Published:Updated:

`1 கிலோ மட்காத குப்பையைக் கொடுத்தால் ரூ.5 வழங்கப்படும்!' திருச்சி மாநகராட்சியின் அசத்தலான முயற்சி!

மக்காத குப்பைகளை சேகரிக்கும் தி மணி பின் அமைப்பு

திருப்பூரைச் சேர்ந்த ‘தி மணி பின்’ என்னும் அமைப்புடன், திருச்சி மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து இந்த புதிய திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

`1 கிலோ மட்காத குப்பையைக் கொடுத்தால் ரூ.5 வழங்கப்படும்!' திருச்சி மாநகராட்சியின் அசத்தலான முயற்சி!

திருப்பூரைச் சேர்ந்த ‘தி மணி பின்’ என்னும் அமைப்புடன், திருச்சி மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து இந்த புதிய திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

Published:Updated:
மக்காத குப்பைகளை சேகரிக்கும் தி மணி பின் அமைப்பு

திருச்சி மாநகராட்சியில் மட்காத குப்பைகளை நேரடியாக வீடுகளுக்கே சென்று, பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளும் அசத்தலான திட்டத்தினை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன். ‘குப்பையையும் பணமாக்குவோம், மண்ணை வளமாக்குவோம்’ என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு திருப்பூரைச் சேர்ந்த ‘தி மணி பின்’ என்னும் அமைப்புடன், திருச்சி மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து இந்த புதிய திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

திட்டத்தினை அறிமுகப்படுத்தும் திருச்சி மேயர்
திட்டத்தினை அறிமுகப்படுத்தும் திருச்சி மேயர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இத்திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், இதர பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்கள், இரும்பு, அலுமினியம், எவர்சில்வர், உலோகத்தால் ஆன பொருட்கள், பழைய எலக்ட்ரிக் சாதனங்கள், புத்தகங்கள், பேப்பர், அட்டைப் பெட்டிகள் என அனைத்திற்கும் அதற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள பணத்தைக் கொடுத்து எடுத்துக்கொள்ள இருக்கின்றனர். ஒரு கிலோ பழைய பொருட்களுக்கு 12 ரூபாய் முதல், பொருளுக்கு ஏற்றால் போல் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனின் சொந்த வார்டான 27-வது வார்டில் உள்ள பட்டாபிராமன் சாலையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

திருச்சி மாநகராட்சியின் அறிவிப்பு
திருச்சி மாநகராட்சியின் அறிவிப்பு

இதுகுறித்து திருச்சி மாநகராட்சியின் மேயர் அன்பழகனிடம் பேசியபோது, “இத்திட்டத்தின் மூலம் மட்காத குப்பைகள், மட்கும் குப்பைகளுடன் கலப்பது குறையும். மட்காத குப்பைகளை பொதுமக்களிடம் பெற்று மறுசுழற்சி செய்வதால், சூழல் மாசுபாடும் குறையும். 15 நாட்களுக்கு ஒருமுறை 'தி மணி பின்' அமைப்பினர் பொதுமக்களிடமிருந்து இந்த மட்காத குப்பைகளை பெற்றுக் கொள்வார்கள். இந்தத் திட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களையும் ஈடுபடுத்த இருக்கிறோம். சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் இந்த மட்காத குப்பைகளை வீடுகளில் இருந்து பெற்று ‘தி மணி பின்’ அமைப்பிடம் கொடுத்தால், அவர்களுக்கு ஒரு கிலோவுக்கு 5 ரூபாய் வழங்கப்படும். மக்கள் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பதோடு, மட்காத குப்பைகள் ஏற்படும் சூழல் மாசுபாடுகளை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism