Published:Updated:

வன விலங்குகளால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், உரிய இழப்பீடு வழங்கப்படும்!

விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கருத்து கேட்பு கூட்டம்

வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் வன விலங்குகளான மயில், குரங்கு, மான், காட்டுப்பன்றி மற்றும் காட்டெருமைகளால் வேளாண் பயிர்கள், அறுவடைக்குத் தயாராக உள்ள தானியங்கள், பழங்கள் உள்ளிட்டவை அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின்றன.

 திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், வன விலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், அதை நிவர்த்தி செய்யும் பொருட்டும் விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட வன அலுவலர் கோ.கிரண் தலைமையில் நேற்று (06.10.2022) நடைபெற்றது.

கூட்டத்கில் உதவி வனப் பாதுகாவலர்கள் எஸ், சம்பத்குமார். ஆர், சரவணக்குமார். ஆட்சியரின் நோமுக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா, மற்றும் வனத் துறையினர், விவசாயிகள் பலரும் பங்கேற்றனர்.

விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கருத்து கேட்பு கூட்டம்
விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கருத்து கேட்பு கூட்டம்

இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள்,

``திருச்சி மாவட்டத்தில் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் வன விலங்குகளான மயில், குரங்கு, மான், காட்டுப்பன்றி மற்றும் காட்டெருமைகளால் வேளாண் பயிர்கள், அறுவடைக்குத் தயாராக உள்ள தானியங்கள், பழங்கள் உள்ளிட்டவை அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின்றன. இப்படி அதிக அளவில் விளை நிலங்களில் பயிர் சேதம் ஏற்படுவதால் பெருத்த நஷ்டத்தை சந்து வருகிறோம்.. எனவே , உரிய பாதுகாப்பையும் மீறி விளைபொருள்கள் பாதிக்கப்பட்டால் அவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என வலியுறுத்தினர்.

மேலும், வன விலங்குகள் வனம் மற்றும் மலை பகுதியை விட்டு வெளியே வராத அளவிற்கு வனம், மற்றும் மலை பகுதிகளை சுற்றி அகழிகள் அமைத்தோ, குறைந்தழுத்த சூரிய மின்வேலி அமைத்தோ தடுக்க வேண்டும்.

வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர்தொட்டிகள் அமைத்து தருவதுடன் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அந்தந்த பகுதிகளில் செடி,கொடிகள், பயிர்வகைகளை பயிரிட வேண்டும். மான்கள், மயில்கள் குரங்குகளுக்கு அந்தந்த பகுதிகளில் சரணாலயங்கள் அமைத்து பராமரிக்க வேண்டும். என்ற கோரிக்கைகளை கூட்டத்தில் வலியுறுத்தினர்.

வன விலங்குகளால் பாதிப்பு | கருத்துக் கேட்பு கூட்டம்
வன விலங்குகளால் பாதிப்பு | கருத்துக் கேட்பு கூட்டம்

விவசாயிகளின் கோரிக்கைக்கு பதில் அளித்த மாவட்ட வன அலுவலர் கோ. கிரண், ``வன விலங்குகளால் விவசாயிகளுக்கும், வேளாண் பயிர்களுக்கும் ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஆராய்ந்து, உரிய பரிசீலனை மேற்கொண்டு, விவசாயிகளின் இழப்பை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வன விலங்குகளால் ஏற்படும் இழப்புகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும்" என்றார்.

அதனைத் தொடர்ந்து, இழப்பீடு பெறும் மாதிரிப் படிவங்கள் கூட்டத்துக்கு வந்திருந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது. அவற்றை பூர்த்தி செய்து வழங்கவும் அறிவுறுத்தினர். இனி வரும் காலங்களில் இழப்பீடு தொகை பெறுவதற்கு இம்மாதிரியான படிவத்தில் அறிக்கை செய்ய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.