Published:Updated:

விதைகளை விற்றால் சிறை! கென்யாவின் புதிய சட்டம் விதை நிறுவனங்களுக்கு ஆதரவானதா?

கென்யா விவசாயம் ( Branislav Cika )

ஒருவேளை சான்றளிக்கப்படாத விதைகளை விற்றது நிரூபிக்கப்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு, கென்ய பண மதிப்பில் 20,000 அபராதமும் மற்றும் ஆறு மாத காலம் சிறைத்தண்டனையும் அல்லது இரண்டு தண்டனையும் ஒருசேர வழங்க படலாம்

விதைகளை விற்றால் சிறை! கென்யாவின் புதிய சட்டம் விதை நிறுவனங்களுக்கு ஆதரவானதா?

ஒருவேளை சான்றளிக்கப்படாத விதைகளை விற்றது நிரூபிக்கப்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு, கென்ய பண மதிப்பில் 20,000 அபராதமும் மற்றும் ஆறு மாத காலம் சிறைத்தண்டனையும் அல்லது இரண்டு தண்டனையும் ஒருசேர வழங்க படலாம்

Published:Updated:
கென்யா விவசாயம் ( Branislav Cika )

கென்யாவில் விளையும் உள்நாட்டு விதைகளை விற்பது சட்டப்படி குற்றமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கென்யாவில் இயற்றப்பட்ட, விதைகள் மற்றும் தாவர வகைகள் சட்டம் 2012, பகுதி 2 (8) இன் படி, அட்டவணைப்படுத்தப்படாத தாவர வகை விதைகளின் மீதான விற்பனைக் கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டன. அதில் உள்நாட்டில் உள்ள சான்றளிக்கப்படாத விதைகளை விற்கக் கூடாது எனச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அரசாங்கம் அறிமுகப்படுத்திய இந்த புதிய சட்டம், சட்ட விரோதமான விதை விற்பனைக்கு கட்டுப்பாடு விதிப்பதோடு, நாட்டில் விற்கப்படும் அல்லது விநியோகிக்கப்படும் அனைத்து விதைகளும் சான்றளிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்யும் முயற்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

கோக்கோ விதைகள்
கோக்கோ விதைகள்

 அதன் அடிப்படையில் கென்யாவில் விதைகளை விற்பது அல்லது பகிர்வது குற்றமாக்கப்படுகிறது. ஒருவேளை சான்றளிக்கப்படாத விதைகளை விற்றது நிரூபிக்கப்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு, கென்ய பண மதிப்பில் ரூ.20,000 அபராதமும் அல்லது ஆறு மாத கால சிறைத்தண்டனையும் வழங்கப்படும். அல்லது இரண்டும் ஒருசேர வழங்க படலாம் என அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மான்சான்டோ, பேயர் அல்லது சின்ஜெண்டா போன்ற நிறுவனங்கள், விவசாயிகளின் கடைசி அறுவடையில் இருந்து விதைகளை சேமிக்க அனுமதிப்பதில்லை. ஒருவேளை நீங்கள் விதையை சேமிக்கும் பட்சத்தில் உங்கள் மீது வழக்கு தொடுக்கப்படும். ஒவ்வொரு பருவ காலத்திலும் விதைக்காக அவர்களிடம் கை ஏந்தும் நிலை உண்டாகும். தான்சானியா மற்றும் உகாண்டா போன்ற அண்டை நாடுகளில், ஒரு விவசாயி அவர்கள் விரும்பும் விதைகளை விற்க அல்லது பகிர்ந்து கொள்ள முடியும். இந்நிலையில் கென்யாவில் விளையும் உள்நாட்டு விதைகளை விற்பது மற்றும் பகிர்ந்து கொள்வது சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கென்ய விவசாயிகள் மற்றும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விதை
விதை

கென்ய அரசின் இந்த சட்டம் விதை நிறுவனங்களுக்கான சந்தையை உருவாக்க எழுதப்பட்டுள்ளதாக கென்ய விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டிலும் வேளாண் மன்ற சட்டம் என்ற பெயரில் விவசாயிகள் தங்களுடைய பாரம்பர்ய தொழில்நுட்ப அறிவை பகிர்ந்துகொள்வது தண்டனைக்குரியது என ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை விவசாயிகளின் எதிர்ப்பாலும், பசுமை விகடன் தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டதாலும் அந்தச் சட்டத்தை தடுத்து நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism