Published:Updated:

இந்திய தேயிலையைத் திருப்பி அனுப்பும் நாடுகள்; இந்தியா செய்ய வேண்டியது என்ன?

அசாம் தேயிலை தோட்டம்

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்று பலர் அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.

இந்திய தேயிலையைத் திருப்பி அனுப்பும் நாடுகள்; இந்தியா செய்ய வேண்டியது என்ன?

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்று பலர் அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.

Published:Updated:
அசாம் தேயிலை தோட்டம்

இந்திய தேயிலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பூச்சி மருந்துகள் மற்றும் ரசாயனங்கள் அதிகம் இருப்பதாக உலக நாடுகள் குற்றம்சாட்டி உள்ளன. இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் உலக நாடுகளுக்குத் தேயிலைகள் ஏற்றுமதியாகும். இப்படி அனுப்பப்பட்ட தேயிலைகள் பெரும்பாலும் திருப்பி அனுப்பப்படுகின்ற நிலை உருவாகி இருக்கிறது.

Tea
Tea

ஏனென்றல், இந்திய தேயிலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பூச்சி மருந்துகள் மற்றும் ரசாயனங்கள் அதிகம் இருப்பதாகத் திருப்பி அனுப்பும் நாடுகள் குற்றம்சாட்டி உள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் இலங்கையிலிருந்து தேயிலைகள் பெருவாரியாக சப்ளை செய்து கொண்டிருந்த நிலையில், தற்போது இலங்கை பெரும் பொருளாதார தட்டுப்பாட்டில் சிக்கி நெருக்கடியில் உள்ளது.   இதனால் அந்நாடு தேயிலையை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் உள்ளது. இந்த நிலையில் இலங்கையின் தேயிலை மார்க்கெட்டை உலக அளவில் இந்தியா பிடிக்கலாம் என்று கருதி தேயிலை ஏற்றுமதியைக் கடந்த சில மாதங்களாக அதிகரித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2021-ம் ஆண்டில் 195.90 மில்லியன் கிலோ தேயிலையை இந்தியா ஏற்றுமதி செய்த நிலையில், இந்த ஆண்டு 300 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய தேயிலைகளில் அதிக அளவு பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயனங்கள் கலந்து இருப்பதாகப் பல நாடுகள் இந்திய தேயிலையைத் திருப்பி அனுப்பி வருகின்றன. அதுமட்டுமன்றி உள்ளூரிலும் பல நிறுவனங்கள் தேயிலைகளை திருப்பி அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அஸ்ஸாம் தேயிலைத் தோட்டம்
அஸ்ஸாம் தேயிலைத் தோட்டம்

இந்தியாவில் விற்கப்படும் அனைத்து தேயிலைகளும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டுதான் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும் பெரும்பாலான தேயிலை வாங்கும் நாடுகள் அவற்றைத் திருப்பி அனுப்புவதற்கு என்ன காரணம் என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்ஷுமான் கனோரியா தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல நாடுகள் தேயிலைக்கான நுழைவு விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுகின்றன என்று கூறியுள்ள அன்ஷுமான் கனோரியா பெரும்பாலான நாடுகள் EU தரநிலைகளின் மாறுபாடுகளைப் பின்பற்றுகின்றன என்றும், அவை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிகளைவிட மிகவும் கடுமையானவை என்றும் கூறியுள்ளார். எனவே, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்று பலர் அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார். தேயிலை என்பது ஒரு ஆரோக்கிய பானமாக கருதப்படுவதால் தரத்தில் சமரசம் இருக்கக் கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேயிலைத் தோட்டம்
தேயிலைத் தோட்டம்

இந்த நிலையில், தேயிலை வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாகத் தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், உற்பத்தியாளர்கள் தற்போதுள்ள இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் நெறிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

விதிமுறைகளை மாற்றியமைக்கும் பிரச்னை குறித்து விரைவில் ஆலோசனை செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியா கடந்த 2021-ம் ஆண்டு ரூ.5,246.89 கோடி மதிப்புள்ள தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய அரசின் ஆசை நிறைவேறுமா? பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism