Published:Updated:

8 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் பாசனதாரர்கள் சங்க தேர்தல்; இதன் சிறப்பு என்ன தெரியுமா?

விவசாயி

விவசாயிகள் தங்கள் பகுதி விவசாயத்துக்குத் தேவையான நீரை நியாயமான பங்கீட்டில் பெறவும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தங்கள் பிரச்னைகளை சுலபமாகத் தெரிவிக்கவும், குடிமராமத்துப் பணியில் ஊழல் நடைபெறாமல் இருக்கவும் நீரைப் பயன்படுத்துவோர் சங்கத் தேர்தல் முக்கியமானது.

8 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் பாசனதாரர்கள் சங்க தேர்தல்; இதன் சிறப்பு என்ன தெரியுமா?

விவசாயிகள் தங்கள் பகுதி விவசாயத்துக்குத் தேவையான நீரை நியாயமான பங்கீட்டில் பெறவும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தங்கள் பிரச்னைகளை சுலபமாகத் தெரிவிக்கவும், குடிமராமத்துப் பணியில் ஊழல் நடைபெறாமல் இருக்கவும் நீரைப் பயன்படுத்துவோர் சங்கத் தேர்தல் முக்கியமானது.

Published:Updated:
விவசாயி

கடந்த 8 வருடங்களாக நடத்தாமல் இழுத்தடித்துக்கொண்டிருந்த நீரைப் பயன்படுத்துவோர்(பாசனதாரர்கள்) சங்கத்துக்கான தேர்தலை நடத்த தி.மு.க அரசு அறிவித்துள்ளது. நீரைப் பயன்படுத்துவோர் சங்கத்தில் பெரும்பாலும் விவசாயிகளே உறுப்பினர்களாக உள்ளனர். இதனால் பல மாவட்டங்களில் இந்த விவசாயிகளின் தேர்தல் களைகட்டி வருகிறது.

 பயன் தரும் பாசனம்!
பயன் தரும் பாசனம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரை மாவட்டத்துக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 30-ம் தேதி நடக்கவுள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் மாவட்டத்திலுள்ள 9 வட்டாட்சியர் அலுவலகங்களில் 18-ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழகத்திலுள்ள விவசாயிகள் தங்கள் விவசாயத்துக்குத் தேவையான நீரைப் பொதுப்பணித்துறைக் கட்டுப்பாட்டிலுள்ள நீர் நிலைகளில் இருந்து நியாயமான முறையில் பயன்படுத்திக் கொள்ள `தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டம்-2000' 5.3.2001-ல் தமிழக அரசு கொண்டு வந்து பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பால் 1.10.2002-ல் நடைமுறைக்கு வந்தது. அதன் மூலம் நீரைப் பயன்படுத்துவோர் சங்கம் தமிழகத்தில் சிறப்பாகச் செயல்பட்டது.

தண்ணீர்
தண்ணீர்

மூன்றடுக்கு அமைப்பில் உள்ள இந்த சங்கத்தில் நிர்வாகியாக உள்ளவர்கள், அதிகாரிகளிடம் சென்று பேசவும், விவசாயத்துக்கு தேவையான நேரத்தில் தண்ணீர் கொண்டு வரவும், பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் தண்ணீர் சென்று சேரவும் உதவி செய்வார்கள்.

கண்மாய், ஊருணி போன்றவற்றை அதிகாரிகள் தூர்வாரி மேம்படுத்தும்போது அதைக் கண்காணிப்பார்கள். முறைகேடுகள் தடுக்கப்படும். இப்படி விவசாயத்துக்கு நன்மை செய்துகொண்டிருந்த நீரைப் பயன்படுத்துவோர் சங்கத்துக்கு கடந்த 8 வருடங்களாகத் தேர்தல் நடத்தாமல் காலம் கடத்தினார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில்தான் தற்போது இச்சங்கத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நடந்து வருகிறது.

மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நீரைப் பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டி 2019-ல் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்த வழக்கறிஞர் பி.ஸ்டாலினிடம் பேசியபோது, ``விவசாயிகள் தங்கள் பகுதி விவசாயத்துக்குத் தேவையான நீரை நியாயமான பங்கீட்டில் பெறவும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தங்கள் பிரச்னைகளை சுலபமாகத் தெரிவிக்கவும், குடிமராமத்துப் பணியில் ஊழல் நடைபெறாமல் இருக்கவும் நீரைப் பயன்படுத்துவோர் சங்கத் தேர்தல் முக்கியமானது.

வழக்கறிஞர் பி.ஸ்டாலின்
வழக்கறிஞர் பி.ஸ்டாலின்

`தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டம்-2000' என்ற சட்டத்தை கடந்த 5.3.2001-ல் தமிழக அரசு கொண்டு வந்து பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பால் 1.10.2002-ல் நடைமுறைக்கு வந்தது.

தமிழகத்தில் 9 வடிநிலப் பகுதியில் நீரைப் பயன்படுத்துவோர் சங்கங்கள் செயல்பட்டு வந்தன. இச்சட்டத்தின் மூலம் நீரைப் பயன்படுத்துவோர் சங்கங்கள், பகிர்மானக் குழுக்கள், திட்டக்குழு என மூன்றடுக்காக அமைக்கப்பட்டது. ஒவ்வொரு விவசாயியும் வாக்களித்து சங்கத் தலைவரைத் தேர்வு செய்வார்கள். இந்தத் தலைவர்கள் பகிர்மானக் குழு தலைவர்களைத் தேர்வு செய்வார்கள். இதில் ஒருவர் திட்டக்குழுத் தலைவராகவும் மற்றவர்கள் திட்டக்குழு உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள். 5 வருடம் பொறுப்பில் இருப்பார்கள்.

இப்படி செயல்பட்டுக்கொண்டிருந்த நிலையில்தான் 2014-ல் இந்த சங்கக் குழுக்களுக்கு பதவிக்காலம் முடிந்தது. அப்போதைய ஆட்சியில் உடனே தேர்தல் நடத்தாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார்கள்.

ஏரி -
ஏரி -

இதனால் பல ஊர்களிலும் விவசாயிகள் நியாயமான நீர் பங்கீட்டைப் பெற முடியாமல் பல துயரங்களை அனுபவித் தார்கள். குடிமராமத்துப்பணியைத் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கம்தான் செய்திருக்க வேண்டும். ஆனால், அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அதைச் செய்தார்கள். நான் வழக்கு போட்டபோது தேர்தலை நடத்துவதாக அறிவித்த தமிழக அரசு அப்படியே அதைத் தள்ளிப்போட்டது. அதற்குப் பின் கொரோனா ஊரடங்கு காலம் வந்துவிட்டது. இந்த நிலையில்தான் இப்போதுள்ள அரசு நீரைப்பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடிய தேர்தல்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism