Published:Updated:

தஞ்சாவூர்; இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம்... சிறப்புகள் என்ன?

தஞ்சை உணவு அருங்காட்சியகம்

இந்திய வரைபடத்தில், நாம் எந்த மாநிலத்தைத் தொட்டாலும் அம்மாநிலத்தின் பிரதான உணவுகளைத் திரையில் காணும் வகையிலான பிரத்தியேக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. உணவு அருங்காட்சியகத்தைப் பார்வையிட நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர்; இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம்... சிறப்புகள் என்ன?

இந்திய வரைபடத்தில், நாம் எந்த மாநிலத்தைத் தொட்டாலும் அம்மாநிலத்தின் பிரதான உணவுகளைத் திரையில் காணும் வகையிலான பிரத்தியேக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. உணவு அருங்காட்சியகத்தைப் பார்வையிட நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published:Updated:
தஞ்சை உணவு அருங்காட்சியகம்

தஞ்சாவூர் நிர்மலா நகரில் இந்திய உணவுக் கழகத்தின் மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதில் 13,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் உணவு தேவைக்காக வேட்டையாடியது தொடங்கி இந்தியா, எகிப்து, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் விவசாயிகள் உணவு தயாரிப்பதற்கான பொருள்களை விளைவிக்கப் பயன்படுத்தப்பட்ட உழவு கலப்பைகள், தானியங்களைப் பாதுக்காக்க அமைக்கப்பட்ட களஞ்சியங்கள், உணவைத் தாக்கும் பூச்சி வகைகள் உள்ளிட்ட பலவற்றை மெழுகு மற்றும் மரப்பொருள்களின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உணவு அருங்காட்சியகம் மாணவர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்து வருகிறது. திங்கள் முதல் சனி வரை வாரம் ஆறு நாள்களும் இயங்கும் இந்த அருங்காட்சியகம், இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை  உணவு அருங்காட்சியகம்
தஞ்சை உணவு அருங்காட்சியகம்

இங்கு பழங்காலத்தில் வேளாண்மைக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள், பல்வேறு காலங்களில், பல்வேறு நாட்டு மக்கள் பயன்படுத்திய உணவு தானிய சேமிப்பு முறைகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.‌

தஞ்சை  உணவு அருங்காட்சியகம்
தஞ்சை உணவு அருங்காட்சியகம்

விவசாயம் மற்றும் கிராமங்களின் தோற்றம் பற்றிய குறும்படம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் திரையிடப்படுகிறது. பழங்கள், உணவு தானியங்களின் நன்மைகள் மற்றும் அதன் கலோரிகள் பற்றிய தகவல்களை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திரையில் காணும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்திய வரைபடத்தில், நாம் எந்த மாநிலத்தைத் தொட்டாலும் அம்மாநிலத்தின் பிரதான உணவுகளைத் திரையில் காணும் வகையிலான பிரத்தியேக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விவசாய நிலத்தை உழுவது, பயிரிடுவது முதல் அறுவடை செய்து நெற்மணிகளை அரிசி ஆலைகளுக்கு அனுப்புவது, பின்பு அதை விற்பனைக்குக் கொண்டு வருவது வரையிலான நிகழ்வுகளை நன்கு விளக்கும் வகையிலான மினியேச்சர்களும் காட்சி படுத்தப்பட்டுள்ளன. இது போக இந்திய உணவுக் கழகத்தின்‌ தோற்றம் செயல்பாடு மற்றும் அதன் வரலாறு பற்றிய காட்சிகளும் சிறிய திரைகளில் காணமுடிகிறது.

தஞ்சை  உணவு அருங்காட்சியகம்
தஞ்சை உணவு அருங்காட்சியகம்

அருங்காட்சியகத்தில் பணிபுரியும் சையது முஸ்தபா பேசுகையில், ``உணவு அருங்காட்சியகம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விவசாயம் குறித்த புரிதலை ஏற்படுத்தும்" என்றார். மேலும் அருங்காட்சியகத்தின் மேலாளர் ஃபெட்ரிக் பேசுகையில், ``கல்லூரி மாணவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டுவதாக" தெரிவித்தார்.

தஞ்சை  உணவு அருங்காட்சியகம்
தஞ்சை உணவு அருங்காட்சியகம்

உணவு அருங்காட்சியகத்தைப் பார்வையிட நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய உணவுக் கழகத்தின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கதே. மாணவர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் உணவு அருங்காட்சியகத்துக்கு வந்து பயன்பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.