், எந்த நேரத்தில் தடுப்பூசி போட வேண்டும், எப்போது தீவனம் கொடுக்க வேண்டும், கால்நடைகளுக்கு நோய் தாக்கினால் என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட விவரங்களையும் இந்த நிகழ்வின் மூலம் வழிகாட்ட இருக்கிறோம்.

வெண்பன்றி வளர்ப்பு
வெண்பன்றி வளர்ப்பு

அதேசமயம் கால்நடை வளர்ப்பதற்கு அரசுகள் வழங்கி வரும் மானியங்கள், திட்டங்கள் குறித்தும், வங்கிகள் கடன் வழங்குவது குறித்தும் தகவல்கள் கிடைக்கும். கால்நடைகளுக்கான சந்தை வாய்ப்புகள் குறித்தும் இந்த நேரடி பயிற்சியில் தெரிந்து கொள்ளலாம். நிறைவாக காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் உள்ள பண்ணையைப் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவுக்கு https://bit.ly/3v6y0QJ

இந்த கால்நடை வளர்ப்பு பற்றிய நேரடி பயிற்சி ஆகஸ்ட் 26ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை செங்கல்பட்டு மாவட்டம். காட்டுப்பாக்கத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் (எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் எதிரில் மற்றும் பொத்தேரி ரயில் நிலையம் அருகில்) நடைபெறவுள்ளது.

முயல் வளர்ப்பு...
முயல் வளர்ப்பு...

இந்த பயிற்சிக்கான கட்டணம் ரூ.600 மட்டுமே, பயிற்சியில் பங்கேற்கும் அனைத்து நபர்களுக்கும் நோட்பேட், பேனா, தேநீர், மதிய உணவு, சான்றிதழ் உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம் எனவே பின்வரும் லிங்க்கில் சென்று கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவும்.

முன்பதிவுக்கு https://bit.ly/3v6y0QJ

நாள்: 26-8-22 (வெள்ளிக்கிழமை).

நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம்: வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்(எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் எதிரில்), செங்கல்பட்டு மாவட்டம்.

மேலும் விவரங்களுக்கு, 99400 22128, 99400 72144

கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல வருமானம் பார்க்க இந்த நேரடி பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். மாதிரி கால்நடைப் பண்ணையினை பார்க்கவும் அரிய வாய்ப்பு இது.